Wednesday, June 28, 2017

பிக்பாஸ்- ஒரு சமூக கண்ணோட்டம்

நேற்று …. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை பார்த்தேன். சிறிது நேரத்திலேயே…. அந்நிகழ்ச்சியின் மீது ஈர்ப்பு குறைந்து விட்டது.

அடுத்தவரின் தனிப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதில்…. எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. மாறாக, அடுத்தவரின் வீட்டில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசுவதை பெரிய களிப்பாக எண்ணுபவர்களுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி நிச்சயமாக ஈர்ப்பை தரும்.

மற்றவரை திட்டுவதன் மூலம், “ நான் நல்லவன்என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது முயல்வது மனித மனதின் இயல்பு. அதனை வெளிப்படையாக எடுத்து சொல்ல இயம்புகிறது இந்நிகழ்ச்சி!!!

மேலும் மற்றவரின் தனிப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதை, வாழ்க்கையை களிப்பாகவே வைத்திருக்கும் சோமபானமாக மனம் நினைக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் தீனியும்… .காலங் காலமாக கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. பழங்காலங்களில் நாட்டுபுற கதைகளில் தொடங்கி, இன்றைய நவீன சிறு கதை வரை நீளும்.

ஒலி மற்றும் ஒளி வளர்ச்சிக்கு பிறகு, திரைப்படங்களும், டிவி சீரியல்களும், அவ்வெற்றிடத்தை நிரப்பின. மேற்கண்ட அனைத்திலும் புனைவு கலந்த இருப்பதால், அடுத்த நிலையான நிஜ வாழ்க்கை பயணத்தை நோக்கி பயணப்பட்டது மனம். ” சொல்வதெல்லாம் உண்மைஎன்ற நிகழ்ச்சியின் வெற்றி, மனித மன கிலேசத்தை தெளிவாக எடுத்து சொன்னது.

தமிழுக்கு தமிழனுக்கும் கலைக்குமான தொடர்பு என்பது அளவிட முடியாதது. அக்கலை பயண அன்பில், உச்சப்பட்ச நிலையாக திரைநட்சத்திரங்கள் ஜொலிக்கின்றனர். அதனால் தான், இன்றும் வார பத்திரிக்கைகள் பெரும்பாதியை திரை நட்சத்திரங்களை வைத்தே ஒட்டி கொண்டிருக்கிறார். திரைநட்சத்திரங்களின் கிசுகிசுக்கள் அறிந்து கொள்வதும், மேற்கண்ட மனகிலெசத்தின் வெளிப்பாடே!!!!

என்னுடைய புரிதலில்… “சொல்வதெல்லாம் உண்மைநிகழ்ச்சியின் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியேபிக்பாஸ் என்று அடித்து சொல்வேன்!!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியை, யாரும் பார்க்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன்; சொல்லவும் முடியாது். மேற்கண்ட உளவியலை தெரிந்து கொண்டு பாருங்கள்!!!!

நவீன உலகம் தகவல் தொழிற்நுட்பத்தால் பிணைக்கப்பட்டுள்ள வேளையில், தகவல் தொடர்பு சாதனங்களற்று வாழ்வது என்பது சற்று கடினமானது. அப்படி வாழ்வோமானால், சுற்றத்தாருடன் பேசு வேண்டிய கட்டாயம் ஏற்படும்

அப்படி பேசும் போது…. நிச்சயமாக கோபம், வெறுப்பு, அழுகை, மகிழ்ச்சி, வெகுளித்தனம், முரட்டுத்தனம் போன்ற வெளிப்படும். இத்தகைய உணர்ச்சி குவியலை வெளிக்கொணர வைப்பதன் மூலம், பொதுஜனத்தை எளிதாக ஈர்க்க இயலும். இதுவே பிக்பாஸின் வெற்றி மந்திரம்!!!

தமிழ் ஊடகங்களில், நவீனத்துவமாக காட்டி கொள்ளும் விஜய் டிவி, உணர்ச்சிகளை வைத்தே, பல தருணங்களில் பணம் பார்க்கிறது. அதில் பிக்பாஸும் ஒரு பண களமே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment