Thursday, June 29, 2017

பிக்பாஸ் - எதிர்வினை

நேற்றைய பதிவுக்கு பிறகு…. பிக்பாஸ் பற்றிய எழுத வேண்டாம் என்று நினைந்திருந்தேன். ஆனால் காலம் விடவில்லை.

ஒரு நிகழ்ச்சியின் மீதான எந்த (நேர்மறை/எதிர்மறை) விமர்சனமாக இருந்தாலும், அது நிகழ்ச்சியின் உயிர்ப்பிற்கு வழிவகுக்குமே தவிர…… அதன் மீதான ஆர்வத்தை குறைக்காது. நம்முடைய தொடர்ந்த எதிர்மறை விமர்சனங்களால், அந்நிகழ்ச்சியிற்கு காசில்லாமல் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறோம்!!! (நானும் அதை தான் செய்கிறேன்!?!?!?)

முகநூல் மற்றும் கட்செவி வழியே வரும் தகவல்களை பார்க்கும் போது….. சில விளக்கங்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன்(?)

பிக்பாஸ் என்பது உலகம் முழுவதும் பிரபலமான நிகழ்ச்சி தொடர்!! ஷில்பா ஷெட்டியும், பிக்பாஸ் மூலமே உலகளவில் பிரபலமானவர்!!! இப்போது வட இந்தியாவை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது!!!

100 நாட்களெல்லாம் தங்க வைக்க மாட்டார் என்றும், 15 நாட்களிலே மொத்த படப்பிடிப்பையும் முடித்து விடுவார்கள் என்று சொல்வதெல்லாம் நிச்சயமாக நம்ப கூடியதாக இல்லை. 100 நாட்களும் படப்பிடிப்பு நடக்கும். நவீன தகவல் தொழிற்நுட்ப காலத்தில், 15 நாட்கள் மட்டுமே நடத்தினால், தகவல் எளிதாக கசிந்து விடும்!!!! அது சாத்தியமற்றது

மேலும்அனைவரும் ஏற்கனவே எழுதி கொடுத்த ஸ்க்ரிட் படியே நடிக்கிறார்கள் என்பது பொய் என்றே தோன்றுகிறது. சில இடங்களில் நடிக்க வைக்கப்படலாம். ஆனால் முற்றிலும் அரங்கேறும் நாடகம் என்பதில் சாத்தியமில்லை!!!

ஏன் முழுவதும் லைவ்வாக விட வேண்டியது தானே??? என்றொரு கேள்வியையும் பார்த்தேன். முழுவதும் லைவ்வாக போட்டால், ஒரு நாள் கூட நீங்கள் காண மாட்டீர்கள்!!!! அதில் சிலவை மட்டுமே சுவராசியமானவை!! அதை மட்டும் கத்தரித்து ஒளிப்பரப்பவதன் மூலம், மக்களின் ஈர்ப்பை பெற இயலும்

8 மணி நேரம் நீயா நானா படப்பிடிப்பு நடந்தாலும், ஷோ வருவது என்னவோ 40 நிமிடங்களே!!! இரண்டு மணி நேர திரைப்படங்களில் கூட, ” படம் மெதுவாக செல்கிறது. இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்என்று சொல்கிறவர்கள், 24 மணி நேரமும் ஒளிப்பரப்பினால் பார்ப்பார்களா என்ன????

திரை நட்சத்திரங்கள் 15 பேருக்கு பதிலாக , 15 விவசாயிகள் கூப்பிட்டு 100 விவசாயம் பண்ண சொல்லியிருந்தால், விவசாயிகளின் கஷ்டங்கள் புரிந்திருக்கும் என்றொரு தகவல் பார்த்தோம்!!!!

விவசாயிகளின் உண்மையான பிரச்சனையை புரிந்தவர்கள் எத்தனை பேர்??? விவசாய பிரச்சனைகளை பற்றிய போராட்டம் நடந்தால் கூட, கண்டு கொள்ளாதவர்கள் நம்மவர்கள்!!! அப்படி இருக்கும் போது, விவசாயம் செய்தால் மட்டும், நாம் பார்த்து விட்டு அஹா!!! ஒஹோ!! என்று புகழ் பாடுவமோ என்ன!?!? நிச்சயமாக கிடையாது!!!

முகநூலிலும் விவாத களங்களிலும் வீர வசனம் பேசுபவர்களில், எத்தனை பேர் விவசாய அனுபவம் உண்டு ?!?!?!?

விஜய் டிவி என்பது பொழுது போக்கு சேனல்!! அப்படியிருக்கையில் மக்களுக்கு சுவரசியம் தரக்கூடிய, உணர்ச்சி பெருக்கை ஏற்படுத்த கூடிய நிகழ்ச்சியையே வழங்க முயற்சிக்கும்!!! அந்த வகையில் பிக்பாஸும் ஒன்றே!!! விஜய் டிவியும் ஒருவகையில் வியாபார நிறுவனமே!! அது பணம் சாம்பதிக்க தான் முயற்சிக்கும்!!! அதை சமூக நல முன்னேற்றம் இயங்க வேண்டும் என்று எண்ணுவது எவ்வகையில் நியாயமே!!!

உண்மையில் சமூக அக்கறையோடு இயங்க வேண்டியவர்களே, சமூக நலனை பற்றி கவலைப்படாமல் இருக்கும் போது, பண முதலாளிகளிடம் மட்டும் எதிர்ப்பார்த்தல் எவ்வகையில் நியாயமே!?!?!?

நாம் அனைவரும் எதோ ஒரு தொழிலை செய்து கொண்டிருக்கிறோம்!!! நம்மிடம் வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து, எவ்வகையில் பணம் சம்பாதிக்கலாம் என்று தான் யோசித்து கொண்டிருக்கிறோம்!!!! அதில் வாடிக்கையாளர்களின் நலனை பற்றி பெரிதாக சிந்தித்துகிறோமா??? அப்படி இயங்கினால், தலை வணங்குகிறோம்!!!

நம்மிடம் இல்லாத குணத்தை, பண முதலையான விஜய் டிவி மட்டும் எதிர்பார்த்தல் எத்தகைய மனநிலையோ!?!?!?

நம்மிடம் உள்ள குறையை மறைக்க, மற்றவரினை குற்றவாளியாக மாற்றி, அவரை தேச துரோகியாக கண்பிக்க முயற்சிக்கிறோம்!!! நாம் பொதுநலவாதியாக இருந்தால், மற்ற சுயநலவாதிகள் மீது கேட்டு கேட்கலாம்!!! ஆனால் நாமே ………………………!?!?!?

ஏமாற்றும் நிகழ்வில், எமாற்றுக்காரனை போலவே ஏமாற்றுப்படுவனின் ஏமாளித்தனம் முக்கியமானதே!!! ஏமாற்றுக்காரனை மட்டும் குற்றவாளியாகவும், ஏமாற்றப்படுவனின் ஏமாளித்தனத்தை புனித பட்டம் மட்டும் ஏனோ!?!?!? புரியவில்லை!?!?!?!?

#பின்குறிப்பு - மேற்கண்ட அனைத்தையும் படித்தவுடன்நான் விஜய் டிவியை ஆதரிப்பதாக நினைத்தால் நான் பொறுப்பாக முடியாது; நம்மை நோக்கிய பற்றிய சுயப்பரிசோதனை குறித்த கேள்வி கணைகளின் தொகுப்பே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment