GST
இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்திய வரி அமைப்பில் மிகப்பெரிய சீர்த்திருத்தம் என்பேன்!!!!
வாட்
வரி விதிப்பு போல், ஜிஎஸ்டி யும் முக்கிய வரி சீர்த்திருத்தம் என்பேன்!!!
பொருளாதாரத்தை
பற்றிய சிற்றறிவு உள்ளவன் என்ற அடிப்படையிலே சொல்கிறேன்!!! எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும்,
GST என்பது காலத்தின் கட்டாயம்!! ஏற்கனவே பல நாடுகளிலும், அமல்படுத்தப்பட்ட நிலையில்,
இந்தியா இப்போது தான் அமல்படுத்துகிறது.
GST
என்றாலே வரி குறையும்.... விலை குறையும் என்றெல்லாம் சொல்ல இயலாது!!! சில பொருட்கள்
விலை குறையும்!! சில பொருட்கள் விலை அதிகமாகும்!!!
சில
நாடுகள் GST யில் ஒரே வரி விகிதத்தை கொண்டிருந்தது!!! அது போல், இந்தியாவும் ஒரே வரி
விகிதத்தையே கொண்டு வர ஆலோசித்தது. ஆனால் சில அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகப்படியான
விறக வேண்டிய அவசியம் வரும் என்பதால், பல வரிவிகித முறையை கொண்டு வந்தனர்.
எடுத்து
கட்டாக, நீங்கள் ஒரு ஒட்டலுக்கு உணவருந்த செல்ல விரும்புகீறிர்கள் என்று வைத்து கொள்வோம்!!!
நம்முடைய பொருளாதார நிலையை வைத்து, என்ன ஒட்டலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்வோம்!!!
அதனால், ஒட்டலின் தரத்தை வைத்து இரு வகையான வரி விகிதங்களை நிர்ணயம் செய்துள்ளனர்.
அதை விடுத்து, பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு செல்பவர்களுக்கும், சாதாரண ஹோட்டலுக்கு செல்பவர்களுக்கும்
ஒரே வரியை விகிதத்தால் நீங்கள் ஒத்து கொள்வீர்களா???
மேலும்
பல முன்னேறிய நாடுகளினை ஒப்பிட்டு சில தகவல்களை பார்த்தேன்!!! முன்னேறிய நாடுகளில்
நேர்முக வரிகள் தான் அதிகம்!!! ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மறைமுக வரிகள்
மூலமாக அதிகமாக வசுலிக்க முடியும்!!!! வேறு வழியில்லை!!!
நான்
ஏன் வரி கட்ட வேண்டும் என்று கேட்பவர்கள் அதிகம். வரியை பெறாமல் நாட்டை வழிநடத்த முடியாது
என்ற உண்மையை உணர மறுப்பவர்கள்!!! இந்தியாவில் வருமான வரியை உண்மையாக செலுத்துபவர்கள்
எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை, சுய கேள்வி கேட்டு கொள்ள வேண்டும்.
GST
வரியினால் உண்மையிலே நல்லதா?? கெட்டதா? என்பது முழுமையாக எனக்கு தெரியாது . வரி விதிப்பில்
உள்ள நடைமுறை சிக்கல்கள், அதனை வசுலிப்பதில் உள்ள சிக்கல்களின் அடிப்படையில், GST வரி
முக்கியமான சீர்த்திருத்தமே!!!!
உங்களில்
ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை
குமார்
No comments:
Post a Comment