Monday, July 10, 2017

விவசாய பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலையேற்றம்


புதிய தலைமுறை இதழை திருப்பி கொண்டிருந்தேன். தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர், அய்யாக்கண்ணுவின் பேட்டியை படித்தேன்.

அது பின்வருமாறு, ///// 1970 ஆம் ஆண்டு ஒரு டன் கரும்பு 90 ரூபாய்; அப்போது வாத்தியார் சம்பளம் 90 ரூபாய் தான். ஆனால், இப்போது வாத்தியாரின் சம்பளம் 36,000 ரூபாய்; அதாவது 400 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு டன் கருமபு 2500 ரூபாயே!!! 25 மடங்கு தான் உயர்ந்திருக்கிறது.
அன்று நெல் விலை 40 ரூபாய், வங்கி ஊழியர் சம்பளம் 150 ரூபாய் ; இன்று நெல் 900 ரூபாய், ஆனால் இன்று வங்கி அதிகாரியின் சம்பளம் 60,000 ரூபாய். இது போல் அனைத்து தரப்பினரின் வருமானமும் உயர்ந்துள்ளது./////// தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட கூற்றை கவனிக்கும் போது, தகவலின் உண்மை தன்மையை தாண்டி, விவசாயத்தினை தாண்டிய மற்றைய துறைகளில் குறிப்பிட்ட தக்க அளவு பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை ஏறியிருக்கிறது. மாறாக, விவசாய பொருட்கள் மற்றும் விவசாய கூலிகளின் மதிப்பு ஏறியதாக தெரியவில்லை.

என்னுடைய கேள்வி, அதனை தாண்டி நிற்கிறது.??

பொதுவாக விலைவாசி உயர்வை/ பணவீக்கத்தை மதிப்பிட, நுகர்வோர் விலை குறியீட்டு எண்(CPI) மற்றும் மொத்த விலை குறியீட்டு எண்(WPI) ஆகிய இரண்டும் பயன்படுகிறது. இதில் நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை கொண்டு, அரசு ஊழியர்களுக்கான அகவிலை படியும், ஊதிய உயர்வும் அளிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, தனியார் ஊழியர்களுக்கு சம்பளமும் ஏற்றப்படுகிறது.. மேலும், பொருட்களின் விலை ஏற்றப்படுகிறது.

சுமார் 200 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் அடிப்படையில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது. வருட வருடம் பணவீக்கம் அதிகமாகி வரும் நிலையில், நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணும் அதிகமாகி வருகிறது. ஆனால், அதிலுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை...... உயர்ந்துள்ள பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்ந்ததாக தெரியவில்லை.

மேலும்….. demand-supply மாறுபாடு ஏற்படும் போது, பல சமயங்களில் உணவு பொருட்கள் ஏறியதாய் காண்கிறேன். ஆனாலும், அந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு கிடைப்பதாக தெரியவில்லை. அவை பெரும்பாலும் இடைத்தரகர்களுக்கே போய் விடுகிறது.

விலைவாசி ஏறிக்கிட்டு போய்கிட்டு இருக்கு, அரசாங்கம் விலைவாசி/பணவீக்கத்தை கட்டுப்படுத்தவில்லை என்று பொதுமக்களின் கருத்தாக இருக்கும். அதாவது நுகர்வோர் விலை
குறியீட்டு எண்ணில் உள்ள பொருட்கள் விலை ஏறக்கூடாது. ஆனால் அதை வைத்து கணக்கீட்டு பெறப்படும் ஊதியம் மட்டும் உயர வேண்டும். விலைவாசியும் ஏற கூடாது; ஊதியமும் உயர வேண்டும். ஏன் இந்த இரட்டை மனநிலை!!!

நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஏறிக்கொண்டே போகும் போது, அதிலுள்ள அனைத்தும் நுகர்வு பொருட்களுமே சராசரியாக விலை உயர வேண்டும். ஆனால், சிலவற்றின் விலை மட்டும் அதிகமாக உயருகிறது. சிலவற்றின் விலை அதிகமாக உயருவதில்லை!!! அதில் ஒன்று தான் விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய உணவு பொருட்கள்!!!!

ஒட்டு மொத்த சமுதாயமே….. விவசாய பொருட்களை விலை ஏறாமலே, நம்முடைய சம்பளம் மட்டும் ஏற வேண்டும் என்று நினைப்பதாக உணர்கிறேன்!!!!!

அரிசி வாங்கும் போதும், காய்கறிகள் வாங்கும் போதும், ஏன்னது இவ்வளவு விலை ஏறி போச்சா என்று கேள்வி கேட்கும் நாம்….. நம் சார்ந்த துறைக்கு மக்கள் நாடி வரும் போது, விலைவாசி ஏறி போச்சுல்ல என்று எளிதாக பதில் சொல்லி விடுவோம்!!!

விலைவாசி அனைத்து துறைகளிலும், பொதுவாக ஏறினால் பரவாயில்லை!!! ஆனால் முதன்மை துறையில் பெரிதாக ஏற்றம் பெற்றதாக தெரியவில்லை!!! மாறாக சேவை துறையில் பெரியளவு மாற்றத்தை காண முடிகிறது. காரணம் தான் கடைசி வரை தெரிய மாட்டங்குது!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment