வாழ்க்கை
சார்ந்த புரிதலில், ஆயிரம் குழப்பங்கள் இருக்கும்
போது, சிந்தனை திறனிலும் குழப்பங்கள்
பல!!! சரியான புரிதலில் சிந்திக்கிறோனா
என்பதே குழப்பமாகி விடுகிறது. (இப்ப நீ என்ன
சொல்ல வர்ற என்று நீங்கள்
நினைப்பது புரிகிறது)
நமது சிந்தனை திறனின் பரப்பெல்லை,
குறுகியதா அல்லது திறந்த மனந்தோடு
பெரியதா?? என்பதும், அதில் நம்முடைய துறை
சார்ந்த அறிவு ஏற்படுத்தும் தாக்கம்
என்ன?? என்பதை பற்றியது; “ ஆற்றில்
ஒரு கால், சேற்றில் ஒரு
கால் “ எனபது போல் இருக்கிறேனா???
(இன்னும் தலையை சுத்துகிறதா)
நான் சார்ந்த சித்த மருத்துவ
துறையை எடுத்து கொள்வோம். எனக்கு
சித்த மருத்துவம் சார்ந்த நம்பிக்கையும் இருக்க
வேண்டும்., அதுபோல் சித்த மருத்துவத்தின்
மீதான விமர்சனத்தையும் ஏற்று கொள்ள கூடிய
மனநிலையும் வேண்டும்.
இல்லையென்றால்,
சித்த மருத்துவத்தின் வளர்ச்சியை குறித்து சிந்திக்க இயலாது.
மாறாக,
சித்த மருத்துவத்தின் மீதான கண்மூடத்தமான நம்பிக்கைகள்
இருக்குமானால், என்னுடைய சிந்தனை பரப்பெல்லை என்பது
குறுகியதாக மாறி விடுமோ என்று
எண்ணுகிறேன் . பொது சமூகத்தின் விமர்சனங்களை
மறுக்க ஆரம்பித்து விடுமோ என்ற பயமும்
இருக்கிறது.
அவ்வாறு
சித்த மருத்துவத்தின் நம்பிக்கை மீதான எல்லையை, நான்
சரியாக வரையறுக்க முடிகிறதா??? அல்லது தவறான முறையில்
சிந்திக்கிறேனா??? என்ற கேள்வி எழுகிறது.
ஒவ்வொரு
துறையில் சிறந்து விளங்கும், பல
மனிதர்களினை சந்தித்து இருக்கிறேன். அவர்களால், அத்துறையை தாண்டி சிந்திக்க முடியவில்லை.
அத்துறையின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையும்,
அதன் மீதான பற்று/காதலும்
அதிகமாகி விடுகிறது. ஆகையால், அத்துறையில் படிக்கின்ற/புரிந்து கொள்கின்ற அனைத்தும் உண்மை என்பது போல்,
நம்மையறியால் நாமே புரிந்து கொள்கிறேன்
ஒருவர்
ஜோதிட துறையில் விற்பன்னர் என்று வைத்து கொள்வோம்.
அத்துறையை தாண்டி, அறிவியல் சார்ந்த
வளர்ச்சியினை உள்வாங்கி கொள்ளாமல் , அறிவியல் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்துவார்.
மாறாக, ஜோதிடத்தின் எல்லைகளை தெரிந்து கொண்டு, அத்துறையின் மீதான
விமர்சனத்தை பரிபூர்ணமாக ஏற்று கொள்ள கூடிய
மனநிலை வேண்டும்.
அறிவின்
எல்லைகளை குறுக்காமல், திறந்த மனநிலையோடு இருக்க
வேண்டும். மேலும் அறிவியல் மீதான
நம்பிக்கை இருக்க வேண்டும். இத்தகைய
புரிதல் என்பது பெரிய ஜோதிடர்களுக்கு
இருப்பதாக தெரியவில்லை.( இருந்தால், மிக்க மகிழ்ச்சியே!!!!)
துறையின்
மீதான நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கு இடையேயான மெல்லைய கோட்டினை அடையாளம்
காண முடியவில்லை. மேற்கண்ட அனைத்திலும், ஒரு வித ” ரெண்டு
கெட்டான் “ மனநிலையோடு இருக்க வேண்டியுள்ளது. அதாவது
ஆற்றில் ஒரு கால், சேற்றில்
ஒரு கால் “ எனபது போல்
இருக்கிறேனா??? என்று தோன்றுகிறது.
இவ்வாறாக,
ரெண்டு கெட்டான் மனநிலையோடு இருக்கும் போது மட்டுமே, பல்துறை
சார்ந்த அறிவும் பெற முடிகிறது.
பொது ஜனங்களின் விமர்சனங்களை ஏற்று கொள்ள முடிகிறது;
மேலும் பல்துறை சார்ந்த அறிவின்
பரப்பல்லையும் அதிகரிக்க முடிகிறது. எதாவது ஒரு துறையிலும்
ஆழ்ந்த புரிதலையும் அடைய முடியவில்லை.
இது சரியா என்று அடையாளப்படுத்த
முடியவில்லை; அதே சமயத்தில் முற்றிலும்
தவறு என்று சொல்லவும் இயலவில்லை.
எதுவும் புரிதலற்ற மனநிலையொடு கடக்கிறேன்.
உங்களில்
ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை
குமார்
No comments:
Post a Comment