Tuesday, August 1, 2017

மன நிம்மதி்யும் சமூக புரிதலும்


” பணம், பொருள், புகழ் ஆகியவற்றை பெற்று வாழ்வதே, சிறப்பான வாழ்வு ” என்பது பலரது வாதம். ஆனால், மனநிறைவு என்றொரு வாதத்தை வைத்து கொண்டு, நம்மளை நாமே ஏமாற்றி கொண்டிருக்கிறோம். சாம்பதிக்க தெரியாமல் இருப்பவர், புகழ்ச்சியை பெற இயலாதவர்கள், பொருள் பெற தெரியாமல் இருப்பவர்களே, மனநிம்மதி என்றொரு வாதத்தை வைத்து கொண்டு, சாமளித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் அவர்களது புரிதலாக உள்ளது.

பணம்,. பொருள், புகழ் ஆகியவை அனைத்தும் தேவையான அளவு இருந்தால் போதும்!!!! மேற்கண்ட அனைத்தையும் மனதே நிர்ணயம் செய்யப்பட வேண்டும். புறசூழ்நிலையால் நிர்ணயம் செய்யும் போது, இன்னும் அதிகமாக சாம்பதிக்க வேண்டும் என்று எண்ணமே மேலோங்கிறது; சமகால வாழ்வை இழந்து கொண்டு இருக்கிறோம்!!!

மேற்கண்ட இரு வாதங்கள், சமூகத்தில் வாழும் மனிதர்கள் முன்னிறுத்தப்படுவது!!! இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை; அதே சமயத்தில், இரண்டும் முழு சரியென்றும், முழுமையாக தவறென்றும் கருத இயலாது; உண்மை என்பது இரண்டிற்கு இடையில் ஊசலாடி கொண்டிருக்கிறது.

பணம், புகழ், பொருள் ஆகியவற்றை பெறுவதும் அவசியம்; அதற்காக முழுமையாக அதற்காகவே வாழ்வது அபத்தம். நிகழ்காலத்தை தொலைத்து விட்டு, எதிர்காலத்தை எண்ணியே வாழ்வை கழித்து விடுகிறோம். அதே சமயத்தில் போதுமென்ற மனநிலையில் இருப்பவர்கள், தன்னம்பிக்கை அற்றவர்களாக, வாழ்க்கையில் அதீத பயம் நிறைந்தவர்களாக இருக்கின்றார். இரண்டிற்கு மையப்புள்ளியை கண்டறிவது மிக கடினம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment