Monday, August 14, 2017

பப்பாளி மரமும் முதுமை நிலையும்


காலையிலே கண் விழித்து வானத்தை நிமிர்ந்து பார்க்கையில், கரும் மேகம் சூழ, அழகாய் காட்சியளித்தது!!! சற்று தலை தாழ்த்தி, பூமியை நோக்கி வருகையில், ஒரு பப்பாளி மரத்தின் முதுமை காட்சி சற்று கவலை கொள்ள வைத்தது!!!

சுமார் 30 அடி உயரமுள்ள பப்பாளி மரத்தின் நுனி கொழுந்து காய்ந்த நிலையில், மற்ற இலைகள் காய்ந்து சறுகாக இருந்தது. சுமார் 200-400 பழங்களை எங்களுக்கு கொடுத்திருக்கும்!!! பழங்களின் காம்புகள் பறித்த தண்டுகள் கூட, காயம் பதிந்த மனித உடலாக தெரிந்தது!!! இக்காட்சியெல்லாம், வீட்டு திண்ணையில் காலனுக்கு காத்திருக்கும் பாட்டியின் வேதனையை ஒத்ததாக தெரிந்தது!!!

சுமார் 4-5 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்தாலும், அதனுடைய வலுவினை தாண்டி, எத்தனை பழங்களை மனிதர்களுக்கு வழங்கி விட்டு, எதிர்காலம் தழைக்க பல ஆயிரம் விதைக்களை கூட தந்து, சில பப்பாளி கன்றுகளை கூட , தன்னுடைய வேரடியில் முளைக்க வைத்திருக்கிறது!!!

தன் பிள்ளைகளுக்காக, ஆயிரமாயிரம் தியாங்களை செய்து, நடக்கவொட்டா வயதில் கூட, வேப்பங்காய் பொறுக்கி பேரங்களுக்கு பிஸ்கட்டை வாங்கி தந்தாலும், உறையாடுவதற்கு வழியில்லாமலும் விரும்பிய உணவுகளுக்கு வழியில்லாமலும், காலனை விழி வைத்து காத்திருக்கும் பாட்டிகளை, முதிர்ந்த பப்பாளி மரத்தின் முதுநிலைக்கு ஒப்பிடுதல் தவறில்லை!!!

சுயநலம் நிறைந்த மக்கள் வாழும் பூமியில், பொதுமக்களுக்கு நலமாய் வாழ்ந்த பப்பாளி மரத்தின் இறப்பு நிலைக்கு வருந்துவதில் தவறில்லை!!! மனம் வெம்பி கண்ணீர் சிந்துவதில் பிழையில்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment