Friday, August 25, 2017

விநாயகரும் சில குழப்பங்களும்


சில மாற்றங்களை புரிந்து கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளது. அதில் ஒன்று தான், விநாயக சதுர்த்தி சார்ந்த கலாச்சர மாற்றம் !!!

சுமார் 7-8 நூற்றண்டில் ஆட்சி செய்த பல்லவ மன்னனின் தளபதியாக இருந்த பரஞ்சோதி முனிவர் ,சாளுக்கிய மன்னனிடமிருந்து தென்தமிழகத்திற்கு விநாயகர் வழிபாட்டை கொண்டுவந்தார் என்பது வரலாற்று செய்தி!!!

அதே சமயத்தில், பிள்ளையார்பட்டியின் தல வரலாற்றை எடுத்து , மேற்கண்ட வரலாற்று செய்தியோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, சில ,முரணாக தகவல்களே வருகின்றன!!!

பிள்ளையார்பட்டி கோவில் அமைப்பு முறை என்பது குடைவரை கோவில் வகையை சார்ந்தது!!! மேலும் கல்வெட்டு ஆய்வுகளின் படி, மேற்கண்ட பரஞ்சோதி முனிவர் கொண்டுவருவதற்கு முன்னரே, விநாயகர் வழிபாடு இருந்ததாக கூறப்படுகிறது!!!

சிவனின் இரு புதல்வர்களாக இருக்கும் முருகன் மற்றும் விநாயகர் ஆகியோரில், முருகன் சார்ந்த வழிபாடு, தமிழகத்தில் பற்றற்று அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. அந்த அளவிற்கு விநாயகர் வழிபாட்டு முறை என்பது சற்று குறைவே!!! அதில் சிறியளவு மாற்றமும் நடைபெறுகிறது!!! முருகன் தமிழ் கடவுளாகவே அனைத்தும் இடங்களில் புரிந்து கொள்ளப்படுகிறது.

மேலும் நூல்களின் கடவுள் வாழ்த்தும், ஹோமங்களின் விநாயக வழிபாடுகள் பரவி காணப்படுவதும் முரண்பாட்டின் எச்சமாகவே தெரிகிறது !!!

வரலாற்றை புரட்டி பார்க்கையில், பல குழப்பங்கள் இருக்கையால், சம கால நிகழ்வை மட்டும், ஒப்பிட்டு பார்க்கும் போது, சில கலாச்சார மாற்றங்கள் நீக்கமற நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலலாம்.

எனக்கு தெரிந்த வரை………. கடந்த பத்து வருடங்களை ஒப்பிடும் போது, விநாயக சதுர்த்தி சார்ந்த கொண்ட்டாட்டங்கள் அதிகமாகி வருகிறது என்பது நிதர்சனம்!!! இத்தகைய மாறுதலை, நல்லதாக எடுத்து கொள்வதா?? அல்லது கெட்டதாக எடுத்து கொள்வதா?? என்றும் புரியவில்லை!!!!!

தற்போது பின்பற்றப்படும் பல்வேறு தெய்வம் சார்ந்த சடங்குகளில், மற்றைய சமூகத்திடமிருந்து பெற்றவைகளே ஏராளம்!!! இவ்வாறாக சமூகம் உள்வாங்குவதை சரியா தவறா என்ற புரிதல் கூட, காலத்தினால் மட்டுமே தீரமானிக்கப்படும்.

இத்தகைய மாற்றங்களை, மதம் சார்ந்து மட்டும் புரிந்து கொள்வதில்லை எனக்கு உடன்பாடில்லை!!! நவீன பொருளாதார விழிமியங்களையும் இணைத்தே பார்க்க வேண்டும் !!!!
கொண்ட்டாட்டங்கள் சார்ந்த மனநிலை உள்ள மக்களை, நவீன பொருளாதார கூறுகள் எளிதாக உள்வாங்கி கொண்டுள்ளது என்பேன்!!!

திராவிட மண்ணில்………… மதம் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த இத்தைகைய மாற்றங்களை நல்லவையா/கெட்டவையா என்பதை காலத்தின் பிடியிலே விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பதே, கலாச்சாரத்தை முழுமையாக உள்வாங்கியவனின் புரிதலாக இருக்கும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment