சமீபத்தில்
படித்த இரு நூல்கள், சீனா
தேசத்தை பற்றியவை!! ஒன்று சுபஸ்ரீ மோகன்
எழுதிய சீனா அண்ணன் தேசம்.
மற்றொன்று சின்ரன் எழுதிய சீனா
பெண்களின் சொல்லப்படாத கதை.
இரண்டும்
நாணயத்தின் இரு பக்கங்களை போல்,
நேர் எதிரான இரு பக்கங்களை
சொல்ல கூடியது. ஒன்றும் சீனாவின் பெருமைகளையும்,
மற்றொன்று சீனா பெண்களின் சொல்லான
துயர பக்கங்களை கூறுவது!!!
சுபஸ்ரீ
மோகன் அவர்கள், தன்னுடைய கணவனுடன் வேலை நிமித்தமாக சீனாவில்
நிரந்தமாக தங்கும் போது, அவர்
கண்ட விஷயங்களை எடுத்தியம்புகிறார். அதை படிக்கும் போது,
நம் மனதில் உள்ள சீனா
பிம்பத்தை எளிதாக உடைக்கிறார்.
பண்பாடு
சார்ந்த நிறைய விஷயங்கள், தொடர்ந்து
கடைபிடிக்கப்படுவது, நமக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே
உள்ளது. பல இடங்களில், மூடநம்பிக்கையை
விட்டு வெளிவராதது ஆச்சரியமே!!!
முதியோர்களுக்கு
மரியாதையும், மக்களின் நேர்மை தன்மையும், ஒழுங்கும்
இன்னும் இருப்பது முக்கியமாக கற்று கொள்ள வேண்டிய
விஷயம்!!!
உலக நாடுகளின் பார்வையில், சீனா இன்னும் இரும்பு
நாடாக காட்சியளிக்கிறது. அங்கு நடக்கும் பல்வேறு
நிகழ்வு எளிதாக மறைக்கப்படுகிறது. ஊடக
சுதந்திரம் அரசின் கட்டுபாட்டில் தான்
இயங்குகிறது. அதனை தாண்டிய, சீனாவின்
வளர்ச்சி வியக்கும் அளவிற்கு உள்ளது.
பொதுவுடமை
கொள்கையை ஏற்று கொண்டு செயல்படும்
நாடாக இருந்தாலும், கால ஒட்டத்திற்கு ஏற்ப
உலகமாயமாக்கலையும் உள்வாங்கி கொண்டுள்ளது. அவ்வளர்ச்சி தொழிற்துறை மற்றும் விவசாய துறையை
மட்டுமே முன்னிறுத்தியது!!! இப்போதும் தான் சேவை துறையில்
காலடி எடுத்து வைக்கிறது.
சீனா வானொலி ஒன்றில், பணிபுரியும்
சின்ரனின் அனுபவங்கள் முற்றிலும் வேறுமாறானவை!!! இந்த புத்தகம் வெளிவந்த
போது, அரசின் அடக்குமுறைகளால், சீனாவினை
விட்டு வெளியேறி, லண்டனில் தஞ்சமடைந்தார்.
அவருடைய
வானொலி நிகழ்ச்சிக்காக, சுமார் 10 ஆண்டுகள் பயணம் செய்து, பெண்களின்
நிலைமை படம் பிடித்து காட்டுகிறது.
பெரும்பாலான இடங்களில், நம் மனம் வெம்பி
கண்ணீர் சிந்துவதை தடுக்க முடியவில்லை!!!
பொதுவுடைமை
கொள்கை என்ற பெயரில் நடக்கும்
அநியாயங்களை, தோலுரித்து காட்டுகிறார். முழுமையான அடக்குமுறை குறித்த தகவல் இல்லையென்றாலும்,
பல இடங்களில், அத்தகைய அடக்கு முறையை
பற்றி தொட்டு செல்கிறார்.
ஆணாதிக்க
மனநிலை உலகமெங்கும் ஒரே மாதிரி தான்
உள்ளது!!! பெண்கள் படும் கஷ்டங்களுக்கு
எல்லையில்லை போலும்!!! பாலியல் வன்முறை, பெண்
சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என பெண்களின் துன்ப
எல்லைகளை கடந்து சென்றிருக்கிறார்.
மேற்கண்ட
இரு நூல்களை படித்து முடித்த
பின்னர், சீனாவின் வளர்ச்சியை குறித்து, அதன் அரசியல், சமூக,
மற்றும் பொருளாதார பிண்ணனியை தெரிந்து கொள்ள ஆர்வம் வந்து
விட்டது!!! சீனா சிவப்பு தேசம்
என்ற புத்தகம் உள்ளது!!! இதை தாண்டி, சீனா
தேசத்தை புத்தகம் இருந்தால் கூறுங்கள் நண்பர்களே!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:
Post a Comment