Thursday, July 31, 2014

சற்று யோசிங்கள்

நான் எப்போதும், அந்த மளிகை கடையை கடந்த செல்வது வழக்கமான நிகழ்வு. கடையின் வாசலில் தொங்கும் lays, kurkure, cruncho போன்ற சிப்ஸ் (நொறுக்கு தீனி பண்டங்கள்) எப்போதவது பார்த்து செல்வதும் உண்டு. ஆனால், அதை வாங்கி உட்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதில்லை.

இன்று, சற்றும் யோசிக்காமல், வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்தேன். ரொம்ப சுவையானது, ரொம்ப கிரிப்ஸியானது என்று டிவியில் கூட நிறைய விளம்பரம் வருகிறதே என்று நினைத்து கொண்டு, ”ஒன்றின் விலை எவ்வளவு?..” என்று கேட்டேன். ஐந்து ரூபாய்…” என்றார் கடைக்காரர். ”Lays இருக்கா?...” என்றேன். இல்ல…. kurkure, cruncho தான் இருக்கு…” என்றார் கடைக்காரர். அதுக்குள்ள காலி ஆகிடச்சா….என்று மனதில் நினைத்து கொண்டே, “அப்போ… cruncho கொடுங்க…” என்றேன். ஒன்று வாங்கின அசிங்க நினைப்பாங்கன்னு, இரண்டு பாக்கெட்டுகளை வாங்கி, பேக்கில் போட்டு கொண்டேன்.

வீட்டிற்கு வந்து, ஆசையோடு cruncho பாக்கெட்டை பிரித்தேன். பிரித்தவுடன், ”நான் அடிப்படியே ஷாக் ஆயிட்டேன்என்ற வடிவேல் டயலாக் மட்டும் தான் பாக்கி…… அந்தளவுக்கு அதிர்ச்சி…..  உள்ளே 4-5 பிஸ் சிப்ஸ் மட்டும் இருந்தது. (கவர்ல photo ல இருக்குற அளவுக்கு தான் சிப்ஸ் இருந்தது). சரி…..இந்த பார்க்கெட்ல ஏதோ குறைச்சி போட்டு இருங்காங்கன்னு நினைச்சிட்டுஅடுத்த பாக்கெட்டை பிரித்து பார்க்க…. அதே மாதிரி இருந்ததுசரி..பின்னாடி எத்தனை கிராம் இருக்குன்னு பார்த்த…. 13 கிராம் ன்னு போட்டு இருக்காங்க. 13 கிராம் சிப்ஸை, 5 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு இருக்கோம், கம்பெனி மக்களை எப்படியெல்லாம் ஏமாத்திட்டு இருக்குன்னுஅப்போ தான் தெரிஞ்சுது….”

அதே சிப்ஸை …..வாழைக்காய் வாங்கிட்டு வந்து, நம்மலே தயார் பண்ணுண1 கிலோவே 200-300 ரூபாயை தண்டாது…. கம்பெனிக்கு ஒரு பாக்கெட் தயார் செய்ய குறைந்த பட்சம் 1 ரூபாயை தாண்டாது. அப்படியென்றால், அதிகபட்சமாக விற்பதற்கு காரணம் என்ன?? ஒன்று, வியாபார நோக்கம்இலாபத்தை அதிகப்படுத்த வேண்டும். மற்றொன்று, அதனை விளம்பரப் படுத்த வேண்டிய செலவு.

அதிலும், lays, kurkure, cruncho போன்ற சிப்ஸ் வகைகள் உடலுக்கு சுகாதாரமானதா என்று கேட்டால், அதுவும் கேள்வி குறி தான். kurkure, பற்றி நியூஸ் முக நூலில் வெளி வந்து கொண்டு இருக்கிறது. Kurkure வை எரித்தால், சரியாக எரியவில்லை, அதனால் உடலுக்கு நல்லதல்ல என்கின்றனர் பலர். அந்த விவாத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை.

இந்த சிப்ஸ் கம்பெனிகள், பெரும்பாலும் குழந்தைகளை குறி வைத்தே விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளிடம், சிப்ஸ் கம்பெனியின் பிராண்ட்டை எடுத்து சென்று விட்டால், அதை விற்பனை செய்வது எளிது. குழந்தைகள் அடம் பிடித்து, எப்படியாவது வாங்கி தின்று விடுவார்கள். 

விளம்பரகளின் கவர்ச்சி தன்மையும், சச்சினும், சூர்யாவும் வந்து சொல்லி விட்டால், அந்த பொருள், நல்ல பொருளாக மாறி விடும் என்ற  மனநிலையும், பொது மக்களிடம் இருக்கும் வரை, கம்பெனிகளை குறை சொல்வதில் பயனில்லை. 

5 ரூபாய் பொருளுக்கு, இவ்வளவு அக்கப்போராஎன்று நீங்கள் நினைக்கலாம். இது 5 ரூபாய் தானே……” என்று மக்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை. இந்த 5 ரூபாய் பொருள் மட்டுமல்ல... 500 ரூபாய் பொருள் வரையிலும், ஏதோ ஒரு வகையில் ஏமாற்ற பட்டு கொண்டிருக்கிறோம். இந்த 5 ரூபாய், உங்களுக்கு சும்மா யாரும் தருவதில்லைஉங்களுடைய உழைப்பின் வெகுமானம்.

மக்களை ஏமாற்றுவது தான், இன்றைய மார்க்கெட்டின் தராக மந்திரமாக மாறி உள்ளது தான் வேதனை. பொருளை வாங்க வேண்டாம் என்று சொல்லவில்லைஅவ்வாறு வாங்கும் போது.. நாம் கொடுக்கும் பணத்திற்கு, தகுந்த வெகுமானம், அந்த பொருளிற்கு உள்ளதா? அந்த பொருளினால் நமக்கு உபயோகமாக உள்ளதா? என்று சற்று யோசிங்கள்….  

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


என்ன அது???

மரண தருவாயில் உள்ள மனிதனின் மனதுக்குள்ளே நடக்கும் உரையாடல் இது. இறைவனிடம் சேர்பிக்க, எமனின் பாச கயிறும் தயாராக இருக்கிறது
கடவுள் நீ நல்லவன் தான்!!! ரொம்ப நல்லவன் தான் நீ!! நான் என்ன கேட்டாலும், அதை எனக்கு தந்திருக்கிறாய். அதனால், நீ ரொம்ப நல்லவன்.

நான் பிறந்த போது, தாயின் பாலை எனக்கு அளித்து, நல்லுடலை அளித்தவன் நீ!!!! இப்போது உள்ளது போல் பாக்கெட் பாலையும் புட்டி பாலையும், எனக்கு நீ தரவில்லை!!

நான் வளர்ந்த போது, என்னை அன்போடு வளர்த்த தாய் தந்தையை தந்தவன் நீ!!! இப்போது உள்ளது போல், அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போய், செவிலி தாயிடம் நான் வளரவில்லை!!!. என்னுடைய முதல் பேச்சையும், நான் குப்பிற விழுந்து முதல் முதலில் நடந்ததையும் பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் பெற்றோர்கள்.

நான் ஐந்து வயது வரை புழுதி மனதில் ஒடி விளையாடி, நன்றாக சிறு வயது பொழுதை களித்தவன். மண்ணை கூட காணாமல், play school, Kindergarten போன்றவற்றை காணாமல் வளர்த்தவன் நீ!!!.

பள்ளி கூடங்களில் கூட அதிகம் கஷ்டப்படாமல், எளிதாக படித்து தேர்ச்சி பெற்றவன் நான்!!!. நல்ல வேளையாக, டியூசன் போன்ற பல கொடுமைகளை எனக்கு நீ கொடுக்கவில்லை!!!.

பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்றதனால், ஆசிரியர் பயிற்சி படிப்பை அரசு செலுவிலே எளிதில் படிக்க வைத்தவன் நீ!!!. மருத்துவம், இஞ்சினியர் போன்ற படிப்புகளை எனக்கு சொல்லி தரவில்லை நீ!!!.

அந்த ஆசிரியர் பயிற்சி படிப்பில் கூடஎன்னை காதல் கடலில் தள்ளி விட்டு, காதலி கழுத்தில் மூன்று முடிச்சு இட வைத்தவனும் நீயே!!!. அதற்கு பெற்றோரை சம்மதிக்க வைத்தவனும் நீ.

இருவருக்கும் அரசு கிடைத்த போதும், மனையாள் வேலையை உதறி விட்டு, எனக்கு வரும் பணிக்கொடையை கொண்டே குடும்பம் நடத்த தயார் என்று சொல்ல வைத்தவன் நீ. இரண்டு பேரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை நீ உருவாக்கவில்லை!!!.

பெற்ற தாய் தந்தையின் மீதும், வந்த மனைவியின் மீதும் பண்பும் பாசமும் நிலைக்க வைத்தவன் நீ!!!. இதை விட வேறென்ன வேண்டும், ஒரு ஆண்மகனுக்கு!!!!

நான் நினைத்ததை விட அதிகமாகவே, மூன்று ஆண் மகன்களையும், ஒரு பெண் மகவையும் தந்தவன் நீ!!! அதையும் பண்பும் பாசமும் பொருந்தியவர்களாக அளித்தவன் நீ!!!.

பெற்ற பிள்ளைகளை, நன்றாக படிக்க வைத்து, அவர்கள் நினைத்த வேலையை அளித்தவன் நீ!!!.

மாற்று சாதி, மதமாக இருந்தாலும் பிள்ளைகளின்  மண வாழ்க்கையை சிறப்பாக அமைக்க மன தைரியம் தந்தவன் நீ!!!. பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பளிக்காமல் காத்தவன் நீ!!!

பேரன் பேத்திகளை, எங்கள் மடியில் வைத்து தாலாட்ட வாய்ப்பு கொடுத்தவன் நீ!!!. உப்பு மூட்டை ஏற்றியும், அவர்களின் சிறுநீரால் முகத்தை அபிஷேகம் செய்ய வைத்தவன் நீ!!!.

இத்தனையும் கொடுத்து, உலகத்தோர் பொறாமை பட வைத்தவன் நீ!!. பெருமைப்படுத்தியவன் நீ!!!. இறைவன் எல்லாவற்றையும் எனக்கு அளித்து இருந்தாலும், எனக்குள் ஏதோ மனக்குறை இருப்பதாக உணர்கிறேன். அதை என்னால் கண்டுபிடிப்ப முடியவில்லை. அது என்னவென்று தெரிந்திருந்தால், உன்னிடம் கேட்டுருப்பேன். அதையும் நீ அளித்திருப்பாய்!!!

எமனின் பாச கயற்றால், கட்டப்பட்டு மேலோகம் செல்லுகையில், ”எமனிடமே கேட்டு விட்டால் என்ன???....” என்று நித்திக்கிறேன். என் கதையை கேட்டவன், “ நீ தேடி கொண்டிருப்பதன் பெயர் நிம்மதி’ …” என்றான் எமன். அதை ஏன் கடவுள் எனக்கு அளிக்கவில்லை?....” என்றேன். அதற்கு எமன், ” பொருள் வேணும்…..நல்ல வேலை வேணும்…. நல்ல மனைவி வேணும்….நல்ல பிள்ளைகள் வேணும் என்று கேட்ட நீ…. நிம்மதியை கடவுளில் கேட்கவில்லையே….. கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்…” என்றான்.  

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


முயற்சி- கவிதை


உன்னை
என் கண்கள்
உ(க)ண்ட உடனே
என்னுள்
உன்னை காண முயல்கிறேன்
கண்ணாடி முன்னே!!!......

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


திருட்டு விசிடி சில நிதர்சனங்கள்

உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன், படத்தை திருட்டு விசிடியில பார்க்கதிங்கதயவு செய்து தியேட்டர் போய் படம் பாருங்க……” என்று இரண்டு நாளைக்கு முன்னர், அஞ்சான் வெளியிட்டு விழாவில் நடிகர் சூர்யா கூறிய வார்த்தைகள் இவை. ஒவ்வொரு நடிகரும், ஒவ்வொரு தயாரிப்பாளரும் படத்தை வெளியிடும் போது கூறும் வார்த்தைகள் இவை. இந்த திருட்டு விசிடியை ஒழிப்பதற்கு, தமிழக அரசும், திரை துறையும் பல முயற்சிகளை எடுத்தும் எந்த பலனுமில்லை.

கடந்த வருடத்தில், நடிகர் கமல் அவர்கள், தான் நடித்த திரைப்படத்தை நேரடியாக DTH முறையில் ஒளிப்பரப்ப திட்டமிட்டார். இதற்கு தியேட்டர் உரிமையாளர் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, கடைசி நேரத்தில் மீண்டும் தியேட்டரில் திரையிட பட்டது. இதே மாதிரியான மற்றொரு முயற்சியை சேரன் முயல்வதாக கடந்த வாரம் தெரிவித்தார். சேரன் தன்னுடைய படத்தை C 2 H என்ற புது முறையை பின்பற்றுகிறார்.       C 2 H முறையில் நேரடியாக, வீட்டிற்கு ஒரினல் டிவிடி பணத்திற்காக விற்பனை செய்யப்படும். இதற்கும் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது

கடந்த வாரம், நடிகர் விஷாலும் உள்ளூர் கேபிள் டிவிகளில் புது படங்கள் திரையிட்ட நபர்களை போலிஸில் கண்டுபிடித்து ஒப்படைத்தார். இவ்வாறு திரை துறையின் ஒவ்வொரு நபரும் ஏதாவது ஒரு வகையில் திருட்டு விசிடியை ஒழிக்க முயல்கிறார்கள். ஆனால் விடிவு தான் கிடைக்கவில்லை.

இதற்கு மக்களை மட்டுமோ அல்லது திருட்டி விசிடி கும்பலை மட்டும் தவறு செய்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. திரை துறையினரும் தியேட்டர் உரிமையாளர்களும்மறைமுகமாக காரணம் என்று நான் நினைக்கிறேன்.

பெரிய நடிகர் திரைப்படம் என்றால், குறைந்த பட்சம் 50 கோடியிலிருந்து 100 கோடி வரை தொடலாம். அதில் நடிகர் நடிகைக்கு பாதி பணம் சம்பளமாக தரப்படுகிறது. சம்பளத்தினாலே படத்தின் பட்ஜெட் கூடுகிறது என்பது பல தாயாரிப்பாளர்களின் வாதம். இதனால் தான், சூப்பர் ஸ்டார் பாபா, குசேலன் தோல்வி அடைந்த போது, தன் சம்பளத்தை அளித்தார்.

படத்தின் பட்ஜெட் அதிகமாகும் போது, அதிக விலைக்கு தியேட்டர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவர்களும் டிக்கெட் விலையை ஏற்ற வேண்டிய உள்ளது. அதோடு மட்டுமில்லாமல், அங்கு விற்கப்படும் நொறுக்கு தீனிகள் விலைகளையும் ஏற்றி விடுகின்றனர்.
அதிகப்படியான விலையை சாமாளிக்க, தியேட்டர் உரிமையாளர்களே ப்ளாக்கில் டிக்கெட் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில், பல தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாக மாறி உள்ளது.

சராசரி நான்கு பேர் கொண்ட குடும்பத்தில், ஒரு படம் தியேட்டரில் காண வேண்டுமானால், குறைந்த பட்சம் 1000 ரூபாய் தேவைப்படுகிறது. அவனுடைய மொத்த வருமானத்தில் 5% வதுஒரு திரைப்படத்திற்கு செலவிட வேண்டி வரும். அப்படியானால் அவன் எப்படி தியேட்டருக்கு செல்ல யோசிப்பான். திருட்டு டிவிடி வாங்கி, வீட்டில் உள்ள ஹோம் தியேட்டர்ல, மொத்த குடும்பமே 50 ரூபாய் படம் பார்த்து விடுவார்கள். இல்லையேல், ஒரு மாதத்திலே ஒரு வருடத்திலோ ஒளிப்பரப்பாகும் சின்ன திரையில் பார்த்து விடுவார்கள்.

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 200 படங்களாவது வெளிவருகின்றது. அதாவது வாரத்திற்கு 4 முதல்  5 படங்களாவது வெளி வந்து விடுகிறது. அதுவும் பெரிய பட்ஜெட் படம், ஸ்டார் நடிகர் படம் என்றால் இரண்டு அல்லது மூன்று தான் வெளிவரும். அத்தனை படங்களையும் தியேட்டருக்கு போய் பார்ப்பது எப்படி சாத்தியம்.

தற்போது பாக்ஸ் ஆபிஸ் படம் என்பது குறைந்த படசம் மூன்று வாரம் ஒடினால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 50 நாள், 100 நாள் என்பதெல்லாம் எப்போதோ மறைந்து விட்டது. படம் வெளி வந்த ஒரு வாரத்திலே சக்ஸஸ் மீட் வைக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல், இன்றும் 100 படங்களாவது முடிக்கப்பட்ட நிலையில் தியேட்டர் கிடைக்காமல், சிறு தயாரிப்பாளர்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

இண்டர்நெட்  பற்றிய முறையான சட்ட வரைவு வரையறுக்க முடியாததால், இணையம் வழியான பதிவிறக்கத்தை தடுக்க முடியாமல் போகிறது. வெளி நாடுகளில் இருந்து திருட்டு விசிடி இந்தியாவிற்கு எளிதாக நுழைந்து விடுகிறது.

பட்ஜெட்டை குறைக்காமல், டிக்கெட் விலையை குறைக்காமல், இணைய வழி பதிவிறக்கத்தை தடுக்கமால் திருட்டு விசிடியை குறைக்க முடியாது என்பது எனது திண்ணம். 

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


என்னை உணர்ந்த(தொலைத்த) தருணம்

இன்று காலை அவசரமாக கிளினிக்குற்கு கிளம்பி கொண்டிருந்தேன். அண்ணா!!! இன்னைக்கு வரும் போது சைக்கிள் டியூப்புக்கு மவுத் வாங்கிட்டு வா..என்றாள் தங்கை. அதென்ன மவுத் என்று மனதிலே அசை போட்டேன். மறந்திடாதே….” என்று மறுபடியும் கூறினாள். மவுத் பழையது எதாவது இருந்தால் கொடு, அதை வைத்து வாங்கி வருகிறேன்என்று பைக்கை ஸ்டார்ட் பண்ணினேன்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சைக்கிள் என்னுடைய முக்கியமான பொருளாக இருந்தது. இன்று, “அது என்ன, மவுத்ன்ன என்ன? என்று யோசிக்க ஆரம்பிச்சுட்டோம்என்று மனசாட்சி உறுத்தியது.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு, ஆட்டோகிராப் சேரனை போல், சைக்கிள் கற்று கொண்ட நினைவுகள், சைக்கிள் சக்கரங்களாய் பின்னோக்கி பயணித்தன. நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரமிது. அப்போது வாடகை சைக்கிளில் தான்சைக்கிள் பழகினேன். ஒரு மணி நேரத்திற்கு இரண்டு ரூபாய் என, நான்கைந்து நாட்களில் கற்று கொண்டேன்., சைக்கிள் ஓட்டுவதன் மீது அவ்வளவு ஆர்வமான இருந்ததால், படிப்பில் கூட நாட்டமில்லை. பல காயங்களை பெற்று, கற்று கொண்ட சைக்கிளை, இப்போது என்னவென்று கேட்கிறனே???

நண்பர்களோடு ஜாலியாக பேசி கொண்டு சைக்கிள் ஓட்டி கொண்டும், நடந்தும் சென்ற பள்ளிக்கூட நினைவுகள், இப்போது வீட்டின் வாசலில் வந்து அழைத்து செல்லும் பள்ளி பேருந்துகளில் இருப்பதாக தெரியவில்லை. அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு கிடைக்கலாம். பத்து பதினைந்து கி.மீட்டராக இருந்தாலும் நடந்தே படித்த, தந்தையர் மற்றும் தத்தாமார்களின் நினைவுகள் இன்னும் சிறப்பானவை.

ரோட்டில் நடுவில் வந்த நாயை கண்டு பிரேக் பிடித்து மெதுவாக சென்ற போது தான், நினைவலையிலிருந்து மீண்டு வந்தேன்.

மெயின் மார்க்கெட்டில் உள்ள ஒரு சைக்கிள் மார்ட்டில், மவுத் வாங்க போனேன். அங்கு இல்லையென்று பதில் வந்தது. நம்ம கடைக்கு மாத்தி வந்திட்டோமோ…. என்று மனதில் நினைத்தவாறு, கடையின் பெயரை மீண்டுமெரு முறை கடையின் போர்டை பார்த்தேன். அது சைக்கிள் மார்ட் தான். சைக்கிள் உபயோகம் குறைந்து போனாதால், மற்ற உபகரணங்களை வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார் அந்த கடைக்காரர்.

மூன்று தெரு தள்ளி இருக்கும் மற்றொரு சைக்கிள் மார்ட்க்கு போனேன். கடைக்காரர், “வால் டியூப் உள்ளது வேணுமாஇல்ல வால் டியூப் இல்லாதது வேணுமா?.....” என்று கேட்டார். நான் குழம்பி போய், “நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியல….: என்றேன். இரண்டு வகையான மவுத் உள்ளது தம்பிவால் டியூப் உள்ளது பழைய மாடல்….இப்போது வால் டியூப் இல்லாத மாடல் தான் அதிகம் வாங்குறங்க….அதையே நீங்களும் வாங்கிங்கோ …” என்றார் கடைக்காரர். பணத்தை கொடுக்கும் போது, “ இப்ப யாரு தம்பி சைக்கிள் ஒட்டுறஎதுக்கெடுத்தாலும் பைக் தான்.. அதான் உங்களுக்கும் மவுத் பத்தி தெரியல…” என்றார் கடைக்காரர்.

அவர் சொல்வது போல், கால ஒட்டத்தில் சைக்கிளின் உபயோகம் குறைந்து பைக்கின் உபயோகம் அதிகமாகி உள்ளது. அரசும் விலையில்லா சைக்கிள் வழங்கிய உடன் சைக்கிளுக்கு மதிப்பில்லாமல் போகி விட்டது. இயலாதவனின் வாகனமாக மாறி விட்டது. நண்பர் ஒருவர் படிப்பை முடித்து விட்டு ஊருக்கு கிளம்புகையில் சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது. நீ டாக்டர் ஆகிட்ட, பழக்க தோஷத்தில ஊருல போய் சைக்கிள் ஒட்டிடாதா…” என்றார் நண்பர்.

கடந்த நூற்றாண்டின் மிக சிறந்த போக்குவரத்து சாதனமான சைக்கிள் அறிவியல் வளர்ச்சியின் பிடியில் சிக்குண்டு, எங்கே மறைந்து விட்டது. சமுதாயத்தின் மேன் மக்கள் சைக்கிளை பயன்படுத்தினாலும், ” நீங்க போய் சைக்கிள் ஒட்டலமா….” என்ற ஒலக்குரல்கள் சமுதாயத்தில் இருந்து வரும்.

இப்படியாக எத்தனையே பொருட்கள், ஒவ்வொரு தினம் எதவாது ஒன்றை நம் வாழ்க்கையிலிருந்து தொலைத்து(விலக்கி) கொண்டு இருக்கிறோம் என்பது மிகப்பெரிய உண்மை. அவை அனைத்தும் நம் வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. அம்மி, குழவி, வானொலி பெட்டி, டேப் ரெகாடர் இப்படியாக பட்டியல் நீளும். அடுத்த தலைமுறைக்கு பாடம் நடத்த வேண்டிய, பொருள் காட்சியில் காண வேண்டிய பொருளாக மாறி 
இருக்கிறது.  

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


Monday, July 21, 2014

சிந்தனை துளிகள்

எந்தவொரு மனிதனும்
நூறு சதவீதம்
எல்லாவற்றையும் பெற இயலாது

ஏதாவது ஒரு வகையில்
குறை இருந்தே ஆக வேண்டும்
என்பது வாழ்க்கை நீதி

பணத்தினை பெறுவதில்
உள்ள கஷ்டத்தை
நினைத்து பெருமை கொள்

ஏனெனில்
பணத்தை பெற்று
சந்தோஷத்தை தொலைத்தவர்கள் ஏராளம்

உடல்நலம்
மனம்
திருமண பந்தம்
பிள்ளைகள் போன்றவற்றால்
குறை இருந்தால்
பணம் பெற்று நிம்மதியில்லை



|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 



கவிதை- உதவி

பெண்களுக்கு
தாவணியும் துப்பட்டாவும்
மா(ம)னத்தை காப்பற்றின
இது அந்த காலம்

காலம் போன போக்கில்
துப்பட்டா கழுத்து தாவியது
தாவணி காற்றில் பரந்தது
நாகரிகத்தால்

மனம் போன போக்கில் போனதால்
மானம் போனது

மானத்தை காப்பற்ற
அதே
துப்பட்டாவும்
தாவணியும்
மீண்டும் பயன்படுகிறது
தூக்கில் தொங்க



|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||