நேற்று நீயா
நானா பகுதியில் கிராமத்து பெண்கள் Vs நகரத்து
பெண்கள் பார்த்தேன். பெண்களின் வாழ்வியலில் நகரத்துக்கும், கிராமத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை
உணர்த்தியது. பெண்கள் படும் கஷ்டங்களையும், அதை தாண்டி சாதிக்க நிகழ்வுகளும் மெய்
சிலிர்க்க வைத்தன. ஆனால், கிராமத்து
பெண்களின் வரிசையில் அமர்ந்தவர்கள், கிராம நிலையை
உண்மையான உணர்த்துவதாக இல்லை. இதே மாதிரியாக பல நிகழ்வுகளில், உண்மை நிலையை நீயா நானா வெளி கொண்டு
வருவதில்லை.
கிராமத்து
வரிசையில் இருந்தவர்கள், நகரத்திற்கு
மிக அருகில் உள்ள, கிராம
புறங்களிலிருந்து வந்தவர்கள் என தோன்றுகிறது. Internet connection,
hair drier போன்ற
மின்சாதங்கள் எத்தனை கிராம புற வீடுகளில் இருக்கிறது என்பது புரியாத புதிர். கிராம
புறங்களில் தினக்கூலியாகவே பெரும்பாலனோர்
இருப்பர் .அப்படி பட்டவர் ஒரு நிகழ்ச்சிக்கு, பணம் செலவு செய்து வருவார்களா என்பது கேள்வி
குறி தான்.
காதல் பற்றிய
விவாதம், பெண்களின் மனநிலையை நன்கறிய செய்தது எனலாம். Maturity
love, practical love, fast love, காதல்
திருமணத்தில் விவகாரத்து அதிகரிப்பு போன்ற காதலின் பல்வேறு பரிமாணங்களை கால
ஒட்டத்திற்கு மாறி இருப்பதை நன்கு வெளிப்படுத்தியது.
practical love என்ற வார்த்தையை பயன்படுத்திய பெண்மணிக்கு, சிறந்த பேச்சாளார் என்ற பரிசையையும்
வழங்கினார். மேலும், கோபிநாத்
கூறியது. “practical love என்பது
விமர்சனத்திறகு உரியதாக இருந்தாலும், இன்றைய காதல்
நிலையிலை தெரிவாக எடுத்து கூறியாதால், இந்த பரிசு” என்றார்.
அறிவியல்
வளர்ச்சிக்கு ஏற்ப, காதலில் மானுட
மன ஒட்டத்தினை மாற்றி இருக்கிறது என்பது உண்மை. ஆனால், அன்பு பரிமாற்றம், பணத்தை முதலீடை கொண்டு காதல் என்ற பெயரினை
கொண்டு பயணிப்பது வருத்தமாக இருக்கிறது. அதையே இந்த சமூகமும், ஊடகங்களும் சினிமாக்களும் கற்று கொடுத்து
இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பணம் எப்படி அன்பினை தட்டி விட்டு, வாழ்க்கை எனும் ஒட்டப்பந்தயத்தில் முன்னேறி
செல்கிறதோ, அதே நிலை
காதலுக்கு வந்து விட்டதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
பெற்றோர்களும், தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் போது, பொருளாதார நிலையை முன்னிறுத்தியே நிச்சயம்
செய்கின்றனர். அந்த நடைமுறை சாத்திய நிலையை, காதலுக்குள் காதலர்கள் கொண்டு வந்து
விட்டார்கள் போலும்.
காதலை உணர்
பூர்வமாக அனுபவர்களும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களையும். ”காதலை உணர்வு பூர்வமாக அணுகாதீர்கள், ஏதார்த்த முறையில் அணுகுங்கள்” என்ற எச்சரிக்கை ஒலியும் சமூதாயத்தில்
ஒலித்து கொண்டு தான் இருக்கிறது.
”காதல்
தோற்பதில்லை
காதலர்கள்
தான் தோன்றுகிறார்கள்” …..என்ற திரைப்பட
வரி தான் நினைவில் வருகிறது.
(உண்மை
காதலுக்கு ஏதிரான பதிவல்ல)
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment