கடந்த
பத்தாண்டுகளில் மனித உரிமை பற்றிய விழுப்புணர்வு மக்களிடம் அதிகமாகி வருகிறது.
அதனால், பல புதிய மனித
உரிமை அமைப்புகள் புற்றீசல் போல் முளைத்திருக்கின்றன (தாங்கள் சமுதாயத்தை தூக்கி
பிடிப்பதாக சொல்லி கொண்டு).இவை நடைமுறையில் சாம்பிரதய அமைப்புகளாவோ, வாகனங்களில்
பெயர் போட்டு கொள்ளும் அமைப்பாகவோ இருக்கிறதோ என எண்ண தோன்றுகிறது.
மேலை நாட்டு
கல்வி முறையினால், தன்னை அறிவு
ஜீவியாக காட்டி கொள்ள நினைக்கும் போது, பல பொதுவுடைமை
கருத்துகள் மானுட மனதில் உதிப்பதில் தவறில்லை. சமுதாயத்தின் கீழ் நிலை மக்களுக்காக
போராடுவதாக சொல்லி கொள்ளும் அரசியல் இயக்கங்களின் மறு பதிப்பு.
இந்திய
அரசியலமைப்பு சட்டமும் தனிமனிதனின் அடிப்படை உரிமைகளை மீற கூடாது என்று
பட்டியலிட்டு இருக்கின்றன. உரிமைகள் மீறப்படும் போது, சட்டம் தன்னை காக்கும் என்ற உளவியலோடு
மனிதனும் காலத்தை கழித்து விடுகிறான்.
சமுதாயத்தில்
முதலாளித்துவ கொள்கை முற்படும் போது பொதுவுடைமை கொள்கை காலத்தின் கட்டாயமாகிறது.
அதிலும் தொழிலாளரின் உரிமைகள் முக்கியமானது. அதனால் தான், வேலையின் கால அளவு, உணவு இடைவேளை , தேநீர் இடைவேளை, மருத்துவ வசதி, காப்பீடு போன்றவை ஆங்கிலேயர் காலத்திலே
இந்தியாவில் உருவாக்கப்பட்டன.
மேல் தட்டு
மக்கள் மனித உரிமையை தாண்டி, விலங்கு நல
உரிமை வரைக்கும் போராடி வருகிறார்கள். Pet animal இன்று படுக்கையறையிலே வைத்து வளர்க்கும்
அளவிற்கு விலங்கு நலம் பேணி காக்கப்பட்டு வருகிறது. கேட்பதற்கும் பார்ப்பதற்கும்
பெருமையாக உள்ளது .ஆனால், இன்று
தொழிலாளர் உரிமைக்காக போராட வேண்டிய நிலையில் உள்ளோதோ என மனம் நினைக்கிறது.
அதற்கு சிறு
உதாரணத்தை கூறியே ஆக வேண்டும். வெளிநாட்டின் வங்கி துறை சார்ந்த நிறுவனம்
அது. இரண்டு சிப்ட்களில் பணியாளர்கள் வேலை
செய்கிறார்கள். அந்த பணியாளர்களுக்கு, 20 நிமிட
இடைவேளை, 40 நிமிட
இடைவேளை என இரண்டு முறை இடைவேளை அளிக்கப்படுகிறது. இதனால், காலை சிப்ட்டில் வேலைக்கு வருபவர்களுக்கு, முதல் இடைவேளை தேநீர் அருந்துபவதற்கு, இரண்டாவது உணவு உண்பதற்கு சரியான நேர அளவாக
இருக்கும். இந்த வழக்கமே, மதிய
சிப்ட்டில் வருபவர்களுக்கு நடைமுறை பயன் படுத்தப்படுகிறது. அதாவது, 20 நிமிட இடைவேளையில் தான் சாப்பிட
வேண்டுமாம். உணவு உண்பதற்கு கூட, குறிப்பிட்ட
நேரம் வழங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன????
”தொழிலாளர்
எப்படி இருந்தால், நமக்கென்ன!!!!
நமக்கு வேலை நடந்தால் சரி!!!....” என்ற மனநிலையை, முதலாளித்துவம் சொல்லி கொடுத்து இருக்கிறது.
விலங்குகளுக்கு உரிமையை நிலை நாட்ட துடிக்கும், முதலாளித்துவ கோட்பாடு, மானுட உரிமையினை கண்டு கொள்ளாமல் போவதேன்????
தொழிலாளர்களும், ”சம்பளம் நிறைவாக பெற்றால் போதும்” என்ற உளவியல் மட்டுமே பெரும்பாலும்
காணப்படுகிறது. பணம், கற்ற கல்வியை
கூட மழங்கடித்து விடுகிறது. திரும்பி கேள்வி கேட்க கூட மனம்(பணம்) மறுக்கிறது.
மனிதனை
முதலில்
மனிதனாக பாருங்கள்!!!!
பிறகு
இந்தியனாக
தமிழனாக
தேவனாக, வன்னியனாக, பிரமணனாக
ஆணாக,பெண்ணாக
மதிக்கலாம்!!!!
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment