Tuesday, October 31, 2017

பொருளாதார அறிவும், எனது புரிதலும்


இளநிலை சித்த மருத்துவம் பயின்று கொண்டிருந்த நேரம்!!! நண்பர் ஒருவர், பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பதாக கூறினார். “ ஏன் தேவையில்லாமல், பணத்தை வேஸ்ட் பண்ற.. பணத்தை எடுத்துடுஎன்று அறிவுரை கூறினேன். அந்த தருணத்தில், எனக்கு பொருளாதாரத்தை பற்றியே பங்கு சந்தையை பற்றியே அரிச்சுவடி கூட தெரியாது. ஆனால், பொதுபுத்தியில் உள்ள கருத்தின் அடிப்படையில், அப்படி கூறினேன்.

காலங்கள் கடந்து செல்லுகையில், பங்கு சந்தை பற்றி நன்கு தெரிந்த நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவரிடமிருந்து பங்கு சந்தையின் அரிச்சுவடியை பற்றி கற்று கொண்டேன்.

கொஞ்சம் கற்று கொண்ட ஆர்வ கோளாறில், சிறியளவு மூதலீடு செய்ந்திருந்தேன். சிறியளவு லாபம் பார்த்திருக்கிறேன். அதே மாதிரி, பெரியளவிற்கு இழந்திருக்கிறேன்!!! பங்கு சந்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், முதலீடு செய்ததால் ஏற்பட்ட பின்விளைவுகள்!!!

அதற்கு பிறகு, TNPSC Group I தேர்விற்காக படிக்க ஆரம்பித்த பிறகு, பொருளாதாரத்தை பற்றிய அடிப்படையை தெரிந்து கொண்டேன். இப்போது TNPSC இலவச பயிற்சி வகுப்புகள் எடுப்பதால், என்னுடைய பொருளாதாரம் சார்ந்த அறிவை, இன்னும் மேம்படுத்தி கொண்டிருக்கிறேன்!!!

இன்று!! அதே நண்பரை பார்த்திருந்தால், “ பங்கு சந்தையில் மூதலீடு செய்வதில் தவறில்லை, அதன் ஏற்ற இறக்கங்களை தெரிந்து கொண்டு, பிறகு முதலீடு செய்யுங்கள்என்று அறிவுரையை மாற்றி சொல்லி யிருப்பேன்.

நிற்க!!! இதெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்……

இன்றைய நிலையில், பொருளாதாரத்தை பற்றிய அடிப்படையே தெரியாமல், பொருளாதார மேதைகளாக, முகநூலில் கம்பு சுத்துகிறவர்களை பார்க்கும் போது, புன்னைகை தவிர, வேறொன்றும் தோன்றுவதில்லை!!!

நானும் பத்தாண்டுகளுக்கு முன்பு, இதே மனநிலையில் இருந்தேன். ஆனால், சிறிதளவு அடிப்படையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்!! அதை நீங்களும் செய்யலாமே!!!

பொருளாதாரம் என்னுடைய துறை இல்லையென்றால், பொருளாதார அறிவை பற்றிய தாகம் இன்னும் குறையவில்லை.

இங்குள்ள அனைத்து பிரச்சனைகளைகளுக்கும், பொருளாதாரத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல், முதற்காரணத்தை புரிந்து கொள்ள இயலாது. அந்த அடிப்படையை, புரிந்து கொள்ள முயலுங்கள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, October 16, 2017

அறிவியலும் பராம்பரியமும் எதிரானது அல்ல!!!!


அறிவியலே வேண்டாம் என்று சொல்வதும் தவறு. அதிலும் பல நல்ல விஷயங்கள் உள்ளது. அதே சமயத்தில் பராம்பரியத்தையும் கைவிட கூடாது. அறிவியலுக்கு உட்படாத அனுபவ அறிவு தேவையில்லாதது என்பதும் மூட்டாள் தனம்!!!!

நாம் தினமும் சாப்பிட்டு கொண்டிருக்கும் சாம்பாரையும், ரசத்தையும் என்றாவது அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறமா?? இல்லை. இதை பல்லாண்டு காலமாக, நம் முன்னோர் உண்டு வாழ்ந்து வந்தனர். உடலுக்கு எவ்வித பாதிப்பும் வந்ததில்லை. ஆகையால் அனுபவ அறிவை முழுவதும் புறக்கணிக்க இயலாது.. அதை விடுத்து முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்திய விட்டமின் மாத்திரைகளையும், புரோட்டீன் பவுடர்களையும் சாப்பிடுவேன் என்றாவது கொடி பிடித்திருப்போமா??? இல்லையே!!!

சரி... .நலவாழ்விற்கு தீங்கு என்று சொல்லப்பட்ட பல தரப்பட்ட பொருட்களை, நாம் பயன்படுத்தி கொண்டு தானே இருக்கிறேன். இல்லை.... அறிவியல் சொல்லி விட்டது. ஆதலால், பயன்படுத்த மாட்டேன் என்று புறக்கணித்திருப்போமா???? இல்லையே !!! இன்றும் பிராய்லர் சிக்கன் அதிகமாக தான் விற்பனை யாகிறது. ஜின்ஸ் பேண்ட் விரும்புவர்கள் அதிகமாக தானே இருக்கிறார்கள்!!!!

ஆராய்ச்சியினால், எவ்வித பாதிப்பு இல்லை என்று சான்றளிக்கப்பட்ட மருந்து, post marketing surveillance ல் தடை செய்யப்படுகின்ற மருந்துகளும் இருக்க தானே செய்கிறது???? தடை செய்யப்பட்ட மருந்துகளையும் பயன்படுத்தி கொண்டு தானே இருக்கிறோம்???

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்து தானே, diclofenac மருந்தினை பயன்படுத்துகிறோம்??? metformin பத்தாண்டு ஆண்டுகளுக்கு மேல் உபயொகப்படுத்தினால், விட்டமின் பி12 உண்டாகலாம் என்று தெரிந்து தானே மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால், இந்த மருந்துகளெல்லாம் வேண்டாமென்று மருத்துவர் சொல்லி இருக்கிறாரா??? இல்லை நோயாளியாக நாம் புறக்கணித்திருப்போமா????

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு- இது நியூட்டனின் விதி. அது போல், ஒவ்வொரு மருந்து பொருட்களுக்கு சில நற்செய்கைகள் இருக்கும் போது,சில கெட்ட செய்கைகள் இருக்க தான் செய்யும். அதை நம்முடைய மதியறிவை உபயோகம் செய்து, பிரித்தெடுத்து மருந்ததாக பயன்படுத்த வேண்டும்.

மருத்துவத்தின் தந்தையான ஹிப்பொகிராட்ஸ் கூட, நான்கு தத்துவங்களை தான் முன் வைத்தார். அது சித்த மருத்துவத்தில் வளி, அழல், ஐயம் என மூன்றாக முன்னிறுத்தப்படுகிறது. அவ்வளவு தான் வித்தியாசம்!!!

ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் ஒரு தத்துவ முறை இருக்கும். அதை புரிந்து கொள்ளாமல், நவீன அறிவியல்/ஆராய்ச்சி சர்வரோக நிவரணியாக பேசுவதை என்னவென்று விளிப்பது???

எப்போதும் புத்தகத்தை வாந்தியெடுத்து ஒப்புவீக்காதீர்கள்!!! உங்களை பகுத்தறிவை பயன்படுத்துகள்!!!! இது நவீன அற்வியல்வாதிக்கு மட்டுமல்ல!!! பராம்பரிய வாதிகளுக்கு பொருந்தும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, October 14, 2017

மாற்று மருவத்தில், அறிவியல் ஆய்வில் உள்ள பிரச்சனைகள்


மாற்று மருத்துவமும், அறிவியல் உட்பட்டதே. அதில் மாற்று கருத்தில்லை!!! ஆனால் ஆராய்ச்சி செய்கையில் உள்ள நடைமுறை இடர்பாடுகளை, எந்த அளவிற்கு உள்வாங்கி இருக்கிறோம் என்பதே பிரச்சனை!!!!

ஆராய்ச்சிக்கு முதற் தேவை பணபலம்!!! இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆராய்ச்சி துறைக்கு ஒதுக்கப்படும் பணத்தின் அளவு குறைவு!! இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

https://en.wikipedia.org/…/List_of_countries_by_research_an…

https://thewire.in/105887/research-budget-biotech-iiser/

அதில் மருத்துவ துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில், இந்திய மருத்துவ துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது மிகவும் குறைந்த அளவே!!!

http://indiabudget.nic.in/ub2017-18/eb/sbe5.pdf

வெளிநாடுகளில், தனியார் மருந்து கம்பெனிகளின் மூலமாக, அதிகளவு ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த இடத்தில் தான், மருத்துவ வணிகம் தொடங்குகிறது.
ஆராய்ச்சியை யார் முன்னெடுப்பது என்பதே மிக முக்கியமான கேள்வி????
-------------------------------------------------------------------------------------------------------------------
எந்தவொரு ஆராய்ச்சியும், அத்துறையை சார்ந்தவர்களால் மட்டுமே செய்ய முடியாது. அத்துறையை தாண்டி, மற்ற துறையினரின் பங்கும் முக்கியம்!!! கூட்டு முயற்சியாகவே இருக்க வேண்டும்!!

இந்திய மருத்துவ முறையை பொறுத்த வரை, biochemist, pharmacognist, microbiologist, pathologist, epidemiologist போன்ற பல்துறை ஆய்வர்களின் பங்கு மிக முக்கியமாகிறது. இதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பது கேள்வி???

நான் சித்த மருத்துவத்தை பயின்றவன் என்பதால், நான் பெற்ற அறிவை வைத்து, நோயாளிகளுக்கு மருத்துவ வழிமுறைகளை மட்டுமே அளிக்க இயலும்!!!

நவீன மருத்துவத்தில், உள்ள பல்வேறு மருந்துகளின் கண்டுபிடிப்பில் pharmacognist பங்கு மிக அதிகம்!!! அதே சமயத்தில், மருத்துவர்களின் பங்கு குறைவு!!!

இதை எப்போது நாம் புரிந்து கொண்டோம்????
----------------------------------------------------------------------------------------------------------
இந்திய மருத்துவ முறைகளில் நடைபெறும் ஆராய்ச்சிகளை கேட்கும் போது, இந்தியாவில் நடக்கும் மருத்துவ துறை ஆராய்ச்சிகளோடு ஒப்பிடுவது அவசியமாகிறது. இது தவறாக தர்க்கமாக கூட இருக்கலாம்; வேறு வழியில்லை.

பெரும்பாலான ஆராய்ச்சிகள், வெளிநாடுகளில் நடைபெறுவது. அதை வைத்து கொண்டு விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்!!! இந்தியாவிற்குள் நடக்கும் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை மிக குறைவு!!!

http://www.hindustantimes.com/…/story-0nI4mqHaMAVwIsarbDz1k…

அப்படியான உண்மையான நிலையில், இந்திய மருத்துவ முறைகளிடமிருந்து மட்டும், அதிகப்படியான ஆராய்ச்சிகள் பார்ப்பது எங்ஙனம்????
-----------------------------------------------------------------------------------------------------------
நவீன மருத்துவத்தில், ஒரு மருத்துவ மூலக்கூறினை ஆய்வு செய்து, சந்தைப்படுத்துவதற்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் எடுத்து கொள்ளும்!! அதை தாண்டி post marketing surveillance என்னும் நான்காம் நிலை, ஆராய்ச்சி எப்போது முடியும் என்பது கணிக்க இயலாது.

அப்படியிருக்கையில், பராம்பரிய மருந்துகள் பெரும்பாலும், கூட்டு மருந்துகளே!!! அப்படியான பல்வேறு மருந்துகளின் கூட்டு ஆய்வை முடிப்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ???

மேலும் இந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்க யார் தயாராக இருக்கிறார்??? அதற்கு பணமளிக்க யார் தயராக இருக்கிறார்கள்??? தனியார் மருந்து கம்பெனி முன்வராது. ஏனெனில் மருந்திற்கு காப்புரிமை பெற்று லாபம் சாம்பதிக்க இயலாது.

பராம்பரிய மருந்துகளில் நடைபெறும் ஆராய்ச்சி என்பது, Reverse pharmacology வகையை சார்ந்தவை. அதாவது அனுபவ முறையில் சிறந்த மருந்துகளை, ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது.

இதையெல்லாம் புரிந்து கொள்ள, யாரும் தயாராக இல்லை என்பதே கள யதார்த்தம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, October 12, 2017

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும், மக்கள் மன நிலையும்


சில பண்டிகைள், காலத்தினாலே அழிந்து, சில பண்டிகைகள் காலத்தினாலே வளர்க்கப்படுவது இயற்கை!!!

அந்த வகையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை வெகுமாக மாறி வருகிறது.ஆனால், நேர் எதிர் மாறாக விநாயகர் சதுர்த்தி போன்றவை அதிகமாக வளர்ச்சியடைவதாக உணர்கிறேன்!!!

மனித மனத்திற்கு கொண்டாட்ட மனநிலை அவசியமாகிறது. அந்த கொண்டாட்ட மனநிலை, ஒரு படிநிலையாகவே, இந்த பண்டிகை வெளி கொணரப்படுகிறது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை, விநாயகர் சதுர்த்தி என்பது அறியாத பண்டிகை. ஆனால், இன்று தெருவிற்கு தெரு விநாயகர் சிலைகளை காணலாம். அதே சமயத்தில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, தீபாவளி என்பது ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விடும். ஆனால், இன்று அதிகபட்சமாக ஒரு வாரத்திலிருந்து, இரண்டு நாட்களில் முடிந்து விடுகிறது.

இன்றைய கால கட்டத்தில், பெரும்பாலான பண்டிகைகளின் கொண்டாடும் தன்மையை, வணிகமே முடிவு செய்கிறது. அதில் பகடை காய்களாக, மக்கள் அகப்பட்டு கொள்கின்றனர்.

அது மட்டுமல்லாமல், பண்டிகையில் பயன்படுத்தப்படும் பொருட்களை பொறுத்து, காலத்தினால் மறுக்கப்படுகிறது. தீபாவளிக்கு முக்கியமானவை, புது ஆடையும், வெடியும், இனிப்பு பலகாரங்களும்!! இதில் புத்தாடையும், இனிப்பு பலகாரங்களும் என்றுமே கிடைக்கும் என்பதால், அதனை சார்ந்த களிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

பருவ நிலை மாற்றத்தினால், நெற்பயிர் விளையும் அளவு குறைந்து விட்டதாலும், மாடுகளின் வளர்ப்பும் குறைந்து விட்டதாலும், பொங்கல் சுருங்கி விட்டது!!!

கொண்டாட்டங்கள் மாறி வரும் வாழ்வியல் சுழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் நடந்தாலும், வணிகத்தின் பிடியினால், பண்டிகை சார்ந்த உளகளிப்பில் மாற்றம் ஏற்படுவது காலத்தின் கொடுமை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, October 2, 2017

பிக்பாஸ் - ஒரு மீளாய்வு


கடந்த 100 நாட்களில், தமிழ்நாட்டு மக்களிடையே பிக்பாஸ் ஏற்பத்திய தாக்கம் அளவிட முடியாது. அதே சம காலத்தில், நடந்த பல நிகழ்வுகளை நம்முன்னே கொண்டு வராமல் தடுத்து விட்டது என்பது மட்டும் உண்மை!!!!

தொலைகாட்சியின் நிகழ்ச்சி பரிணாமங்களில் மற்றொரு படி நிலை எனலாம். அடுத்தவரின் பிரிச்சனைகளை தெரிந்து கொள்வதில் மக்களுக்கு அளாதி ஆர்வமுண்டு. அதனை ஆரம்ப காலங்களில் திரைப்படங்கள் பூர்த்தி செய்தன; அதன் பிறகு, டிவி நெடுந்தொடர்கள் பூர்த்தி செய்தன. இதன் அடுத்த படிநிலையாகவே சொல்வதெல்லாம் உண்மை, நிஜம் போன்ற குடும்ப பிரச்சனை சார்ந்த தொடர்கள்!!! இதன் வருங்கால படி நிலையாக, பிக்பாஸ் அமைகிறது!!!!

நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமலின் பணி சிறப்பானது என்பேன்!!! சொல்லப்போனால், இவர் இல்லாமல் இருந்தால், நிகழ்ச்சி தோல்வியை சந்திக்க கூட வாய்ப்புள்ளது!!! அறிவுரைகள், வாழ்க்கை புரிதல்கள், சினிமாவின் நினைவுகள் என அனைத்து நிலைகளிலும் செவ்வானே பணியாற்றினார்.

அடுத்தது போட்டியாளர்கள் !!!!! ஆண்களும் பெண்களும் சரிசமமாக 14 பேர் பங்கெடுத்தனர். அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் சினிமா துறையை சார்புள்ளவர்களே!!! அது சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது. சினிமா துறையை தாண்டி, விஞ்ஞானி, எழுத்தாளர், விளையாட்டு வீரர், தொழிற்முனைவோர், மருத்துவர், பொறியாளன் என அனைத்து துறையினை சார்ந்தாக இருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்!!!! ஆனால், இவர்களையெல்லாம் களம் இறக்கினால், மக்களிடம் ஈர்ப்பு ஏற்படாது. மேலும் பிக்பாஸினால் பணம் பார்க்க முடியாது; இது ஒர் வகையில் வணிக நிகழ்ச்சி தானே!!!!

பிக்பாஸினை திரைப்படமாக சித்தரித்து கொண்டால்….. முதற்பாகம் அருமை; இரண்டாவது பாகம் பிளாப் எனலாம். அதற்கு முழு முதற்காரணம் ஜிலி, பரணி, ஒவியா, காய்திரி மற்றும் சக்தி ஆகியோரின் வெளியேற்றமே!!!!

முதற் வாரத்தில், எந்தவித பிரச்சனை இல்லாமல் தொடங்கினாலும், அடுத்தடுத்த வாரங்களில் சற்று சூடு பிடிக்க ஆரம்பித்தது. முதன் முதலில் பரணி வெளியேற்றமே மக்களின் உணர்ச்சி பிழம்பை ஏற்படுத்தியது; அடுத்தது ஜிலி மற்றும் ஒவியா உரையாடல் உள்ள பொய்கள் இரண்டு வாரத்தை ஒட வைத்தது!!! அடுத்தது ஒவியா- ஆரவ் காதல் எனவும், காய்த்ரி- சக்தி ஆதிக்க மனநிலை மற்றும் குழு அமைத்தல் போன்றவற்றால் முதற் பாகம் சிறப்பாக முடிந்தது.

ஒவியா, பரணி என மக்களின் விருப்பம் இல்லாமல், பிற காரணங்களால் வெளியேற்றப்பட்டதால், சில போட்டியாளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் பிக்பாஸிற்கு ஏற்பட்டது. அதனால், மூன்று பெண்களையும், ஒரு ஆண் போட்டியாளர்களை இணைத்தார் பிக்பாஸ்!!! அது ஏன் மூன்று பெண்கள்!!!

காரணம் எளிது!! பிரச்சனைகளை எளிதாக உண்டவல்லவர்கள் (பெண்கள் சண்டைக்கு வந்து விடாதீர்கள்) !!!!! பிந்து மற்றும் ஹரிஷ் பெரும்பாலும் அடக்கி வாசிக்கவே செய்தனர்.

ஆனால், காஜலும் என்னவோ அடக்கி வாசித்தார்!!! அவர் இன்னொரு காயத்ரியாக மாறுவார் என்று எதிர்பார்த்த பிக்பாஸின் ஏமாற்றமே மிஞ்சியது!!! தனது பெயரை கெடுத்து கொள்ள விரும்பாமல் அடக்கி வாசித்தார்!!! இதனால் தான், ஜிலி, ஆர்த்தி மற்றும் சக்தி ஆகியோரை திரும்ப அழைத்து, இரண்டு வாரங்களையும் ஒட்டினார் பிக்பாஸ் ஆனால் சுஜா- சினேகன் பிரச்சனைகள் கடைசி நேரங்களில் சிறிது பயன்பட்டன!!!

தமிழில் முதல் பாகம் அளவிற்கு, அடுத்தடுத்த பாகங்கள் வெற்றியடையுமா??? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!!!! முதற்பாகத்தை பார்த்த பிறகு, நிகழ்ச்சிக்கு வர தயங்குவார்கள் அல்லது அப்படியே வந்தாலும், பிக்பாஸ் வீட்டில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்!!! போட்டியாளர்களிடையே சண்டை மூட்ட பிக்பாஸ் நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கலாம்!!! பொறுத்திருந்து பார்க்கலாம்!!!

பிக்பாஸின் மக்கள் மனதில் நிற்கும் வெற்றியாளார் என்றால் ஒவியா தான்!!! ஆனால், அதே அளவிற்கு மனதினுள் ஒன்று வைத்து புறணி பேசாதவர்கள் குறைவு!!! பிந்து, ஹரிஷ், ஆரவ் போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லலாம்!!! அதிலும் சிலர் நல்லவராகவும் நடிக்க செய்தனர்!!!

ஆர்வ் வின் வெற்றி குறித்து சில சர்ச்சை இருக்கிறது. அதில் உண்மை இருக்கலாம் என்று தோன்றுகிறது. கடைசியாக உள்ள நால்வரில் சினேகன் மற்றும் ஆரவ் ஆகிய இருவருக்கும் இடையே அதிக போட்டி இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்!!! சினேகன் கட்டிபுடி வைத்தியர் என்ற விமர்சனத்தை தாண்டி, பெரியளவில் சர்ச்சைகளுக்கு உள்ளாகதாகவர். மேலும் குடும்ப அமைப்பில் சிறந்த நிர்வாகியாகவும், பல பிரச்சனைகளை தெளிவாகவும் கையாண்டர். அதே போல், ஆர்வ்ஒவியா காதல்(?) தாண்டி, ஆர்வ் மீது எவ்வித சர்ச்சையும் இல்லை!! என்னை பொறுத்த வரை சினேகன் வெற்றியாளராக இருந்திருக்கலாம்!!!

ஆர்வ் தான் உண்மையான வெற்றியாளர் என்றால், இளைய வயது பெண்கள் அதிகமாக வாக்களித்தார் என்று எடுத்து கொள்ளலாம். இல்லையென்றால், ஒவியா மீதான அன்பை ஆர்வ்விற்கு ஒட்டுகளாக மாறியிருக்கலாம்., இல்லையென்றால், விஜய் டிவியின் சித்து விளையாட்டாக இருக்கலாம். எல்லாம் அவன் செயல்!!

கடைசியாக …. பிக்பாஸினால் சமூகத்திற்கு என்ன நன்மை ??? என்ற கேள்வி எழுகிறது!!! அதை நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள்/ புரிந்து கொள்கிறீர்கள் என்பதை வைத்தே பொறுத்தே அமையும்!!! மற்றப்படி மிகுந்த நன்மை என்று புகழ்ச்சியும், சுத்த வேஸ்டு என்ற இகழ்ச்சியும் தேவையில்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்