அறிவியலே
வேண்டாம் என்று சொல்வதும் தவறு.
அதிலும் பல நல்ல விஷயங்கள்
உள்ளது. அதே சமயத்தில் பராம்பரியத்தையும்
கைவிட கூடாது. அறிவியலுக்கு உட்படாத
அனுபவ அறிவு தேவையில்லாதது என்பதும்
மூட்டாள் தனம்!!!!
நாம் தினமும் சாப்பிட்டு கொண்டிருக்கும்
சாம்பாரையும், ரசத்தையும் என்றாவது அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறமா?? இல்லை. இதை பல்லாண்டு
காலமாக, நம் முன்னோர் உண்டு
வாழ்ந்து வந்தனர். உடலுக்கு எவ்வித பாதிப்பும் வந்ததில்லை.
ஆகையால் அனுபவ அறிவை முழுவதும்
புறக்கணிக்க இயலாது.. அதை விடுத்து முழுவதும்
ஆய்வுக்கு உட்படுத்திய விட்டமின் மாத்திரைகளையும், புரோட்டீன் பவுடர்களையும் சாப்பிடுவேன் என்றாவது கொடி பிடித்திருப்போமா??? இல்லையே!!!
சரி...
.நலவாழ்விற்கு தீங்கு என்று சொல்லப்பட்ட
பல தரப்பட்ட பொருட்களை, நாம் பயன்படுத்தி கொண்டு
தானே இருக்கிறேன். இல்லை.... அறிவியல் சொல்லி விட்டது. ஆதலால்,
பயன்படுத்த மாட்டேன் என்று புறக்கணித்திருப்போமா???? இல்லையே !!! இன்றும்
பிராய்லர் சிக்கன் அதிகமாக தான்
விற்பனை யாகிறது. ஜின்ஸ் பேண்ட் விரும்புவர்கள்
அதிகமாக தானே இருக்கிறார்கள்!!!!
ஆராய்ச்சியினால்,
எவ்வித பாதிப்பு இல்லை என்று சான்றளிக்கப்பட்ட
மருந்து, post marketing
surveillance ல் தடை செய்யப்படுகின்ற மருந்துகளும்
இருக்க தானே செய்கிறது???? தடை
செய்யப்பட்ட மருந்துகளையும் பயன்படுத்தி கொண்டு தானே இருக்கிறோம்???
கல்லீரல்
மற்றும் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்து தானே,
diclofenac மருந்தினை பயன்படுத்துகிறோம்??? metformin பத்தாண்டு ஆண்டுகளுக்கு மேல் உபயொகப்படுத்தினால், விட்டமின்
பி12 உண்டாகலாம் என்று தெரிந்து தானே
மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால், இந்த மருந்துகளெல்லாம்
வேண்டாமென்று மருத்துவர் சொல்லி இருக்கிறாரா??? இல்லை
நோயாளியாக நாம் புறக்கணித்திருப்போமா????
ஒவ்வொரு
வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு-
இது நியூட்டனின் விதி. அது போல்,
ஒவ்வொரு மருந்து பொருட்களுக்கு சில
நற்செய்கைகள் இருக்கும் போது,சில கெட்ட
செய்கைகள் இருக்க தான் செய்யும்.
அதை நம்முடைய மதியறிவை உபயோகம் செய்து, பிரித்தெடுத்து
மருந்ததாக பயன்படுத்த வேண்டும்.
மருத்துவத்தின்
தந்தையான ஹிப்பொகிராட்ஸ் கூட, நான்கு தத்துவங்களை
தான் முன் வைத்தார். அது
சித்த மருத்துவத்தில் வளி, அழல், ஐயம்
என மூன்றாக முன்னிறுத்தப்படுகிறது. அவ்வளவு தான்
வித்தியாசம்!!!
ஒவ்வொரு
மருத்துவ முறைக்கும் ஒரு தத்துவ முறை
இருக்கும். அதை புரிந்து கொள்ளாமல்,
நவீன அறிவியல்/ஆராய்ச்சி சர்வரோக நிவரணியாக பேசுவதை
என்னவென்று விளிப்பது???
எப்போதும்
புத்தகத்தை வாந்தியெடுத்து ஒப்புவீக்காதீர்கள்!!! உங்களை பகுத்தறிவை பயன்படுத்துகள்!!!!
இது நவீன அற்வியல்வாதிக்கு மட்டுமல்ல!!!
பராம்பரிய வாதிகளுக்கு பொருந்தும்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment