சில பண்டிகைள், காலத்தினாலே அழிந்து, சில பண்டிகைகள் காலத்தினாலே
வளர்க்கப்படுவது இயற்கை!!!
அந்த வகையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை
வெகுமாக மாறி வருகிறது.ஆனால்,
நேர் எதிர் மாறாக விநாயகர்
சதுர்த்தி போன்றவை அதிகமாக வளர்ச்சியடைவதாக
உணர்கிறேன்!!!
மனித மனத்திற்கு கொண்டாட்ட மனநிலை அவசியமாகிறது. அந்த
கொண்டாட்ட மனநிலை, ஒரு படிநிலையாகவே,
இந்த பண்டிகை வெளி கொணரப்படுகிறது.
ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை, விநாயகர்
சதுர்த்தி என்பது அறியாத பண்டிகை.
ஆனால், இன்று தெருவிற்கு தெரு
விநாயகர் சிலைகளை காணலாம். அதே
சமயத்தில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு
வரை, தீபாவளி என்பது ஒரு
மாதத்திற்கு முன்பே தொடங்கி விடும்.
ஆனால், இன்று அதிகபட்சமாக ஒரு
வாரத்திலிருந்து, இரண்டு நாட்களில் முடிந்து
விடுகிறது.
இன்றைய
கால கட்டத்தில், பெரும்பாலான பண்டிகைகளின் கொண்டாடும் தன்மையை, வணிகமே முடிவு செய்கிறது.
அதில் பகடை காய்களாக, மக்கள்
அகப்பட்டு கொள்கின்றனர்.
அது மட்டுமல்லாமல், பண்டிகையில் பயன்படுத்தப்படும் பொருட்களை பொறுத்து, காலத்தினால் மறுக்கப்படுகிறது. தீபாவளிக்கு முக்கியமானவை, புது ஆடையும், வெடியும்,
இனிப்பு பலகாரங்களும்!! இதில் புத்தாடையும், இனிப்பு
பலகாரங்களும் என்றுமே கிடைக்கும் என்பதால்,
அதனை சார்ந்த களிப்பு வெகுவாக
குறைந்துள்ளது.
பருவ நிலை மாற்றத்தினால், நெற்பயிர்
விளையும் அளவு குறைந்து விட்டதாலும்,
மாடுகளின் வளர்ப்பும் குறைந்து விட்டதாலும், பொங்கல் சுருங்கி விட்டது!!!
கொண்டாட்டங்கள்
மாறி வரும் வாழ்வியல் சுழ்நிலைக்கு
ஏற்ப மாற்றம் நடந்தாலும், வணிகத்தின்
பிடியினால், பண்டிகை சார்ந்த உளகளிப்பில்
மாற்றம் ஏற்படுவது காலத்தின் கொடுமை!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment