Saturday, February 25, 2017

சின்ன சந்தோஷங்களை தவற விடாதீர்!!!

நேற்று மிக்சர் வாங்கி சென்றேன்.  மிக்சர் தின்று கொண்டு இருக்கும் போது, திடீரென்று ஒரு கோணல் புத்தி!!!

ஏற்கனவே ... பல கலவையாக இருக்கும் மிக்சரில், பொட்டு கடலை, நிலக்கடலை போன்ற எல்லாவற்றினையும் தனியே பிரித்து உண்பதென்று!!!
பள்ளிக்கூடம் செல்லும் நாட்களிலும், வேலையில்லாமல், தனியே தனியே பிரித்து உண்ட நினைவு மனதில் வந்து சென்றது.

இது காமெடியான நிகழ்வு தான்!!!! குழந்தை கட்டிய மணல் வீட்டை இடித்து தள்ளும் போது உண்டாகும் அற்ப சந்தோஷம் , சிறு வயதினில்.... ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கும் விளையாட்டு பொருட்களை சிதறடிக்கும் உண்டாகும் மெளன சந்தோஷம், வீட்டின் சுவற்றில் கிறுக்கும் போகும் உண்டாகும் சந்தோஷம்!!!... இப்படியான குழந்தை தனமான மன எண்ணங்களின் வெளிப்பாடுகள் !!!

ஏற்கனவே ஒழுங்காக நடக்கும்/இருக்கும் அமைப்பில் மாற்றங்களை உண்டாக்கும் போது சிற்சில சந்தோஷங்கள், நொடி பொழுதில் வந்து மறையும். நாம் அதை கவனிக்க தவறி விடுவோம்!!!

எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், அவனுள்ளே இருக்கும் குழந்தை மனம், அவ்வப்போது வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.

இது போன்ற நிகழ்வுகளை தான், நாம் கவனிக்க தவறி விடுகிறோம்!!! பணம், பொருள் போன்ற பெரிய சந்தோஷங்களை மட்டும் உண்மையென நம்பி!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Monday, February 20, 2017

மருத்துவத்தில் அறிவியலும் பராம்பரியமும்

மனிதனின் ஆயுள்காலம் கூடியிருக்கிறது என்பது கண்கூடான உண்மை. ஆதி காலங்களில், போரினால் மாண்டவர்களே அதிகம்!!! பிறகு உணவு பற்றாக்குறை மற்றும் நோய் தொற்று காரணமாக இறந்தவர்கள் அதிகம்!!! இப்போது உணவு பற்றாக்குறை தீர்ந்து விட்டது. அது போல் தொற்று நோய்களும் குறைந்து விட்டது.

மேற்கண்ட இரண்டையும் அறிவியல் வளர்ச்சியினால் பெற்றவை என்பதில் மாற்று கருத்திற்கு வாய்ப்பில்லை. ஆனால், இன்றைய நிலையில்...... life style disorder எனப்படுகின்ற சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு மற்றும் புற்று நோய் போன்ற நோய்கள் அதிகமாகி வருகின்றன.

மேற்கண்ட நோய்களுக்கு அறிவியல் வளர்ச்சியும் ஒரு காரணமும் என்பதை மறுப்பதற்கில்லை. கால சூழற்சி ஏற்ப, பல நோய்கள் மனிதனை தாக்கி வருகின்றன.

மருத்துவ துறையின் வளர்ச்சியினை, வெளிக்கொணர இருக்கும் பல வழிமுறைகளில் வாழ்நாள் விவரமும் ஒன்றே தவிர!!! வாழ்நாள் விவரம் மட்டும் போதாது!!!

நேற்று... .போரினாலும் உணவு பஞ்சத்தாலும் தொற்று நோய்களாலும் இறந்தான் என்றால், இன்றைய நிலையில்.... . life style disorder நோய்களால் இறக்கிறான். மேலும் மாத்திரையோடு வாழ்க்கையை கழிக்கிறான்.

நேற்றைய செய்தி... இன்றைய வரலாறு!!!
இன்றைய அறிவியல்... நாளைய பராம்பரியம்...

அது போல் நோய்களும், காலத்திற்கு ஏற்ப மாற கூடியது!!!
அறிவியலும் பராம்பரியமும் தண்டவாளங்கள் போன்றது. இரண்டும் ஒன்றாக சேராது: அது போல் இரண்டமில்லாமல்... நோயும் தீராது!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Thursday, February 9, 2017

யார் நல்லவன் - கெட்டவன்

இப்பூலகில், எந்த மனிதரும் 100 சதவீதம் கெட்டவர்/நல்லவர் என்று குறிப்பிட, ஒருவரும் இல்லை என்பேன். ஒவ்வொருக்கும் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்ற இரண்டும் கலந்தே இருக்கும். இதில் எவை நல்ல குணங்கள் என்றும், எவை கெட்ட குணங்கள் என்பது கூட விவாத்திற்கு உட்பட்டதே!!!

நம்மால் நல்லவனாக நம்பக்கூடியவர் கூட, அதிகபட்சமாக 80 சதவீதம் மட்டுமே நல்ல குணங்களை பெற்றிருப்பார். அது போல் கெட்டவரும் 80-90 சதவீத கெட்ட குணங்களை பெற்றிருக்கலாம். சுமார் 10-20 சதவீத அளவிற்கு நல்ல குணங்களும் இருக்கும். இதனால் தான் கொலை, கொள்ளை செய்யக்கூடியவரை கூட, ஹிரோவாக அங்கிகாரம் செய்து, கொண்டாடி வருகிறோம் சினிமாவில்!!!

பல நேரங்களில், நல்ல மற்றும் கெட்ட குணங்கள் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபாடுவையாகவே உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர், மது அருந்துவரை, கெட்டவராக பார்த்த உலகம் போய், social drinker என்பதை ஏற்று கொள்ளும் அளவிற்கு வந்து விட்டது. வருங்காலத்தில் மது அருந்துவதை தவறில்லை என்று நிலை கூட வரலாம்.

எப்படி இருந்தாலும், நாம் பெரும்பாலும் ஒப்பிட்டு அடிப்படையிலே முடிவுகளை எடுப்போம்!!! மனவோட்டம் மற்றும் கால சூழ்நிலை என்பதெல்லாம், நம்மை அறியாமலே, நம் முடிவில் பங்கெடுப்பவை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Saturday, February 4, 2017

நாக்கு தான் பிரச்சனையோ???

வடை/பஜ்ஜி/போண்டா ஆகியவற்றில் எண்ணெய் அதிகமாக இருப்பதால், அதன் சுவை கூடுகிறது. எண்ணெய் உடல்நலத்திற்கு கேடு எனவும் தெரிந்தாலும், ஆசை யாரை தான் விட்டது??? மாலை வேளைகளில்..... சூடான வடை/பஜ்ஜியின் சுவையறியவே மனம் விரும்புகிறது.

ஒருபுறம் நாக்கிலிருந்து பிறக்கும் சொற்களால் பிரச்சனை யென்றால், மறுபுறம் சுவை மொட்டுகளும் பிரச்சனையை தான் ஏற்படுத்துகின்றன!!!

சுவை மொட்டுகளை கட்டுபடுத்தினால், உடல் ஆரோக்கியத்தை காக்கலாம். அது போல் சொல் பிறப்பை கட்டுபடுத்தினால், மன ஆரோக்கியத்தை காக்கலாம்.....

ஆனால், மேற்கண்ட இரண்டையும் கட்டுபடுத்துவது என்னவோ, மூளை எனும் பிரதம அமைச்சர் தானே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, February 2, 2017

பொதுசமூகத்திடம் சார்பு நிலை குறைதல்

திருமணம் முடிந்து தேன் நிலவு செல்பவர்களுக்கு, ஒரு சங்கடம் இருக்கும். தங்களுடைய இனிமையான நினைவுகளை, நிழற்படங்கள் எடுப்பது கடினம். இருவரும், மற்றொருவரை மாற்றி எடுத்து கொண்டிருப்பார். மூன்றாவதாக மற்றொருவரை அழைத்து, போட்டா எடுப்பது சாத்தியமாக இருந்தாலும், சில அசுசைகள் இருக்கவே செய்கின்றன.

இத்தகைய பிரச்சனை, #selfie எனும் புதிய தொழிற்நுட்பம் வந்து விட்ட பிறகு வெகுவாக குறைந்துள்ளது. இப்போது செல்பி ஸ்டிக், 20 MP முன்பக்க கேமரா என அறிவியல் வளர்ந்து வருகிறது.

மேற்கண்ட நிகழ்வில், நிழற்படம் எடுப்பதற்கு மற்றொருவர் தேவையில்லை என்ற மனநிலை உண்டாக்கி இருக்கிறது. பொது இடத்தில், அன்பு பரிமாற்றத்தினை தடை செய்திருக்கிறது.

மேற்கண்ட வளர்ச்சிகள், தனிமனித செயல்பாடுகளுக்கு சந்தோஷமாக தோன்றினாலும், ஒட்டுமொத்த சமூகத்தினுள் ஏற்படுத்தும் மெல்லிய நுண்ணரசியல் மறைத்து விடுகிறது. சமூக பிணைப்பின் வேரை, எளிதாக வெட்டி விடுகிறது.

மற்றவருடன் சார்பு நிலை என்பது வெகுவாக குறைந்து வருகிறது. பொது இடத்தில் தேவைப்படும் மறைமுகமாக உதவியை தவிர்த்தே வருகிறது.

சமீபத்தில் நடந்த இரு விபத்துகளிலும், மருத்துவமனையில் சேர்ப்பதில் ஏற்பட்ட கால தாமதம் இருவரின் உயிரையும் பறித்து விட்டது. அருகில் உள்ள மற்றவருக்கும் ஏதெனும் துன்பம் ஏற்படும் போது, தன்னியல்பாக உதவி செய்யும் குணம் வெகுவாக மறைந்து வருகிறது.

இரண்டு வீட்டிற்கு இடையே உள்ள கம்பவுண்ட் சுவர், அடுத்த வீட்டுக்காரன் யாரு என்றே தெரியதளவிற்கே மாற்றி இருக்கிறது. வீட்டிற்கு ஒரு குழந்தை போதும் என்ற மனநிலை, அண்ணன்தங்கை, அக்காதம்பி பாசத்தை தூக்கி ஏறிந்து இருக்கிறது. இதே போல் சொல்லி கொண்டே போகலாம்

அறிவியல் வளர்ச்சியும், உலக பொருளாதார மாற்றமும் நம்மை சுயநல பாதைக்கு சிறப்பாகவே அழைத்து செல்கிறது. அந்த இடத்தில் உள்ள முக்கிய சிக்கல் தான், சமூகத்தில் இரு நபர்களுக்கு இடையேயான அன்பு துண்டிப்பு!!!

இவையெல்லாம் மெல்லிய நகர்வுகள் தான். ஆனால் மோசமாக சமூக மாற்றத்தின் தொடக்கப்புள்ளி!!!