Thursday, February 2, 2017

பொதுசமூகத்திடம் சார்பு நிலை குறைதல்

திருமணம் முடிந்து தேன் நிலவு செல்பவர்களுக்கு, ஒரு சங்கடம் இருக்கும். தங்களுடைய இனிமையான நினைவுகளை, நிழற்படங்கள் எடுப்பது கடினம். இருவரும், மற்றொருவரை மாற்றி எடுத்து கொண்டிருப்பார். மூன்றாவதாக மற்றொருவரை அழைத்து, போட்டா எடுப்பது சாத்தியமாக இருந்தாலும், சில அசுசைகள் இருக்கவே செய்கின்றன.

இத்தகைய பிரச்சனை, #selfie எனும் புதிய தொழிற்நுட்பம் வந்து விட்ட பிறகு வெகுவாக குறைந்துள்ளது. இப்போது செல்பி ஸ்டிக், 20 MP முன்பக்க கேமரா என அறிவியல் வளர்ந்து வருகிறது.

மேற்கண்ட நிகழ்வில், நிழற்படம் எடுப்பதற்கு மற்றொருவர் தேவையில்லை என்ற மனநிலை உண்டாக்கி இருக்கிறது. பொது இடத்தில், அன்பு பரிமாற்றத்தினை தடை செய்திருக்கிறது.

மேற்கண்ட வளர்ச்சிகள், தனிமனித செயல்பாடுகளுக்கு சந்தோஷமாக தோன்றினாலும், ஒட்டுமொத்த சமூகத்தினுள் ஏற்படுத்தும் மெல்லிய நுண்ணரசியல் மறைத்து விடுகிறது. சமூக பிணைப்பின் வேரை, எளிதாக வெட்டி விடுகிறது.

மற்றவருடன் சார்பு நிலை என்பது வெகுவாக குறைந்து வருகிறது. பொது இடத்தில் தேவைப்படும் மறைமுகமாக உதவியை தவிர்த்தே வருகிறது.

சமீபத்தில் நடந்த இரு விபத்துகளிலும், மருத்துவமனையில் சேர்ப்பதில் ஏற்பட்ட கால தாமதம் இருவரின் உயிரையும் பறித்து விட்டது. அருகில் உள்ள மற்றவருக்கும் ஏதெனும் துன்பம் ஏற்படும் போது, தன்னியல்பாக உதவி செய்யும் குணம் வெகுவாக மறைந்து வருகிறது.

இரண்டு வீட்டிற்கு இடையே உள்ள கம்பவுண்ட் சுவர், அடுத்த வீட்டுக்காரன் யாரு என்றே தெரியதளவிற்கே மாற்றி இருக்கிறது. வீட்டிற்கு ஒரு குழந்தை போதும் என்ற மனநிலை, அண்ணன்தங்கை, அக்காதம்பி பாசத்தை தூக்கி ஏறிந்து இருக்கிறது. இதே போல் சொல்லி கொண்டே போகலாம்

அறிவியல் வளர்ச்சியும், உலக பொருளாதார மாற்றமும் நம்மை சுயநல பாதைக்கு சிறப்பாகவே அழைத்து செல்கிறது. அந்த இடத்தில் உள்ள முக்கிய சிக்கல் தான், சமூகத்தில் இரு நபர்களுக்கு இடையேயான அன்பு துண்டிப்பு!!!

இவையெல்லாம் மெல்லிய நகர்வுகள் தான். ஆனால் மோசமாக சமூக மாற்றத்தின் தொடக்கப்புள்ளி!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment