நேற்று
மிக்சர் வாங்கி சென்றேன். மிக்சர் தின்று கொண்டு
இருக்கும் போது, திடீரென்று ஒரு
கோணல் புத்தி!!!
ஏற்கனவே
... பல கலவையாக இருக்கும் மிக்சரில்,
பொட்டு கடலை, நிலக்கடலை போன்ற
எல்லாவற்றினையும் தனியே பிரித்து உண்பதென்று!!!
பள்ளிக்கூடம்
செல்லும் நாட்களிலும், வேலையில்லாமல், தனியே தனியே பிரித்து
உண்ட நினைவு மனதில் வந்து
சென்றது.
இது காமெடியான நிகழ்வு தான்!!!! குழந்தை
கட்டிய மணல் வீட்டை இடித்து
தள்ளும் போது உண்டாகும் அற்ப
சந்தோஷம் , சிறு வயதினில்.... ஒழுங்காக
அடுக்கப்பட்டிருக்கும் விளையாட்டு பொருட்களை சிதறடிக்கும் உண்டாகும் மெளன சந்தோஷம், வீட்டின்
சுவற்றில் கிறுக்கும் போகும் உண்டாகும் சந்தோஷம்!!!...
இப்படியான குழந்தை தனமான மன
எண்ணங்களின் வெளிப்பாடுகள் !!!
ஏற்கனவே
ஒழுங்காக நடக்கும்/இருக்கும் அமைப்பில் மாற்றங்களை உண்டாக்கும் போது சிற்சில சந்தோஷங்கள்,
நொடி பொழுதில் வந்து மறையும். நாம்
அதை கவனிக்க தவறி விடுவோம்!!!
எவ்வளவு
பெரிய மனிதனாக இருந்தாலும், அவனுள்ளே
இருக்கும் குழந்தை மனம், அவ்வப்போது
வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.
இது போன்ற நிகழ்வுகளை தான்,
நாம் கவனிக்க தவறி விடுகிறோம்!!!
பணம், பொருள் போன்ற பெரிய
சந்தோஷங்களை மட்டும் உண்மையென நம்பி!!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment