காலை கதிரவனின்
நிமிட நேர பார்வையில்
பறந்து போகும் பனித்துளி
முற்றத்தில் வரைந்த
அரிசி மாவு கோலத்திற்கு
படையெடுக்கும் எறும்பு
காலை உணவுக்காக
கானமெங்கும் செல்லும்
காகத்தின் கரையும் ஓசை
பொட்டிலில்
மேய்ச்சலுக்காக காத்திருக்கும்
ஆவினங்களும் ஆடுகளும்
காரிருள் கவிழும் வேளையில்
கால்கள் பதித்த பாதையிலே
கண்கள் தந்த போதையிலே
மணம் தந்த இயற்கைக்காக
மனம் சிந்திய முத்துகள் இவை…..
மரு.பெ.இரமேஷ் குமார்

