பொது
மக்கள் பார்வையில்.... அரசியலும், நிர்வாகமும் ஒன்றாகவே தெரியும். ஆனால் உற்று நோக்கினால் தான், அதன் வித்தியாசத்தை புரிந்து கொள்ள இயலும்.
ஒரு
சிறந்த நிர்வாகி, ஒரு துறையில் நிபுத்துவணம் பெற்றவறாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்ல போனால்...... கல்வி பெறாதவர் கூட சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்.
உங்கள்
ஊரில் எத்தனையோ, சிறியது முதல் பெரிய கடைகள்/நிறுவனங்கள் இருக்கும். அதன் முதலாளிகள் பலர், பள்ளிப்படிப்பை கூட தாண்டி இருக்க மாட்டார்கள்!!! வரலாறு நெடுகிலும், இதற்கான எடுத்து காட்டுகள் உள்ளது.
நிர்வாகத்தில்
.... Generalist vs specialist என்ற
மிகப்பெரிய விவாத களமே உள்ளது.
படித்து
பாருங்கள் .. சில விஷயங்கள் புரியலாம்!!!
இந்தியாவை
பொறுத்துவரை, நிர்வாகத்தை Secretariat,
directorate என்று பிரித்து வைத்துள்ளனர்.
Secretariat- அமைச்சர்கள்
பெயரளவிலான தலைவராகவும், செயலாளர்கள் உண்மையான தலைவராகவும் செயல்படுகிறார்கள். கொள்கை முடிவுகள் பெரும்பாலும் இங்கு எடுக்கப்படும்.
directorate - இதில்
துறை சார்ந்த நிபுத்துவணம் பெற்றவர்களாக இருப்பார்கள். கொள்கை முடிவுகளை செயலபடுத்துவார்கள்.
இரண்டும்
இணைந்து செயல்பாட்டால் நிர்வாகம் சிறப்பாக அமையும். Secretariat -
Generalist வுடனும்,
directorate- specialist வுடனும்
ஒப்பிட முடியும்.
நிர்வாகத்தை
சரியாக புரிந்து கொள்ளுங்கள்!!! இரண்டாம் தர மக்களாக சிந்திக்காதீர்கள்.
- விவரம்
தெரியாதவன்
உங்களில்
ஒருவன்
உங்களை போல்
ஒருவன்
வேதை குமார்