Friday, May 24, 2019

தேர்தல் முடிவுகளும் புரிதல்களும்


மனிதன் அதிகளவு சிந்திக்க கூடியவன்(?). மனிதன் ஒரு விஷயத்தை நம்புவான்!!! அது சரியென்றே வாதிடுவான். அது தவறாக மாறும் போதும்….. தான் நம்பியதையே சரியென்று மீண்டும் வாதிடுவான்!!!! அதற்கான 1008 காரணங்களை கண்டுபிடித்து முட்டு கொடுப்பான். இது கூட ஒரு வகையில் நல்ல குணம் தான்!!! தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

ஆனால் அதீத நம்பிக்கையாக இருக்கும் போது, மூட்டு கொடுப்பதில் தான் பிரச்சனை!!! தவறுகளை திருத்த முயலா நிலைமீண்டும் மீண்டும்நான் நம்புவதே சரியென்ற மனநிலை!!! “ கடைசியில் தோல்வியே மிஞ்சம்!!!! இது அனைவருக்குமான பொதுமனநிலை!!! (எனக்கும் கூட உண்டு)

இதற்கான சம கால உதாரணம்!!!! தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பகிரப்படும் கருத்துகள்!!!! வாக்களிப்பது தனிமனித சுதந்திரம்!!! யாருக்கு வாக்களிக்க விருப்பமில்லை(NOTA) என்பதையே, தனிமனித சுதந்திரமாக கருதும் காலத்தில்…… வாக்களித்தவரை சாதி, மதம், இனம், மொழி, படித்தவர்/படிக்காதவர் என்று வேறுபாடுகளை வைத்து சிறுமைப்படுத்துவது அதிகமாகி இருக்கிறது. இது பெரும் பத்திரிக்கையாளர் தொடங்கி படித்த அறிவாளிகள் வரை செய்கின்றனர்.

இதை பற்றி எழுத வேண்டாம் என்று தான் எண்ணியிருந்தேன். ஆனால், சமூகத்தை பற்றி புரிதலில்… .பகுத்தறிவாதிகள் அதிகம் இருப்பதாக சொல்லும் தமிழகத்தில் இவ்வறான புரிதல் நிலையா????

அதிலும் literacy rate, human development index எல்லாம் துணைக்கு இழுக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் வோட்டிங் மிஷின்இந்த வருடம் கல்வியறிவு, மனித வள மேம்பாடு குறியீடு. அதை டெல்லி, சண்டிகர், ஹரியானா, ஆந்திரா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்!!!!
நீங்கள் சொல்வதில் எவ்வளவு அபத்தங்கள் இருக்கிறது என்பதற்கு!!!!

இன்னொன்றையும் சேர்த்து புரிந்து கொள்ளுங்கள்!!! கடந்த 5 நாடாளுமன்ற தேர்தலில் வந்த முடிவுகளை, நீங்கள் சொன்ன கருத்துகளை சேர்த்து பாருங்கள்!!! இந்தியா மட்டுமல்ல!!! தமிழகத்தையும் சேர்த்து தான்!!! நகைப்புக்கு உரியதாக அமையும்!!!

தேர்தல் முடிவுகள் வெளிவந்தாகி விட்டது. தோல்வி குறித்து விவாதிப்பது அந்தந்த கட்சியின் பணி!!!! அதை விடுத்து, நீங்கள் நினைத்தற்கு எதிராக ஒட்டு போட்டுதற்கு எளனம் செய்தீர்கள் என்றால்…….. உங்களின் கல்வியறிவினை எவ்வகையில் புரிந்து கொள்வது???? அடுத்தவரை ஏளனம் செய்ததாக நினைத்து, நீங்களே உங்கள் மதிப்பை குறைத்து கொள்கிறீர்கள்!!!

- உங்கள் பார்வையில் முட்டாள்


உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
 வேதை குமார்


No comments:

Post a Comment