“ அவனுக்கு
knowledge சுத்தமாவே இல்ல….. எப்படித்தான் இந்த posting வந்தான்னு தெரியல….”
“ என்
பிரண்டு…. செம talent ங்க….. ஆனா, recognition தான் கிடைக்கல…”
“ இந்த
அவார்டு கொடுக்கிற அளவுக்கு, அவருக்கு என்ன திறமை இருக்கு ?..”
” எங்க
பெரியப்பா இசை துறையில… எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?? இவருக்கு அவார்டு கொடுக்காம,… இப்ப இருக்கிற புள்ள பூச்சிக்கெல்லாம் அவார்டு கொடுக்கிறாங்க!!!”
இப்படியாக
பல சொல்லாடல்கள், பொது சமூகத்தில் உண்டு. பல மனிதர்கள் என்னிடம்
சொல்லியதும் உண்டு. ஏன்…. நானே பலமுறை சொல்லியிருக்கிறேன். இவை அணைத்தும் உண்மையா??? என்று மல்லாக்க படுத்து யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது ?!?!?!?
மேற்கண்ட
அனைத்தும், சுயத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளப் படுகிறதே தவிர, பொது பார்வையின் புரிதலில் அல்ல!!!! சாலையின் இரு ஒரங்களில் பயணிக்கிறதே தவிர, உண்மை என்னும் நடு சாலையில் வருவதே இல்லை!!!
நமக்கு
வேண்டியவர்/நண்பர்/உறவினர் என்பதனாலேயே, அவர் சிறிய செயல்களை செய்தாலே, மிகப்பெரிய செயலை செய்வது போன்ற பிம்பம் தோன்றும். ஆனால், பொது சமூகத்தில் வைத்து பார்க்கும் போது, அவருடைய செயல் சிறியதாகவும் இருக்கலாம்/ பெரியதாகவும் இருக்கலாம். ஒப்பிட்டு அளவில் பெரியதாகவும், சமூகத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கும்பட்சத்தில், நம்முடைய புரிதலை சரியென்று ஒத்து கொள்ளலாம்.
மாறாக,
ஒப்பிட்டு அளவில் சிறுமையாகவும், பொதுசமூகத்திற்கு எவ்வித பயனும் இல்லாமலும் இருப்பின், பொய் பிம்பமாகவே மட்டும் இருக்கும்….
இதே
நேரத்தில், நமக்கு தெரியாதவராக இருப்பின்…. அவருடைய நற்செயல்கள் நமக்கு தெரியாது. நமக்கு தெரியாதனாலேயே, அவருடைய செயலை சிறுமைப்படுத்த ஆரம்பித்து விடுவோம்!!! மாறாக, அவருடைய செயலும் ஒப்பிட்டு அளவில், சிறுமையாக இருப்பின், நம்முடைய எண்ணத்தில் தவறில்லை!!!
மொத்தத்தில்,
ஒருவருடைய திறமையை, நம்முடைய கண்ணோடத்திலேயே பார்க்கிறோமே தவிர, பொது பார்வையிலிருந்து பார்ப்பதில்லை!!!!
ஒருவரை
அங்கீகாரம் செய்வதில் பிரச்சனை எவ்வளவு இருக்கிறதோ….. அதே அளவிற்கு, அவரை புரிந்து கொள்வதில் இருக்கிறது!!!! அங்கீகாரங்கள் செயல் அடிப்படையில் நிர்ணயம் செய்யாமல், நம்முடைய புரிதல் அடிப்படையிலே முடிவு செய்யப்படுகிறது!!! இப்புரிதலை அறிவு சார் சமூகத்தின் விழ்ச்சியாகவே பார்க்கிறேன்!!!
உங்களில்
ஒருவன்
உங்களை போல்
ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment