Monday, September 30, 2019

Self Neglect


Medical Negligence என்ற வார்த்தை மருத்துவ துறையில் முக்கியமான சொல்லாடல்!!! மருத்துவர்…… தன் நோயாளிகளினை சரியாக கவனிக்காத நிலை!!! ஆனால் மருத்துவர்களே ….. தன் உடல்நிலை பார்த்து கொள்ளாத நிலை அதிகமாகி வருகிறது. அதாவது Self Neglect என்ற பழக்கம்!!!!

Self Neglect என்ற பழக்கம் மருத்துவத்துறை மட்டுமல்ல!!! அனைத்து துறை பணியாளர்களிலும் அதிகமாகி வருகிறது. உடலையும் மனதினை பற்றி யோசிக்காமல் பொருளீட்டல் மட்டும் நோக்கமாக உலகம் மாறி வருகையில், இது தவிர்க்க முடியாமல் போய் விட்டது!!!

மற்றவர்களின் உடல் நிலை கவனிப்பவர்கள்…. தன்னுடைய உடல்நிலை கவனிக்காமல இருப்பர்கள்?? “ என்ற பொது பார்வையினால், மருத்துவ துறையில் நடக்கும் வயது குறைந்த மரணம் பேசு பொருளாகிறது. மேலும் ஒய்வின்றி உழைக்கும் போது மன அழுத்தம் அதிகமாகி இளம் வயதில் மாரடைப்பு அதிகமாகிறது.

பொது சமூகம் மருத்து பணியாளர்களின் தனியர் வாழ்க்கை(personal life) சிறப்பாக இருப்பதாக நினைத்து கொள்கிறது. ஆனால் உண்மை வேறு!!! சனி, ஞாயிறு கூட விடுமுறை இல்லாமல்….. தீபாவளி பொங்கல் கூட விடுமுறை இல்லாமல்….. குடும்ப நிகழ்வுகள் கூட கலந்து கொள்ளாமல்ஏன் குடும்பத்தில் கூட ஒழுங்காக பேசாமல்….. வேலை வேலை என்று செல்லும் போது மன அழுத்தம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்!!!

கடந்த இரு வாரங்களில் 4 சித்த மருத்துவர்களின் மரண செய்தி கலக்கமடைய செய்துள்ளது. இது குடும்பத்திற்கும் சித்த மருத்துவ துறைக்கும் பேரரிழப்பு.

பொருளீட்டல் சார்ந்த போட்டி உலகில், மன அழுத்தத்தை போக்க…. பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்வில் நம்மை ஈடுப்படுத்தி கொள்ள வேண்டும். பாட்டு கேட்கலாம்!! விளையாடுவதாக இருக்கலாம்!!! புத்தக வாசிப்பாக இருக்கலாம்!!! சமூக சேவையாக இருக்கலாம்!!! நெடு தூர பயணமாக இருக்கலாம்!!! எழுதுவதாக இருக்கலாம்!!!

எனக்கும் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க….. புத்தக வாசிப்பு, முகநூலில் எழுதுவது, வார இறுதியில் TNPSC வகுப்பு என பல்வேறு செய்கைகளை செய்வது வருகிறேன். அதில் புதிதாக இணைந்துள்ளது நண்பர்களுடான நெடும் பயணம்!!!

நேற்றைய தினம்நண்பர்களுடன் சேர்ந்து இம்காப்ஸ் வருடாந்திர கூட்டத்திற்கு சென்று வந்தோம்!!! நமது அன்றாட அலுவல்களினை விடுத்து…. நண்பர்களுடன் கேலி கிண்டலுடன் உரையாடி…. புதிய இடங்களினை பார்வையிடும் போது மனம் புத்துயிர் பெறுகிறது!!! ( யானைகள் புத்தூயிர் பயணம் போல)

விடியற்காலை…. நான்கு சக்கர வாகனத்தில் கிளம்பி சென்னைக்கு அடைந்தோம்!!! நட்புகள், சீனியர், சூனியர் மருத்துவர்கள் என கூடி பேசிமதிய உணவை உண்டு….. பரிசுகளோடு திரும்பினோம்!!! பாண்டிச்சேரியில் ஆரோவில் பார்ப்பதற்கு பிளான் பண்ணி…. கடைசியில் கடலூர் சில்வர் பீச்சை மட்டும் கண்டு , செல்பீகளோடு வரலாற்றை பதிவு செய்து திரும்பினோம்!!!

நாளைய நல்வாழ்க்கைக்காக…. இன்றைய மன ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள்!!! சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Thursday, September 26, 2019

இயற்கையும் எரிபூச்சியும்


கிராமங்களில்…… மாலை 6-7 மணியளவில் இருசக்கர வாகனங்களை ஒட்டுபவது சிரமம்!!! கண்களில் பூச்சி வந்து விழும்!!! அதிலும் எரி பூச்சி விழுந்தால் கஷ்டம்!!! தலை கலவசம் அல்லது கண்ணாடி போட்டால் தான், எந்த பிரச்சனையில்லாமல் செல்லலாம்.

ஆனால்கஜா புயலுக்கு பிறகு…. பூச்சிகளின் தொந்தரவு குறைந்திருந்ததுஏன் இல்லை என்றே சொல்லலாம். இதை சந்தோஷமாக எடுத்து கொள்ள முடியாது!!!

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்…. பல்வேறு வகையானது!! அதில் சுற்றுபுற சூழல் சார்ந்த மிக மோசமானது. பல்வேறு மரங்கள் முறிந்தது. கஜா புயலை தொடர்ந்து…. வடகிழக்கு பருவ மழை பெரியதாக இல்லை!!!

ஆதலால்…. கடந்த கோடை மிகவும் மோசமாக இருந்தது!!! எப்போதும் உள்ள வெயில் உக்கிரம் தான்!!! ஆனால்…. மரங்கள் இல்லாததால் மோசமாக தெரிந்தது!!! பல இடங்களில் தண்ணீர் பஞ்சமும் உபரியாக வந்து விட்டது.

இருந்த போதிலும் ……… தென்மேற்கு பருவமழையினால் வேதாரண்யம் பகுதிக்கு மழை இல்லையென்றாலும்வெப்ப சலனம், மேலடுக்கு சுழற்சி போன்றவற்றால்…. மழை விட்டு விட்டு பெய்தது!!! அதோடு காவிரி ஆற்று நீரும் சேர்ந்து கொண்டது!!

கடந்த ஒரு மாதமாக…… தொடர்ந்து மழை பெய்ததில்….. மீதமிருந்த மரங்கள் தழைந்தோங்கி வளர்ந்து நிற்கிறது. சிறு செடிகளிலும் அதிகளவில் முளைத்துள்ளது. பெரும்பாலும் களை செடியாக இருந்தாலும்…. பார்ப்பதற்கு பசுமையாக இருக்கிறது!!!

இதோடு…. இப்போது….. எரிபூச்சிகளிலும் விழவும் ஆரம்பித்து விட்டது!!! சுற்றுபுற சூழல் மீண்டும் புத்துயிர் பெற்று விட்டது போலும்!!! ஈசல் உருவாக்கம்…… கம்பளி பூச்சி உருவாதல்….. ஒலை பாம்பு வருதல்…. என இயற்கையின் சமிக்கைகள் நன்றாக இருக்கின்றது!!! வருகின்ற வட கிழக்கு பருவ மழை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்!!!

துன்பத்திலும் இன்பம் காண முயல்வோம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Sunday, September 22, 2019

ம வாய்ப்பு - வேறொரு கோணம்!!!


சம வாய்ப்பு குறித்த புரிதலில்….. வேறொரு கோணம்!!!

சமவாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி!! அவ்வாறு முடியாத தருணத்தில் ….. இருக்கும் சூழ்நிலையை வைத்து முன்னேற வேண்டும்!!! எதுவும் கிடைக்கவில்லை என்று வீட்டில் உட்கார்ந்திருந்தால்…. எதுவும் நடக்காது!!! கடைசிவரை உட்கார்த்திருக்க வேண்டியது தான்!!!

ஒரு கிராமத்தில் பிறந்து…. டீக்கடைக்காரனின் ஏழை மகன் நான்!!! பத்தாம் வகுப்பு வரை இலவச மதிய உணவை உண்டு வளர்ந்தவன் (12 வகுப்பு வரை கொடுக்கவில்லை….)!! இளம் வயதிலிருந்து பொருளாதார ரீதியாக பிரச்சனையை சந்தித்தவன்!!! கல்லூரி சென்ற பிறகு……. நிலை இன்னும் மோசம்!!!! அதனையே நினைத்து உட்கார்ந்திருந்தால்,…. இன்றும் அரசு மருத்துவராக இருந்திருக்க முடியாது.

இரு இளைஞர்களை கற்பனை செய்து கொள்வோம்!!! ஒருவன் அனைத்து செல்வங்களை பெற்றவன்!! மற்றொருவன் ஏழையாக இருப்பவன்!!! இருவருக்கும் இடையில் சமமான சூழ்நிலை இல்லை என்பது உண்மை!!! ஆனால் இருவரின் சிந்தனை ஒரே மாதிரியாக இருக்குமா??

பணக்காரரின் மகனுக்கு…. தன்னுடைய சூழ்நிலையை தக்க வைத்து கொள்ள வைத்து கொள்ள வேண்டும் என்று மட்டும் தான் எண்ணுவான்!!! ஆனால்…. ஏழையின் மகனோ….. அந்த சூழ்நிலையினை விட்டு வெளியேறி …. மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணுவான்!!!

இருவரில்..... ஏழையின் எண்ணம் வலுவாக இருக்கும்!!! சூழ்நிலையினை தக்க வைத்து கொள்வனின் எண்ணத்தை விட, சூழ்நிலையினை விட்டு வெளியேற துடிக்கும் எண்ணத்தின் மதிப்பு அதிகம்!!! இன்றைய பெரிய சாதனையாளர் பெரும்பாலும் கடுமையான காலத்தை அனுபவித்தவர்!! டெண்டுல்கர் தொடங்கி இன்றைய மோடி வரை!!!

ஆனால் நேர் எதிர்மாறாக…… பணக்கார வாரிசுகளில் இரண்டாம் மூன்றாம் தலைமுறையில் வீழ்ச்சி நிச்சயம்!!! பொருளாதார சூழற்சி போல….. குடும்ப தலைமுறைகளிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது!!! உங்களது சுற்றப்புறத்தினை கவனித்தல் புரியும்!!!

ஏழை மாணவன்…. தனது சூழ்நிலையை எதிர்மறையை சிந்தனை தவிர்த்து…. நேர்மறையாக சிந்தித்தால்எளிதாக வெற்றி பெறலாம்!!! ஆனால்…. நாம் அவ்வறாக எண்ணுவதே இல்லை!!!

இப்போது சொல்லுங்கள்!!! ஒரு சாதனையாளனை உருவாக்குவது எந்த சூழ்நிலை சிறந்தது ??? பணக்கார மகனா?? ஏழை மகனா???... நிச்சயமாக ஏழை மகனின் சூழ்நிலை தான்!!! இவ்வாறு சிந்தித்தாலே வெற்றி நிச்சயம்!!!

சரிஅனைத்தும் ஏழைகளும் வெற்றி பெற்று விடுவார்களா?? இல்லை!!! பெண்மை எப்படி சிறந்த ஆண்மையை தேர்ந்தெடுக்க விரும்புகிறதோ…. அது போல்…. பூமி தாயும் மிகச்சிறந்த குடிமக்களை தேர்ந்தெடுக்கும்!!!! தப்பி பிழைத்தல் விதி தான்!!!

ஏழை மகனாக சூழ்நிலையில் இருந்த வெளியேற ஏதேனும் ஒன்று கைக்கொடுக்கும்!!! அது கல்வியாக இருக்கலாம்!! கலையாக இருக்கலாம்!!! விளையாட்டாக இருக்கலாம்!!!

எனக்கு கல்வி கை கொடுத்தது!! கிராமத்து மாணவன், …. பணத்தின் திண்டாடுவன் என்ற ரீதியில் நிறைய அவமானங்களை சந்திருக்கிறேன். அந்த அவமானங்களும், என்னுடைய மூலதனம்!!!
அவமானங்களை ஏற்படுத்தியவர்களுக்கு நன்றி!!!

ஆகையால்….. பாகுபாடு நிறைந்தது தான் சமுதாயம்!! எல்லாருக்கும் சூழ்நிலைகள் சரியாக அமைந்து விடுவதில்லை!!! அதனை அமைத்து கொள்வது தான் மனிதனின் ஆறாம் அறிவு!!! வெற்றி உங்கள் கையில்!!! என்றும் சூழ்நிலையை நினைத்து கவலை பட வேண்டாம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


சமவாய்ப்பு சாத்தியமா?


சமவாய்ப்பு குறித்து தொடர்ந்து பேசப்படுவதால்…. அதனை குறித்து , எனது இருவேறு பார்வைகளே!!! இப்பதிவின் அடிநாதம்!!! நீட் தேர்வின் போதும்…. இப்போதும் 5,8 வகுப்பு தேர்வின் அறிவிப்பினை தொடர்ந்து…. இதை பற்றி பேச வேண்டியுள்ளது!!!

இந்தியாவின் வாழும் அனைவருக்கும் சமத்துவ உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஷரத் 14-18 கூறி உள்ளது அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலையில் இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசுகிறது.

ஆனால் பொருளாதார சமத்துவத்தை அரசியலமைப்பு அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் மூலம் பகுதி 4 கூறப்பட்டுள்ளது. ஆனால் அதனை கட்டாயமாக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கூறவில்லை!!!! காரணம் எளிது!!! இந்தியாவின் பொருளாதார நிலை!!!

சுதந்திரமாகி 50 ஆண்டுகள் கழித்து சிலவற்றை……. அரசு சட்டமாக கொண்டு வந்துவிட்டது. 14 வயதிற்குட்பட்ட அனைவரும் ஆரம்ப கல்வி, கிராம புறங்களில் 100 கட்டாய வேலை, உணவு பாதுகாப்பு சட்டம்!!! இந்தியாவின் பொருளாதார நிலை சற்று முன்னேறியதால் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாம் எட்ட வேண்டியது வெகு தொலைவில்!!!!

இன்னும் வறுமை கோட்டு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 20%. இந்தியாவின் சராசரி மாத வருமானம் 10,000 கீழ்!!! அதிலும் 85% சதவீத வருமானம், இந்தியாவின் 10 % ,மக்களிடம் உள்ளது என்பது வேதனை!!!

மேற்கண்டவை யெல்லாம் இந்தியாவின் சூழ்நிலை!!! இந்த சூழ்நிலையோடு சேர்த்து தான், சமவாய்ப்பு பற்றி பேச வேண்டியுள்ளது!!!

சமவாய்ப்பு என்பது இரண்டு நிலைகளில் …. நான் புரிந்து கொள்கிறேன். ஒன்று சமூகம் சார்ந்த சமவாய்ப்பு!!! மற்றொன்று பொருளாதாரம் / அடிப்படை வசதி சார்ந்த சமவாய்ப்பு!!!

இந்தியா என்று சாதி, இனம், மொழி, இனம், பாலினம் போன்ற பல்வேறு பாகுபாடுகள் சார்ந்த நாடு!! அனைத்தும் முழுவதும் நீக்கி சமத்துவம்/சமவாய்ப்பு அளிப்பது சாத்தியமா ?? என்பதை உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.

அடுத்தது அடிப்படை வசதிகள்(உணவு/உடை/இருப்பிடம்) சார்ந்த சமவாய்ப்பு!!! உணவு பாதுகாப்பு சட்டம் 2013 மூலம் அனைவரும் அரிசி/கோதுமை வழங்கப்பட்டாலும், அனைத்தும் மக்களுக்கு சாத்தியம் குறைவு!!! இப்போதும் இரவு உணவில்லாமல் உறங்குவர்கள் ஏராளம்!!!

கன்கீரிட் வீடு உடையவர்கள் 30-40 சதவீதம் இருந்தாலே மகிழ்ச்சிக்குரிய விஷயம்!!! சாலை, மின்சாரம், குடிநீர், கேஸ் அடுப்பு என பட்டியல் நீளும்!!! அடுத்தது தான் கல்வி பற்றி பேச முடியும்!!!

இவ்வளவு பிரச்சனைகளை உடனே தீர்க்க இயலுமா???. முடியும் ??? ஏற்கனவே 60 ஆண்டுகள் கடந்து விட்டோம்!!! ஆனால் இன்னும் சில காலங்கள்…. அடிப்படை வசதிகளை பெறுவதற்கு அனைவரும் காத்திருக்க வேண்டும்!!!.

முடியாதுஎன்பதை …. இப்படி சுத்தி சுத்தி சொல்றியே!!!

உனக்கு சம வாய்ப்பு வேண்டாம்? போல ? “ என்று நீங்கள் யோசிக்கலாம்

எனக்கும் உங்களை போல்….. சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆசை தான்!!! ஆனால்… .அதில் உள்ள பிரச்சனைகளையும், உண்மையான தகவல்களை அளிக்கிறேன்!!! அவ்வளவு தான்!!! இன்னும் சொல்ல போனாலும்….. சம வாய்ப்பு அளிக்கப்படாமல் பாதிக்கப்பட்டவனில் நானும் ஒருவன்!!!

இந்த இடத்தில்இன்னொரு புரிதலை சேர்த்து சொல்கிறேன். அடிப்படை வசதிகள் இன்னும் 20 வருடங்களில்…. அனைத்து மக்களும் அடைந்து விட்டதாக வைத்து கொள்வோம்!!! அந்த தருணத்தில்வேறொன்று பொருட்கள்/பணி மனிதனின் அடிப்படையாக தேவையாக மாறி இருக்கும்!!! மனிதனின் தேவைகள் காலத்திற்கு ஏற்றமாறி மாற கூடியது. ஆதலால்பாகுபாடு இல்லாத உலகம் சாத்தியமா??? உங்கள் கைகளிலே விட்டு விடுகிறேன்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Thursday, September 19, 2019

5 வகுப்பு பொது தேர்வும், எனது புரிதலும்


எனக்கு நினைவு தெரிந்தவரை… .மூன்றாம் வகுப்பிலிருந்து தேர்வு எழுதியதாக ஞாபகம்!!!! இடைநிற்றல் தடுப்பத்தற்காக…. எட்டு வகுப்பு வரை தேர்வு முறையை ரத்து செய்தது மத்திய அரசு!!! குழந்தைகளுக்கு மன அழுத்தம் தர வேண்டாம் என்பதற்காக, அனைவரும் வரவேற்றனர்.

மருத்துவ ரீதியாக பார்த்தால், மனித மூளை முழு வளர்ச்சியும் 5-10 வயதிற்குள் முடிந்து விடும்!!! இந்த தருணத்தில் அடிப்படை செயல்களை கற்று கொடுத்தால் நன்றாக இருக்கும். அதை விடுத்து மனப்பாடம் செய்து வைத்தால், குழந்தைகளுக்கே மன அழுத்தம் வந்து விடும்!!!

மனித இனம் காலத்திற்கேற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. பெற்றொர்களை விட குழந்தைகள் அறிவுபூர்வமாகவே இருக்கிறார்( தாய் எட்டடிப் பாய்ந்தால் குழந்தை 16 அடி பாயும்). இதற்கு ஏற்ப பாட திட்டங்களும் மாறி வருகிறது.

முன்பெல்லாம் 3 ஆம் வகுப்பிலிருந்து தான் ஆங்கில எழுத்துகளே கற்று தரப்படும். ஆனால்இன்றோ…. எல்கேஜியிலிருந்தே ஆங்கில எழுத்துகள் கற்று தரப்படுகின்றது. இவ்வளவு முன்னரே தேவையா?? என்றால் நிச்சயமாக கிடையாது. என்னை பொறுத்தவரை….. 5 வயதிற்கு பிறகு பள்ளியிற்கு அனுப்புவதே மிக சிறந்தது!!!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.... நடந்த நிகழ்வை…. இத்தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன். மருத்துவம் பார்க்க வந்த குழந்தை( 3 வயது), தன் அப்பாவிடம் டைம் ஆயிச்சு!!! என்றது எதுக்கென்று விசாரித்தால்…. டியூசன் என்றார். பள்ளிக்கூடத்தில் நடத்து பாடத்தை நடத்தும் அளவுக்கு பெற்றோர் படிக்கவில்லை என்பது ஒரு காரணம்!!! குழந்தை வைத்து சமாளிக்க முடியவில்லை என்பது மற்றொரு காரணம்!!!!

சரிவிஷயத்திற்கு வருவோம்!!! நீங்கள் 8 வகுப்பு படித்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம்!!! உங்கள் தேர்வு இல்லை…. அனைவரும் தேர்ச்சி என்றால், புத்தகங்களை படிப்பீர்களா??? நிச்சயமாக மாட்டோம்(என்னையும் சேர்த்து தான்). தேவை ஏற்படாமல் எதையும் செய்ய மாட்டோம்!!! எதற்காக தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டும்? “ என்ற எண்ணம் வருவது இயல்புதானே??

ஆனால்ஆரம்ப கல்வி மற்றும் நடுநிலை கல்வியின் அடிப்படையினை கொண்டு தான்…. உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியின் பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன…… 8 வருடங்களாக எதையும் கற்று கொள்ளாமல்…. திடீரென்று படி என்றால்???? மாணவன் என்ன செய்வான்??? அதோடு மட்டுமல்லாமல்….. புதிய பாடத்திட்டம் கடின தன்மையும் அதிகமும் கூட!!!

இதோடு சம கால உலக சூழலையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. முன்பொரு காலத்தில் பள்ளிக்கூடம் முடிந்திருந்தாலே, ஆசிரியர் பணிக்காக தகுதியாக வகுக்கப்பட்டது. பிறகு பட்டய படிப்பு கொண்டு வரப்பட்டது. இப்போது தகுதி தேர்வோடு கூடிய போட்டி தேர்வு வந்து விட்டது. வருங்காலத்தில்…. ஐந்து/பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான், ஆசிரியர் பணியில் தொடரலாம் என்ற நிலை கூட வரலாம்!!!

ஏன் இத்தனை மாற்றம்!!!!போட்டிகளே இல்லாத உலகத்திலிருந்துபோட்டி நிறைந்த உலகத்தினை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்!!! இப்போதைய போட்டி உலகம் பல்திறன் கொண்டவர்களை வரவேற்கும்!!! திறமையற்றவனை புறம் தள்ளும்!!! டார்வினின் தப்பி பிழைத்தல் விதி தான்!!! எளிதாக சொல்ல வேண்டுமானால்…. முன்பெல்லாம் ஹீரோவிற்கு நடிக்க தெரிந்தால் போதும்!!! ஆனால் இன்றோநடிப்பதை தாண்டி…. டான்ஸ்ஆக்சன் …… சிங்கிங் என அனைத்தும் தேவைப்படுகிறது.

அடுத்ததாக…. தேர்வு என்ற உடனே பயம் தொற்றி கொள்ளுகிறது. அதுவும் நீட் வந்தவுடன் நிலைமை இன்னும் மோசமானது!!! தேர்வுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து…. தேர்வு குறித்த பயம் அடையாளமாக வெளி வருகிறது.

நடைமுறையில்…. ஒருவனை ஆய்வு செய்வதற்கு/ தரத்தை நிர்ணயம் செய்வதற்கு தேர்வை தவிர வேறென்றும் இல்லை என்பது நிதர்சனம்!!! ஆதலால்தேர்வை ஏற்று கொள்வது காலத்தின் கட்டாயம்!!! குழந்தைகளுக்கு ஏற்ப மிக எளிமையான தேர்வுகளை நடத்தும் போது…. பெரியளவில் பாதிப்பு ஏற்படாது!!!!

இறுதியாக…… மனித மனம் கட்டாயத்தில் மட்டும் பணியாற்றும்!!!! உலக போட்டிற்கு ஏற்ப நம்மை தயார் படுத்தி கொள்வதும் அவசியம்!!!! குழந்தைகளின் வயது குறைவு என்றாலும்……. எளிமையான தேர்வு வைப்பில் குறையென்று இல்லை கண்ணே!!!


உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Wednesday, September 18, 2019

தேர்வுகளும் சமூக போக்கும்


ஆசிரிய பணியின் மீதிருந்த அவநம்பிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் வெகுவாக மாறியிருக்கிறது. நான் கடந்த காலங்களில் பாடம் நடத்தியதும் வினாக்கள் தயாரித்ததும்…… பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்து இருக்கிறது. அச்செய்கையின் போது…. எனக்கு உண்டாகும் சங்கடங்கள் அடிப்படையில் சம கால பிரச்சனையின் புரிதலே!!! இரண்டு நிகழ்வுகள்!!!

1. பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பாடங்களை எடுப்பதற்கு முன்னால்… .அதனை குறித்து அடிப்படை தகவல்களை நடத்தி விட்டுபிறகு பாடங்களை எடுப்பது வழக்கம். இவை பெரும்பாலும் தேர்வுகளில் கேட்கபடாது!!! ஆனால் பின்னால் நடத்த கூடிய பாடங்களினை புரிந்து கொள்வதற்கு அவசியம்!!!!

சார்!! எக்சம் வர்றத மட்டும் நடத்துங்க!!! இவ்வளவெல்லாம் தேவையில்லை

சார்ரொம்ப டெப்த்தா நடத்துறா…. இந்த எக்சமுக்கு இதெல்லாம் தேவையில்லை

இப்படியெல்லாம் வேண்டாம் சார்!!! எக்சம் ல கேட்கிற கேள்விகளை மட்டும் நடத்துங்க!!!!

இந்த புரிதல்கள் மட்டும் பதில்களாக மாணவர்களிடமிருந்தும், பயிற்றுனர் களிடமிருந்து வந்தது.

தேர்வுக்கு என்று நடத்தாமல்…. அதனை பற்றிய முழுமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு நடத்துவதே எனது விருப்பம்!!! முழு மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தியெடுப்பதில் எனக்கு விருப்பமில்லை!!! இதன் பலனை 1-2 ஆண்டுகள் கழித்தே புரிந்து கொண்டனர் என்பது வேறு விஷயம்.

நிற்க!!!!

சமூகத்தின் எண்ணமும், மாணவர் மற்றும் பயிற்றுநர்களின் எண்ணமும்…. ஏன் பெரும்பாலான பயிற்சி நிறுவனங்களின் எண்ணமும் விருப்பமும்…… நமக்கு தேவை அரசு வேலை!!! அதற்கு தேர்வில் பாஸ் பண்ண வேண்டும்!!! அதற்கு மானப்பாடம் ஒப்புவித்தல் போதும்!!!

2. போட்டி தேர்வுகளுக்கு வினாக்கள் தயாரித்து அளித்து இருக்கிறேன். என்னுடைய கேள்விகள் பெரும்பாலும் கடினமாக இருப்பதாக மாணவர்களின் எண்ணம்!!! இது பொருளாதாரம், அரசியல் அறிவியல் மட்டுமல்ல!!! சித்த மருத்துவ தேர்விற்கு அதே நிலை தான்!!!

நிற்க!!!

கேள்விகள் புரிந்து கொண்டும் விடை அளிக்கும் அளவில் இருக்கும்!!! மாறாக மானப்பாடம் செய்ததை ஒப்பிக்கும் விதமாக இருக்காது!!! ஆதலால் கடினமாக இருப்பதாக மாணவர்களின் திண்ணம்!!! மாறாக பெரும்பாலான தேர்வு நிறுவனங்களின் கேள்வி தாளும் மானப்பாடம் செய்வதாக அமைகிறது!!! அரசு தேர்வுகளும்…. வாந்தியெடுப்பதாக அமைவது நிதர்சனம்!!

மேற்கண்ட இரு விஷயங்களிலும்…. ஒரு செய்தி தெளிவாக தெரியும்!!! நமக்கு தேவை வெற்றி!!! அதனை புரிந்து கொண்டு படித்தால்நீண்ட காலம் பிடிக்கும். மாறாக மானப்பாடம் செய்தால் மூன்று மாதம் படித்தால் கூட போதும்….. பாஸ் ஆகி விடலாம்!!!

இந்த மனநிலை சமூகம் முழுவதும் வியாதித்திருக்கிறது!!! இன்னும் சொல்ல போனால்….. முதல்நிலை தேர்வு, முதனிலை தேர்வு, நேர்முக தேர்விற்கு என்ன வித்தியாசம் ??? என்று கூட வித்தியாசம் தெரியாமல் பாஸ் செய்பவர்கள் அதிகம்!!!

பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடங்கள்…… பெரும்பாலும் பாட புத்தகங்களே!!! அப்படி இருக்கையில்…… ஏன் பயிற்சி மையங்களை அணுக வேண்டும்!!! அங்கு போனால்குறுக்கு வழிகளை கற்று கொடுப்பர்கள் என்று தானே??? மாறாக…. புரிந்து கொள்ளும் திறனுக்காக செல்கிறோம்??? (UPSC தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள்…. TNPSC தேர்வில் பாஸ் செய்வது கடினம்….. ஏன் என்றால்மேற்கண்டவையே விடைகள்)

இவ்வாறு தேர்வின் வழிமுறையை குறுக்கு வழியினால் சிதைத்து…. பிறகு தேர்வு சரியில்லை என்று வாதிட்டு கொண்டிருப்பதே நமது வாதமாகிறது?????

பிரச்சனை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்பதே….. நமக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்