சமவாய்ப்பு
குறித்து தொடர்ந்து பேசப்படுவதால்….
அதனை குறித்து , எனது இருவேறு பார்வைகளே!!! இப்பதிவின் அடிநாதம்!!! நீட் தேர்வின் போதும்…. இப்போதும் 5,8 வகுப்பு தேர்வின் அறிவிப்பினை தொடர்ந்து…. இதை பற்றி பேச வேண்டியுள்ளது!!!
இந்தியாவின்
வாழும் அனைவருக்கும் சமத்துவ உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஷரத் 14-18 கூறி
உள்ளது அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலையில் இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசுகிறது.
ஆனால் பொருளாதார
சமத்துவத்தை அரசியலமைப்பு அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் மூலம் பகுதி 4
கூறப்பட்டுள்ளது. ஆனால் அதனை கட்டாயமாக அரசு செயல்படுத்த வேண்டும் என்று
கூறவில்லை!!!! காரணம் எளிது!!! இந்தியாவின் பொருளாதார நிலை!!!
சுதந்திரமாகி 50
ஆண்டுகள் கழித்து சிலவற்றை……. அரசு சட்டமாக கொண்டு வந்துவிட்டது. 14
வயதிற்குட்பட்ட அனைவரும் ஆரம்ப கல்வி, கிராம புறங்களில்
100 கட்டாய வேலை, உணவு பாதுகாப்பு சட்டம்!!! இந்தியாவின்
பொருளாதார நிலை சற்று முன்னேறியதால் கொண்டுவரப்பட்டது. ஆனால் நாம் எட்ட வேண்டியது
வெகு தொலைவில்!!!!
இன்னும் வறுமை
கோட்டு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 20%. இந்தியாவின் சராசரி மாத வருமானம்
10,000 கீழ்!!! அதிலும் 85% சதவீத வருமானம், இந்தியாவின் 10 %
,மக்களிடம் உள்ளது என்பது வேதனை!!!
மேற்கண்டவை
யெல்லாம் இந்தியாவின் சூழ்நிலை!!! இந்த சூழ்நிலையோடு சேர்த்து தான், சமவாய்ப்பு பற்றி பேச வேண்டியுள்ளது!!!
சமவாய்ப்பு
என்பது இரண்டு நிலைகளில் …. நான் புரிந்து கொள்கிறேன். ஒன்று சமூகம்
சார்ந்த சமவாய்ப்பு!!! மற்றொன்று பொருளாதாரம் / அடிப்படை வசதி சார்ந்த
சமவாய்ப்பு!!!
இந்தியா என்று
சாதி, இனம், மொழி, இனம், பாலினம் போன்ற பல்வேறு பாகுபாடுகள் சார்ந்த
நாடு!! அனைத்தும் முழுவதும் நீக்கி சமத்துவம்/சமவாய்ப்பு அளிப்பது சாத்தியமா ?? என்பதை உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.
அடுத்தது
அடிப்படை வசதிகள்(உணவு/உடை/இருப்பிடம்) சார்ந்த சமவாய்ப்பு!!! உணவு பாதுகாப்பு
சட்டம் 2013 மூலம் அனைவரும் அரிசி/கோதுமை வழங்கப்பட்டாலும், அனைத்தும் மக்களுக்கு சாத்தியம் குறைவு!!! இப்போதும் இரவு உணவில்லாமல்
உறங்குவர்கள் ஏராளம்!!!
கன்கீரிட் வீடு
உடையவர்கள் 30-40 சதவீதம் இருந்தாலே மகிழ்ச்சிக்குரிய விஷயம்!!! சாலை, மின்சாரம், குடிநீர், கேஸ் அடுப்பு என
பட்டியல் நீளும்!!! அடுத்தது தான் கல்வி பற்றி பேச முடியும்!!!
இவ்வளவு
பிரச்சனைகளை உடனே தீர்க்க இயலுமா???.
முடியும் ??? ஏற்கனவே 60 ஆண்டுகள் கடந்து விட்டோம்!!! ஆனால் இன்னும் சில காலங்கள்…. அடிப்படை வசதிகளை பெறுவதற்கு அனைவரும் காத்திருக்க வேண்டும்!!!.
” முடியாது… என்பதை …. இப்படி சுத்தி சுத்தி சொல்றியே!!!”
”உனக்கு சம வாய்ப்பு வேண்டாம்? போல ? “ என்று நீங்கள் யோசிக்கலாம்…
எனக்கும் உங்களை
போல்….. சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆசை தான்!!!
ஆனால்… .அதில் உள்ள பிரச்சனைகளையும், உண்மையான தகவல்களை அளிக்கிறேன்!!! அவ்வளவு தான்!!! இன்னும் சொல்ல போனாலும்….. சம வாய்ப்பு அளிக்கப்படாமல் பாதிக்கப்பட்டவனில் நானும் ஒருவன்!!!
இந்த இடத்தில்…இன்னொரு புரிதலை சேர்த்து சொல்கிறேன். அடிப்படை வசதிகள் இன்னும் 20
வருடங்களில்…. அனைத்து மக்களும் அடைந்து விட்டதாக வைத்து
கொள்வோம்!!! அந்த தருணத்தில்… வேறொன்று பொருட்கள்/பணி மனிதனின் அடிப்படையாக
தேவையாக மாறி இருக்கும்!!! மனிதனின் தேவைகள் காலத்திற்கு ஏற்றமாறி மாற கூடியது.
ஆதலால்…பாகுபாடு இல்லாத உலகம் சாத்தியமா??? உங்கள் கைகளிலே விட்டு விடுகிறேன்.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment