Friday, April 18, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே

        இன்று 7 வது ஐ. பி. எல்  UAE தொடங்கிறது. சூதாட்டத்திற்கும், பணத்திற்கும், ஆபாசத்திற்கும் பெயர் பெற்ற  ஐ. பி. எல் , சூதாட்ட இடமான UAE நடைபெறுவது காலத்தின் கட்டாயம் என்று சொல்லி கொள்ள வேண்டியது தான்…………………….. விளையாட்டு என்ற உணர்வை மறக்க, மறுக்க செய்து விட்டது. பணம் எப்போது உள்ளே வருகிறதோ, அப்போதே!!! விளையாட்டின் தனித்துவம் மறைந்து விட்டது
        ஐ. பி. எல் போட்டி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதனை கொண்டு கால்பந்து, டென்னிஸ், இறகுபந்து போன்றவற்றிலும், ஐ. பி. எல் மாதிரியான போட்டிகளுக்கு வித்திட்டது. இது மற்ற விளையாட்டின் மீது ஆர்வத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது எனலாம்……  வரவேற்க வல்லது
அதே நேரத்தில், மற்ற விளையாட்டின் மீதான பார்வையை மக்களும், அரசும் திருப்ப வேண்டும்.. கபடி, வில்வித்தை போன்றவற்றில் வெற்றி பெற்றவரை வரவேற்க கூட ஆளில்லா வரலாறு பல உண்டு
       கிரிக்கெட்டில் வெற்றி பெறுவர்கள், இதனை முன்னின்று நடத்த வேண்டும் என நினைக்கிறேன்பொது நல வாழ்வில் ஈடுபட வேண்டும்….. ஆனால், அவர்கள் கூட மற்றவற்றில் பணம் பார்க்க நினைப்பது வேதனை…… இதற்கு ……சில நாட்கள் முன்னர் நடைபெற்ற கால்பந்து ஏலமே உதாரணம்….  இன்னொரு முறை சாந்தியை செங்கல் சூலையில் காண கூடாது என நினைக்கிறேன்……..
       விளையாட்டை விளையாட்டை ரசியுங்கள் தப்பில்லை ஆனால் வியபாரமாய் ரசிக்காதீர்கள்………

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்

மரு.பெ.இரமேஷ் குமார்

சிந்தனை துளிகள்

நீ செல்லும் பாதை .....
நன்கு செப்பனிடப்பட்டு இருந்தால்
நீ சாதாரணமானவன் !!!
கரடு முரடான இருந்தால்
நீ வெற்றியாளன்!!!!
புதிய பாதையை உருவாக்கினால்
நீ சாதனையாளன்!!!!
இதில்
நீ எந்த பாதையில் பயணிக்க போகிறாய்,,,,,,,,,


உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்

மரு.பெ.இரமேஷ் குமார்

Monday, April 7, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே

பெரும்பாலான நேரங்களில்
நாம் விளம்பரங்களை பார்ப்பதில்லை.
அதைத் தாண்டி காணும் போது
சில மட்டும் நம் மனதில் நிற்கும்…
அவற்றில் சில
அபத்தங்கள் நிறைந்ததாக இருக்கும்….
அப்படிப்பட்ட சிலவற்றை
காண நேர்ந்தது

glucan என்ற வேதியியல் பொருள் 
ஓட்ஸ்ஸில் சாதாரணமாகவே உள்ளது…
ஆனால் ஓரு குறிப்பிட்ட கம்பெனி
தன்னுடைய கம்பெனியில் மட்டும் இருப்பதாகவும்
தானே கண்டுபிடித்தது போலவும் விளம்பரம் செய்யப்படுகிறது……

நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளிப்பது நல்ல விஷயம்
அதை யாரும் மறுப்பதற்கில்லை …
அது குறிப்பிட்ட நிறுவனத்தின் எண்ணெய்யை
உபயோகம் செய்தால் மட்டுமே
நன்மை கிடைப்பதாக சொல்லப்படுகிறது…

விளம்பரம் செய்யுங்கள் தப்பில்லை
பொய்யான செய்திகளை
மக்களிடம் திணிக்காதீர்கள்……..

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்


தேர்தல் நேர காதல்

‘கதிரவன்’ வருகையிலே
‘தாமரை’ மலருக்காக காத்திருந்து
‘அரிவாளா’ல் கொய்ந்து

‘பம்பரம்’ விட்ட
திருடன் போலிஸ் விளையாடிய
சிறு வயது நினைவுகளுடன்

‘முரசு’ மேளம் கொட்டி
மாமன் மகளின் சடங்கிற்காக
வீட்டிற்கு செல்லுகையில்

தலை வாழை ‘இலை’யிலே
அசைவ உணவு
‘மாம்பழமா’ய் இனிக்க
மனம் ஆட்டு கிடாவாக துள்ள

ஓலை கட்டி…
தாமரையை
தலையில் சூடுகையில்….
‘கை’யால் மறைந்த
மஞ்சள் பூசிய முகத்தின்
உதட்டு ஓர புன்னகையில்
ஆயிரம்!!!! ஆயிரம் அர்த்தங்கள்
அதை சொல்ல வார்த்தை இல்லை…..
அவள் பெயரை தவிர…..

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்


சிந்தனை துளிகள்

தன்னுடைய வாழ்க்கையில்....
ஒவ்வொருவரும் ஹீரோ, ஹீரோயின் தான்...
தன் திருமணத்தின் போது....
அதை நீ மற்றொருவரிடம் தேடாதே...
நீ இருக்கும் போது......

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்


சிந்தனை துளிகள்

மனிதா! நீ....
கடந்த கால சோகங்களை நினைத்து
வாழ்க்கையின் பாதியை வீணாடிக்கிறாய்!!!!
வருங்கால நினைத்து
மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறாய்!!!
நிகழ்காலத்தை வாழ மறந்து விடாதே??????

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்


சிந்தனை துளிகள்

உன் தேவையை நீயே முடிவு செய்தால்
உனக்காக நீ வாழலாம்......இல்லையேல்....
உன் வாழ்க்கையை உலகம் முடிவு செய்யும்......

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்


சிந்தனை துளிகள்

எந்த மனிதனும் தன்னை ஏமாற்ற கூடாது
என்று எண்ணும் மானுடா!!!
உன்னை போன்றது தான்
ஒவ்வொருவனின் மனநிலையும் !!!!
பிறரை முட்டாளாக்கி
நீ அறிவாளியாகுவதை விட....
பிறரை நல்லவனாக்க
நீ அறிவாளியாகு!!!!!!

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்

மரு.பெ.இரமேஷ் குமார்