Thursday, February 27, 2014

சற்று யோசித்து பார்க்கலமே

சென்னை சாப்ட்வேர் பெண்ணை, பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கி கொன்ற வட மாநில இளைஞர்களை கண்டுபிடித்து, விசாரணை கூட்டில் ஏற்றிய தமிழ்நாடு காவல் துறையின் செய்கை பாராட்டு உரியது.

இந்த செயல் பல்வேறு கேள்விகளை நம் மனதில் எழுப்புகிறது?

அதிக சாம்பளம் கொடுக்கிறர்கள் என்பதற்காக, இரவு 10 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்தது யார்? மேலை நாடுகளில் வேலை நேரத்திற்கு ஏற்ப வேலை செய்வதன் அவசியம் தான் என்ன? அப்படியே வேலை செய்தாலும், அவரின் பாதுகாப்பிற்கு, யார் பொறுப்பு? பெற்றோரா, கம்பெனியா அல்லது காவல் துறையா?

அந்நிய மூதலிடும் , அதிக வேலை வாய்ப்பும் வருகிறது என்பதற்காக , ஊழியர்களின் பாதுகாப்பிற்கு பதில் யார் சொல்வது?
குடும்பத்திற்கு நிவராணமும் வழங்கி விடுவதாலும் , குற்றவாளியை தண்டித்து விடுவதாலும் பிரச்சனை தீர்ந்து விடுவதில்லை என்பதே நிதர்சனம்.
பிரச்சனை ஏற்படும் போதும் மட்டும் ,அதனை பற்றி பேசுவதும் ,பிறகு விட்டுவிடுவது, ஊடகங்களும் மக்களும் சாதாரமான ஒன்று.

டெல்லி மாணவி பாலியல் கொலை, அந்தமான் படகு விபத்து, கும்பகோணம் பள்ளி விபத்து இப்படியாக பல நிகழ்வுகள் நடக்கும் போது, அதனை பேசுவதும் , அதற்கான நடவடிக்கை எடுப்பதும், பின்னர் கட்டெறும்பாய் கரைந்து போவது தான் மிச்சம்.

சமுதாயத்தின் மீது அக்கறையும், சுய மனித மதிப்பீடும், அதிகார வர்க்கத்தின பொறுப்பும் இல்லாமல் போவதும் காரணமோ?

அரசாங்மே எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்று எந்தவொரு தனிமனிதனும் கைக்கட்டி கொண்டு உட்காரவும் முடியாது. தனிமனித ஒழுக்கமும், வாழ்வியலை பற்றிய புரிதலும் அவசியமாகிறது..

உங்களை போல் ஒருவன்
உங்களில் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்

Sunday, February 23, 2014

எனது கவிதை- பிழைப்பு

விளக்குகள்
அணைக்கப்படுகின்றன
சிவப்பு விளக்கு பகுதியில்…….
மறுநாள்
அவள் வீட்டில்
அடுப்பெரிய வேண்டுமன்பதற்காக…..

மரு. பெ. இரமேஷ் குமார்

Thursday, February 20, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே

வெற்றி என்றொரு மாய ஜால வார்த்தைக்கு மயங்காதவர்கள்
உலகில் ஏவருமிலர்….
அது போல
தோல்வி என்ற வார்த்தைக்கு துவளாதவர்களளை காண முடியாது….

உலகத்தின் நாடக மேடையில்
மதிப்புமிக்க வார்த்தைகள் அவை …..

உன்னுடைய வெற்றி
மற்றவரின் தோல்வி என்பதை மறந்து விடாதே!!!!

வெற்றியாய் பெறுவதை காட்டிலும்
அதை நிலைநிறுத்தி கொள்வதற்கான
போராட்டங்களே இங்கு அதிகம்…….

வெற்றி தோல்வியை
ஆராய்ந்து பார்க்க தொடங்கி விட்டால்
உலகம் உன்னை எட்டி பார்க்கும்….

 வெற்றி அடைவதற்கான காரணங்களை விட
தோல்வி அடைவதற்கான காரணங்களை ஆராய்ந்தாலே
வெற்றி என்றொரு நிலையை அடைவாய்!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
மரு. பெ.இரமேஷ் குமார்
  

Friday, February 14, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே

காதலித்து வெற்றி பெற்றவருக்கும்
காதலிப்பவர்களுக்கும்
காதலிக்க காத்திருப்பவர்களுக்கும்
மனமார்ந்த காதலர் தின வாழ்த்துகள்!!!!!!!!

கணவன் மனைவி உறவை ஏற்படுத்தி
குடும்பம் என்ற கட்டமைப்பு
உண்டாக்கியவர்கள் தமிழர்கள் என்பது
செவி வழி செய்தி

காதல் எனும் கோடாரி
சமுதாய கட்டமைப்பில் உள்ள
சாதி எனும் வேரை வெட்டியதில்
பெருமை பட வேண்டி நிகழ்வே!!!!

காதலை நிர்ணயம் செய்யும்
தருணங்களும் நடைமுறைகளும்
தடம் மாறி தடுமாறி நிற்கிறது

காதலை பெறுவதற்காக காட்டப்படும் அன்பு
திருமணத்திற்கு பின்
சூழ்நிலைகளால் மறுக்கப்படும் போது
காணப்படும் வெறுமை…..

காதலிக்கும் போதும்
காதலர்களின் நல்ல குணங்கள் மட்டும்
வெளிபட்டு……
திருமணத்திற்கு பிறகு
நல்லவையை தாண்டி
கெட்டவை மட்டும் வெளியே தெரிவது
காலத்தின் கோலம்.!!!!

காதல் திருமணங்களிலும்
விவாகரத்து அதிகமாவதன்
காரணம் தான் அறிய முடியவில்லை????

புரிதலும் விட்டு கொடுத்தலும்
காதலை கூட விட்டு வைக்கவில்லை தானே!!!!

-----காதலிக்க தெரியாதவன்
(இது காதலர்களுக்கு எதிரான பதிவல்ல)
@ரமேஷ் குமார்

Saturday, February 8, 2014

எனது கவிதை- உதவி

பணத்தை கொடுத்து
விடுதலை பெற்றான்
கொலைக்காரன்…..
உதவியாய்

ரூபாய் நோட்டில் காந்தி…….

@மரு. பெ.இரமேஷ் குமார்

சற்று யோசித்து பார்க்கலாமே!!!

நியூசிலாந்து அணியிடம் (0-4) தோல்வி அடைந்த இந்திய அணி எமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வெற்றி பெறும் போது, வாழ்த்தும் தெரிவிக்கும் நாம் , தோல்வி ஏற்படும் போதும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்........... 
கிரிக்கெட் சாம்பவனுக்கு பாரத் ரத்னா விருது வழங்கும் இந்த நேரத்தில் நம்மை சுய மதிப்பீடு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.....
பணத்தில் பங்கு கேட்கும் BCCI, ICC யிடம் காட்டும் ஆர்வத்தை இந்திய அணி வீரர்களிடம் சிறிது காட்டலமே???
------உங்களில் ஓருவன்
       உன்னை  போல் ஒருவன்
      மரு. பெ.இரமேஷ் குமார்




Friday, February 7, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே

வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் பரவி கிடக்கிறது
அது மன அழுத்தமாகவே மாறி நிற்கிறது…..
அதனை நீக்கும் புகலிடமாகவே
நகைச்சுவை அமைகிறது

தமிழ் சினிமாவும் சுற்றுலா துறையும்
அதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளது …..
கலகலப்பு, வருத்தப்படாத வாலிபர் சங்கம்,
சூது கவ்வும், ஒரு கல் ஒரு கண்ணாடி,
பாஸ் (எ) பாஸ்கரன் ………..இப்படியாக
பண வசுல் அதிகமாக பெற்ற பட வரிசை
நீண்டு கொண்டே செல்கிறது

மன புழுக்கத்தை நீக்கும் வடிகலாகவே
இப்படங்கள் அமைகிறது
இத்திரைப்படங்களில் நகைச்சுவையும்
தரமானதாக இல்லை என்பதும் வேதனை……

சந்தோஷத்தை வெளியே
தேடும் மக்கள் தான் இங்கு அதிகம் …..

தொழில் நுட்ப வளர்ச்சியும்
மேலை நாட்டு மோகமும்
நம்மை சந்தோஷத்தை
வெளியே தேட வைத்திருக்கிறது……

மனம் ஒரு குரங்கு என்ற வரியும்
ஒவ்வொரு மனிதனும் மன நோயாளி என்பதும்
நிதர்சனமானவையே!!!!
சற்று யோசித்து பார்க்கலாமே! நண்பர்களே!!!!
----உங்களில் ஒருவன்
  உங்களை போல் ஒருவன்
  மரு. பெ.இரமேஷ் குமார்