Wednesday, March 30, 2016

பெண்ணின் குணம் எத்தகையது???

ஒரு பெண்ணின் குணம் சாந்தமான, அமைதியான குணமுள்ளவளாகவே, சங்க காலத்தில் இருந்து இன்று வரை அறியப்படுகிறாள். அதற்கு மாறாக, குரூரமாக இருப்பின், சமுதாயத்தினால் தூற்றப்படுகிறாள். இந்த குரூரமான செயல்பாடுகள், பெண் மட்டுமே காரணமல்ல; புற சூழ்நிலைகளும் காரணமாகவும் அமைகின்றன.
இளம் வயதில் விதவையான பெண்ணாவள், இத்தகைய வெளிப்பாடுகள் மூலம் தன்னை சுற்றி, ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி கொள்வாள். அது இயல்பானது.
அவ்வாறு இல்லாமல், சாந்தமான பெண்ணாக இருப்பின், பல்வேறு பாலியல் தொல்லைகளையும், ஏளன சிரிப்பினையும் கேட்க வேண்டியிருக்கும். அதற்காகவே, ஆணின் குணநலன்களுக்கு ஒப்பான மனநிலைக்கு மாற வேண்டியுள்ளது. அந்த மனநிலையை, “ திமிர் பிடித்தவள், அடங்கா பிடாரி” என்ற பெயரிட்டு அழைத்திருப்போம்.
பிதா மகன் படத்தில், சங்கீதாவின் கேரக்டர், இந்த பின்னிலையை கொண்டே அமைக்கப்பட்டு இருக்கும். கஞ்சா விற்கும் போது, ஆடவரினை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில், திமிர் பிடித்தவள் நிலை வெளிப்படும்.
இத்தகைய திமிர் பிடித்தவளுக்கு, இன்னொரு கோணமும் உண்டு. பணம், அழகு மற்றும் அறிவு ஆகியவற்றில் மேன்மை பெற்ற பெண்ணிடம், ஒரு வகை கர்வம் இருக்கும். இதையும் மேற்கண்டையும் ஒன்றாக வைத்து குழப்பி கொள்ள வேண்டும்.
இரண்டு வகையான கர்வ நிலையும், புற சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. முன்னது, சமூதாயத்தினால் உருவாக்கப்படுகிறது. பின்னது, பெண்ணாவள் தன்னை தானே உருவாக்கி கொள்வது....
இனிமேலாவது, ஒருத்தியை குறை கூறுவதற்கு முன் சற்று யோசியுங்கள்!!!!

Tuesday, March 22, 2016

யாரையும் புறக்கணிப்பு செய்து விடாதீர்கள்!!!

சில மனிதர்களை பார்க்கும் போது, ” ஏன் இப்படி இருக்கிறார்கள்,,, கடவுளே, ஏன் இப்படியான மனிதர்களையும் படைத்தாய்!!! “ என்று தூற்றியிருப்போம்.
இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதனால் தான், நாம் நல்லவர்களாக தெரிகிறோம் என்பதை மறந்து விட கூடாது. எல்லாரும் நல்லவர்களாக அமைந்து விட்டால் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்குமா?? இல்லையென்றால், நாம் நல்லவன் என்று வெளிக்காட்டி கொள்வது எங்ஙனம்??
நம்மை நல்லவன் என்று காட்டி கொள்ள, கெட்டவனோடு ஒப்பிட்டே வெளிக்கட்ட வேண்டிய கட்டாயமும் உள்ளது என்பதை மறவாதீர்கள்.
கெட்டவர்களிடமிருந்து, தெரிந்து கொள்ளவும் நிறைய கருத்துகள் உள்ளது. நல்லவர்களிடமிருந்து, நல்ல கருத்துகளை கற்று கொள்வதை போல, கெட்டவர்களிடமிருந்து எந்த காரியமெல்லாம் செய்யக்கூடாது என்று கற்று கொள்ளலாம்.
யாரையும் புறக்கணிப்பு செய்து விடாதீர்கள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Friday, March 18, 2016

மனித அத்துமீறலும்... உயிரின அத்துமீறலும்

மனித சமூகத்தினுள் நடக்கும், சாதி மத மோதல்களை பற்றி பேசி வருகிறோம். ஆனால், மற்றைய உயிர்கள் மீதான அத்துமீறலையும் அடக்குமுறையும் மனித இனம் நிறுத்தவில்லையே!!!!
இயற்கை படைப்பியலில், மனிதன் பகுத்தறிவை பெற்று உயிர்களிடத்தே உயர்ந்த நிலையில் இருக்கிறான். இன்றைய நிலையில், பரிணாம வளர்ச்சியில் உச்ச நிலையில் மனிதன் நிற்கிறான். நாளைய உலகம், மனிதனை விட அடுத்த நிலை பெற்ற உயரினமும் தோன்றலாம்.
ஒரறிவான உணர்வு பெற்ற மரங்களிலிருந்து, ஆறறிவு பெற்ற மனிதன் வரையிலான பரிணாம வளர்ச்சியில், கீழ்நிலையில் இருப்பகளை, மேலிடம் அத்துமீறவது இயற்கையாகவே அமைந்து விட்டது. அது போல் பண்பாட்டு ரீதியான, பொருளாதார ரீதியான கீழ் நிலையை பெற்ற இனத்தை, மேலினம், மிதிப்பதும் தொடங்கி விட்டது.
தாவரங்களை மான் தின்பதும், மான் இனத்தை மனிதன் உண்பதை உணவு சங்கிலி, உணவு வலை என்று பெயரிட்டு அழைக்கிறோம். ஆனால், மறைமுகமாக கீழ் நிலை உயிரினத்தின் மீது அத்துமீறலை உண்டாக்குகிறோம்.
இந்த உயிர்களில், பகுத்தறிவு பெற்ற மனிதன் மட்டுமே சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறான். மற்ற உயிர்கள் சிந்திக்கும் ஆற்றலை பெறவில்லை. ஆனால் ,மனித இனம் சில ஆயிரம் ஆண்டுகளே மட்டும் கடந்திருப்பதால், மனித பகுத்தறிவு திறனும் இன்னும் முழுமையடையவில்லை என்று நினைக்கிறேன்.
மரத்தில் உள்ள ஆன்மாவும், புலி உள்ள ஆன்மாவும், மனிதனில் உள்ள ஆன்மாவும் ஒன்றே என்று கிருஷ்ணர் மகாபாரத்தில் சொல்வார். அதன்படி, இப்பூத உடல் பெறுகின்ற உடல் வடிவங்களே வேறுபடுகிறது. ஆன்மா மாறுபடுவதல்ல!!!
மனித இனக்குழுக்களில், மேல்நிலை மனிதன் கீழ்நிலையை அடிமைப்படுத்துவதற்கும், மனித இனம் மற்றைய உயிரினத்தின் மீதான அத்துமீறலுக்கு வித்தியாசம் ஒன்றுமில்லை!!!
முதலில் நாம் திருந்துவோம்!!!
பிறகு மற்றவரை திருத்தலாம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, March 16, 2016

சாதியமும் மனித மனநிலையும்

” உயர்சாதி பெண்ணை காதலித்தற்காக, தலித் மாணவர் வெட்டி கொலை ” என்ற செய்தி, எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது.
தலித் என்பதை வெளியே சொல்லும் நம்மவர்கள், உயர்சாதி என்ற ஒற்றை வரியில், மற்றொரு சாதியின் பெயரை முழுங்கி ஏப்பம் விட்டு விடுகிறோம். ஏன் இத்தகைய ஒரு சார்பான மனநிலை??? ஏன் உயர்சாதியின் பெயரையும் வெளியிடலாமே???
இது போலவே, நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்படின், நடிகையின் பெயரை வெளியிடுவார்கள். ஆனால், நடிகையுடன் இருந்த பிரபலத்தின் பெயரையும் முழுங்கி விடுவோம்.
இந்த இரண்டு நிகழ்விலும், ஒரு பொது மனநிலை நம்மிடம் இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும், கீழ் உள்ள மனிதத்தினை வெளிப்படுத்தும் சமுதாயம், மேல் உள்ள சமூகத்தினரை வெளிப்படுத்துவதில்லை; குற்றவாளியாகவும் பார்ப்பதில்லை;
மேற்கண்ட மனநிலை, சமூகத்தில் அனைத்து மக்களிடமும் காணப்படுகிறது. அச்சு மற்றும் ஒளி ஊடகங்கள் மட்டுமல்ல
இந்த மனநிலை முரண்பாட்டை நீக்காமல், சாதி, மதம், மொழி, இனம் போன்றவற்றின் ஒழிப்பை பேசுவதில் பயனில்லை
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

Tuesday, March 15, 2016

பிரிவினை வடிவங்கள்???

ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலினம் போன்றவற்றால் மனிதம் பிரிந்து கிடக்கிறது. ஆனால், இதை முழுவதும் சமூகத்தில் இருந்து பிரித்தெடுப்பது என்பது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது.
இந்த பிரிவினை வடிவங்கள், காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை அடையலாமே தவிர, முழுவதும் மாறும் என்பது கானல் நீர் என்றே தோன்றுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய, வர்ணசிரம முறை, இன்று காணாமல் இருக்கலாம். ஆனால், அடுத்தக்கட்டமாக, சாதிய மற்றும் மத பிரிவினைகள் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டன.
ஏன்!!! அமெரிக்கா போன்ற முற்போக்கு சிந்தனை உள்ள நாட்டில் கூட, இன்று வரை நிறம் சார்ந்த பிரிவினை இன்று சிறிதளவு குறைந்திருக்கிறதே தவிர முழுவதும் மாறவில்லை.
இவையெல்லாம் மாறி, மனிதன் மனிதத் தன்மையை உணர்ந்தால், அரசும் தேவையில்லை!!! அரசியல் கட்சியும் தேவையில்லை!!! சமூக போராளி வேடமும் தேவையில்லை!!!!
சுயநலம் சார்ந்த சிந்தனை அதிகமாகும் சமூகத்தில், பொதுநலம் என்ற சிந்தனை எளிதாக வந்து விடும் என்று நினைப்பது , நகைப்புக்கு உரியதாக தெரிகிறது.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, March 8, 2016

ஆண்-பெண் சமநிலை சாத்தியமா!!!



ஆண்- பெண் சமநிலை என்பது எல்லா சூழ்நிலைகளிலும் நடக்காத காரியம் எனலாம். சில இடங்களில் ஆண்மை ஓங்குவதும், சில இடங்களில் பெண்மை ஓங்குவதும் தவிர்க்க முடியாது. அதனை விடுத்து, சமநிலையை தான் பேணுவேன் என்றால், இருபாலினத்துவ வேறுபாடு தேவைப்பட்டிருக்காது.
(இனப்பெருக்கத்தை தவிர்த்து)
இயற்கையின் படைப்பியலில், ஆண்மை எந்தவளிற்கு முக்கியமோ, அந்தளவிற்கு பெண்மையும் முக்கியத்துவம் வாய்ந்தது. பழங்காலங்களில், ஆண்மைக்கும் பெண்மைக்கும் சரியாக இடமளிக்கப்பட்டதாகவே, நான் கருதுகிறேன்.
பொருளாதார சமத்துவம், அரசியல் சமத்துவம், பாலின சமத்துவம் என்ற இன்றைய கால பார்வையெல்லாம் ஆண்-பெண் சமநிலையை கொண்டு வந்து விடுமா?? என்ற கேள்விக்கு தவிர்க்க முடியவில்லை.
பெண்மை போற்றுவது, ஆண்மையின் கடமை. அது போல், ஆண்மையை போற்றுவதும் பெண்மையின் கடமை என்பேன்.
என்னை பொறுத்த வரை, வீட்டில் பெண்ணிற்கான அதிகாரமும், வெளியில் ஆணிற்கான அதிகாரமும், உளவியல் ரீதியாக சரியாக இருக்குமென தோன்றுகிறது. அதாவது வீட்டில் அன்பால் அதிகாரமும், வெளியில் ஆண்மையால் அதிகாரமும் சிறந்தென தோன்றுகிறது.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Thursday, March 3, 2016

பொதுநலம் சாத்தியமா???

இன்றைய மனித மனம் சுயநல எண்ணத்துடன் செயல்படுகிறது. அதாவது தன்னுடைய முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மையுடையதாக மாறி இருக்கிறது. பொதுவுடைமை, சமூக நீதி மற்றும் சமவுடைமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதிகபட்சமாக, 5-10 சதவீத மக்கள் வேண்டுமானால், பொதுவுடைமை என்ற கருத்தியலை கொண்டு, வாழ்வில் கடைபிடிப்பவர்களாக இருக்கலாம்.
இந்த மனநிலையில் வாழும் மக்கள் இருக்கும் சமகாலத்தில், கம்யூனிசம் என்பது தோல்வியடைந்து விட்டது எனலாம். முதலாளித்துவ கொள்கையே, நமது மனம் மறைமுகமாகஆதரிக்கிறது.
பொருளாதார ரீதியாக, பலம் குறைந்தவர்கள் சூழ்நிலையால் பொதுவுடைமை கொள்கையை ஆதரிப்பது போன்று தோன்றும். ஆனால், அவர்களும் பொருளாதார உயர்வை பெற்றால், பொதுவுடைமையை ஆதரிப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்வி.
ஆரம்பகால அரசியல்வாதிகள், பெரும்பாலும் பொதுவுடைமை தன்மையோடு, அரசியல் பயணத்தை தொடங்கினர். தன்னுடைய சுய நலத்தை கருதாமல், மக்கள் நலத்தையும், அரசின் நலத்தை கவனத்தில் கொண்டு, அரசியல் தொண்டாற்றினர்.
பொதுவுடைமை கருத்தியலை, முழுமுதலாய் கட்சியின் கொள்கையாக கொள்ளவில்லை என்றாலும், அரசியலில் தூய்மையை பின்பற்றினர். ஆனால், மனித மனம் மாறி, சுயநலத்தை முன்நிற்கும் நிலைக்கும் வந்துவிட்டது. அரசியலும், அந்த இயக்க ஒட்டத்திலே சேர்ந்து, தடம் மாறி நிற்கிறது. லஞ்சம், ஊழலும் தலைவிரித்தடுகிறது. அடிப்பாற் யாருமில்லை.
பொதுவுடைமை கருத்தியல், தற்போதைய சூழ்நிலையில் மன ஒட்டத்திற்கு அப்பாற்பட்டதாய் தோன்றுவதால், கம்யூனிசம் அழிவதை தடுக்க முடியாதாகிறது. முதலாளித்துவம் அரசியலில் வளர்வதை தடுக்க முடியாதாகிறது.
மனித மனத்திற்கு ஏற்ப கருத்தியலை மாற்றுவதா அல்லது கருத்தியலுக்கு ஏற்ப மனமாற்றத்தை ஏற்படுத்துவதா???
விடை.... உங்கள் மனதில்.!?!?!?

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்