Thursday, March 3, 2016

பொதுநலம் சாத்தியமா???

இன்றைய மனித மனம் சுயநல எண்ணத்துடன் செயல்படுகிறது. அதாவது தன்னுடைய முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மையுடையதாக மாறி இருக்கிறது. பொதுவுடைமை, சமூக நீதி மற்றும் சமவுடைமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதிகபட்சமாக, 5-10 சதவீத மக்கள் வேண்டுமானால், பொதுவுடைமை என்ற கருத்தியலை கொண்டு, வாழ்வில் கடைபிடிப்பவர்களாக இருக்கலாம்.
இந்த மனநிலையில் வாழும் மக்கள் இருக்கும் சமகாலத்தில், கம்யூனிசம் என்பது தோல்வியடைந்து விட்டது எனலாம். முதலாளித்துவ கொள்கையே, நமது மனம் மறைமுகமாகஆதரிக்கிறது.
பொருளாதார ரீதியாக, பலம் குறைந்தவர்கள் சூழ்நிலையால் பொதுவுடைமை கொள்கையை ஆதரிப்பது போன்று தோன்றும். ஆனால், அவர்களும் பொருளாதார உயர்வை பெற்றால், பொதுவுடைமையை ஆதரிப்பாரா? என்பது மிகப்பெரிய கேள்வி.
ஆரம்பகால அரசியல்வாதிகள், பெரும்பாலும் பொதுவுடைமை தன்மையோடு, அரசியல் பயணத்தை தொடங்கினர். தன்னுடைய சுய நலத்தை கருதாமல், மக்கள் நலத்தையும், அரசின் நலத்தை கவனத்தில் கொண்டு, அரசியல் தொண்டாற்றினர்.
பொதுவுடைமை கருத்தியலை, முழுமுதலாய் கட்சியின் கொள்கையாக கொள்ளவில்லை என்றாலும், அரசியலில் தூய்மையை பின்பற்றினர். ஆனால், மனித மனம் மாறி, சுயநலத்தை முன்நிற்கும் நிலைக்கும் வந்துவிட்டது. அரசியலும், அந்த இயக்க ஒட்டத்திலே சேர்ந்து, தடம் மாறி நிற்கிறது. லஞ்சம், ஊழலும் தலைவிரித்தடுகிறது. அடிப்பாற் யாருமில்லை.
பொதுவுடைமை கருத்தியல், தற்போதைய சூழ்நிலையில் மன ஒட்டத்திற்கு அப்பாற்பட்டதாய் தோன்றுவதால், கம்யூனிசம் அழிவதை தடுக்க முடியாதாகிறது. முதலாளித்துவம் அரசியலில் வளர்வதை தடுக்க முடியாதாகிறது.
மனித மனத்திற்கு ஏற்ப கருத்தியலை மாற்றுவதா அல்லது கருத்தியலுக்கு ஏற்ப மனமாற்றத்தை ஏற்படுத்துவதா???
விடை.... உங்கள் மனதில்.!?!?!?

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment