Friday, February 19, 2016

வாழ்வியலும் வாதபித்தகப நிலைகளும்

ரஜினி, ”எட்டு எட்ட வாழ்க்கையை பிரிக்கோ…” பாடிட்டு போயிட்டார். ஆனால், வாழ்க்கையை எட்டாக பிரிப்பதற்கு நமக்கு கஷ்டமாக உள்ளது. அதனால், எளிதாக மூன்று பாகங்களாக பிரித்து கொள்வோம்.

ஒரு மனிதன் பிறந்து இறப்பதற்குள் மூன்று வகையான படிநிலைகளை கடந்து செல்கிறான். அதாவது ஒரு ஆண்/பெண் பிறந்து திருமணமாகும் வரை உள்ள காலம் முதல் நிலையெனலாம். திருமணம் முடிந்து, மகன்/மகளுக்கு திருமணம் முடித்து வைத்தால் இரண்டாம் நிலையை கடந்து விடலாம். பேரன்/பேத்தியை காண கூடிய நிலையை மூன்றாவது நிலையாக கொள்ளலலாம்.

இந்த மூன்று படிநிலைகளையும், தெளிவாக புரிந்து நடந்தால், வாழ்க்கை சுகமாகும். ஆனால், நாம் மூன்றையும் ”ஒரே குட்டையில் ஊரிய மட்டை போல்” ஒன்றாகவே பாவித்து வருகிறோம். இந்த படிநிலைகளை சித்த மருத்துவத்திலும், வாத பித்த கப வாழ்நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு படிநிலைக்கும், அடுத்த நிலைக்கு இடையே உள்ள வெளி தான், தலைமுறை இடைவெளியாகும். இது 30 முதல் 40 வருடங்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும்.

முதல் நிலை என்பது நிச்சயமாக புரியாத புதிர் நிலையே. பொருளாதாரத்தில், பெற்றோரை சார்ந்து இருக்க வேண்டிய நிலையாகும். அதனால் நம்முடைய விருப்பு மற்றும் வெருப்புகளுக்கு அப்பாற்பட்டு, மற்றவரின் ஆசைகளுக்கு ஏற்ப நம்மை மாற்றி இருப்போம். நம்முடைய சந்தோஷங்கள் அனைத்தும், புற சூழ்நிலையால் நிர்ணயம் செய்யப்படுவயாக இருக்கும்.

பெற்றோர் மற்றும் ஆசிரியரின் அறிவுரைகள், நமது காதுகளுக்கு எட்டி இருக்காது. சிற்றின்பங்களான விளையாட்டு பொருட்கள், டிவி, சினிமா, சுற்றுலா, காதல், சாப்பாடு போன்றவற்றிலே நாட்டம் அதிகமாக இருந்திருக்கும். அதனை தாண்டிய வாழ்க்கை புரிதல் இருக்காது;இருக்கவும் முடியாது என்பதே உண்மை. மேற்கண்ட அனைத்துமே வாத மனநிலையாளனின் செயல்களாகும்.

இரண்டாம் நிலையில், பித்தம் தலைக்கேறுவதால் குடும்ப தலைவனாகி விடுகிறான். குடும்ப பொறுப்புகள் வந்து, முதல் நிலை செய்தவைகள் அனைத்துமே, ” யாதார்த்த நிலைக்கு அப்பாற்பட்டவை ” என்று புரிந்து கொள்கிறான். பொருளாதாரம் என்பது, முழுவதும் அந்த ஆண்/பெண்ணேயோ சார்ந்து உள்ளது. கொஞ்சம் அனுபவமும் புரிதலும் வந்து விடுவதால், முடிவுகளையும் எடுக்கிறான்/எடுக்கவும் முடியும். தன்னுடைய சுகங்களை தாண்டி குழந்தை/பெற்றோர்/கணவன்/மனைவி மீது அன்பு செலுத்தி, அவர்களுக்காகவே வாழ தொடங்கி விடுகிறான்.

புற சந்தோஷங்களான சினிமா, டிவி, சாப்பாடு, சுற்றுலா போன்றவற்றையெல்லாம் தியாகம் செய்து, குழந்தைகளின் சந்தோஷத்திற்காக, தனது கஷ்டங்களை கூட தாங்கி கொள்கிறான். ஒருவித தியாக நிலையோடு, அறிவு பூர்வமாகவும் அனுபவ பூர்வமாகவும் வாழ்வை கடக்கிறான். இவை அனைத்தும் பித்த மனநிலைக்கு ஒப்பானவை.

மூன்றாவது நிலை என்பது சற்று கடிமான/கொடுமையான வாழ்நிலை என்றால் மிகையில்லை. குழந்தைகள் மூலமாகவும்/தனது உழைப்பினால் பணம் வந்தாலும், மனம் அமைதியற்றே கிடக்கிறது. பொருளாதாரம் சீர் தூக்கி, பென்ஸ் காரில் போனாலும், கடந்த கால சந்தோஷங்களை போல் அல்லாமல், வேப்பம்பழமாய் கசக்கும். அதற்கு காரணமும் உண்டு.

கடந்த கால அனுபவம் மற்றும் அறிவினை, தனது பிள்ளைகளும்/பேர குழந்தைகளும் கேட்காததே முதற்காரணமாகும். அவையெல்லாம் நடைமுறை சாத்தியத்தங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை புரிந்து கொள்வதில்லை. சிற்றின்பங்களுக்கு இடம் கொடுக்காமல், தத்துவங்களால் வாழ்வில் இறுதி நிலையை அடைந்து விடுவர். இவை கப மனநிலையோடு ஒப்பும்.

முதல் நிலை என்பது முழுவதும் நிகழ் கலத்தோடு ஒத்து வாழ்வதாக அமையும். கடந்தகாலத்தை முற்றிலும் புறக்கணிக்கும். இரண்டாம் நிலை என்பது நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் சேர்த்தாகவே அமையும். மூன்றாவது நிலை என்பது முழுவதும் கடந்தகாலத்தை ஒத்தே அமையும். இதில் இரண்டாம் நிலை மட்டுமே உத்தமம். அதாவது பித்தத்தின் தன்மையே உச்சம்.


நான் இன்னும் முதல் நிலையே தாண்டல!!! அப்ப நீங்க ????

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment