ஒவ்வொரு
மனித வாழ்வியலும், கொடுமையான/கண்ணீர் சிந்தக்கூடிய தருணங்கள்
நிறையவே உள்ளன. இப்படியாக ஒருவரை
கேட்டால் போதும்.... பக்கம் பக்கமாக கதையே
எழுதி..... புத்தகமே போடுமளவிற்கு சொல்லுவார்!!! அதையெல்லாம், உண்மையான துன்பங்களாக என்பது மில்லியன் டாலர்
கேள்வி!!!
உண்மையாக,
கடுமையான தருணங்கள் என சிலவற்றை நிச்சயமாக
கூறலாம். மேல்நிலை தேர்வு, முடிவுகளுக்காக காத்திருக்கும்
மாணவன்!!!!! படித்து முடித்து வேலைக்காக
காத்திருக்கும் இளைஞன்!!!! திருமணமாகி, காலம் கடந்தும் குழந்தை
பாக்கியத்திற்காக காத்திருக்கும் இளம் தம்பதிகள்!!!! அவசிய
தேவைக்களுக்காக கடன் வாங்கி, கொடுக்க
முடியாமல் தவிக்கும் குடும்ப தலைவன்!!!! வங்கியில்
பயிர் கடன் வாங்கியும், வறட்சியினால்
நெல் கருகுவதையும் கண்டு, மனம் புழுகும்
விவசாயி!!!! மகன்/மகள் செய்த
தவற்றிற்காக குற்றவாளி கூண்டில் ஏற்றப்படும் பெற்றோர்கள்!!! மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும்
நோயாளி!!! இப்படியாக பட்டியல் நீளும்.
ஆனால்,
இவைகளை தாண்டியும், முதுமையின் தனிமை கொடுமையானது என்று
நினைக்கிறேன். கை கால்கள் வலுவின்றி
நடக்கு முடியாமலும், காது கேட்கும் திறன்
குறைந்து கேட்க முடியாமலும், கண்
பார்வை மங்கி பார்க்க முடியாமலும்,
உண்ணுவதற்கு... வகைவகையான உணவுகள் இருந்தும், உண்ண
முடியாமலும், செலவழிக்க பணம் இருந்தும்..... செலவிட
முடியாமலும், பெற்ற பிள்ளை மற்றும்
வளர்த்த பேர பிள்ளைகளின் புறக்கணிப்பினாலும்,
நவீன அறிவியல் சாதனங்கள் இருந்தும் பயன்படுத்த தெரியாமலும், ஒவ்வொரு வீட்டிலும் புழுங்கி
கொண்டிருக்கும் வயதான தாத்தா, பாட்டிகள்
ஏராளம்.
பெரும்பாலும்
கண்ணீர் சிந்தும் தருணங்கள் அனைத்தும், குறைந்த ஆயுளை கொண்டவை.
ஆதலால், இளம் வயதில் எளிதாக
கடக்கலாம். ஆனால், முதுமையில் அனைத்தும்
நீண்ட கால ஆயுளை உடையது.
ஆதலால், வலியின் தன்மை அதிகம்!!!
வார்த்தை ஜாலங்களால் விவரிக்க இயலாதவை!!!
இந்தியா
போன்ற நாடுகளில், முதுமை குறித்த விழிப்புணர்வு
குறைவாகவே உள்ளது. மெத்த படித்தவர்கள்
கூட, முதுமையின் உளவியல் புரிந்து கொள்வதில்லை.
“இதுக்கு வேற இல்லை” என்று
பெற்றோர்களினை குறைசொல்லவே முயல்கின்றனர்; புறக்கணிக்கவே செய்கின்றனர்.
இந்திய
குடும்ப அமைப்பியிலேயே, வயதானவர்களின் நலம் குறித்த புரிதல்
அதிகமாகவே இருந்தது. ஆனால், நவீனத்துவம் சார்ந்த
புரிதலை உள்வாங்கும் போது, முதுமையை குறித்த
புரிதலை எளிதாக புறக்கணித்து விட்டோம்.
சீனாவில்.... வயதானவர்களை நன்றாக பார்த்து கொள்வது
இன்றும் தொடர்கிறது.
ஒன்றை மறந்து விடாதீர்கள்!!! நாளையும்
நம்மையும் முதுமை தாக்கும்!!! “பழுத்த
மட்டை பார்த்து, பச்சை மட்டை இளித்ததாம்”
என்ற பழமொழியை மறந்து விடாதீர்கள்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்