1.கடந்த
வாரம்…. கோரோனாவின் பாதிப்பு குறைவாக இருந்த மாதிரி தெரிந்தது. ஆனால் திரும்பவும் எண்ணிக்கை
அதிகமாக தொடங்கி இருக்கிறது. அதிலும் சென்னையில் குறைந்து…. மாநகரினை சுற்றியுள்ள மாவட்டங்களில்
அதிகமாகி வருகின்றது. சென்னை மக்களின் ஏற்பட்ட விழிப்புணர்வும், மற்ற மாவட்டங்களுக்கு
நடந்த இடம் பெயர்வு காரணமாக இருக்கலாம்.
2.
குக்கிராமங்களிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகிறது. அதிலும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா
தொற்று அதிகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…. (என் காதுகளுக்கு எட்டியவரையே)
5 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3.
அதே போல்…….. முன்கள பணியாளர்களின் பாதிப்பும் குறைந்தபாடில்லை!! மருத்துவர்கள், செவிலியர்கள்,
மருத்துவமனை பணியாளர், காவற்துறை நண்பர்கள் என அதிகமாகி வருவது நல்லதல்ல!!! குறிகுணங்கற்ற
நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது… முன்கள பணியாளர்களின் பாதிப்பு அதிகம்
என்றால், குறிகுணங்கள் இருந்தால்… மருத்துவ கட்டமைப்பு பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம்!!
4.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மீதான….. சமூக புறக்கணிப்பு குறைந்தபாடில்லை!!!
குற்றவாளிகளை போல் பார்க்கின்றனர்!!! சமீபத்தில் மருத்துவ நண்பருக்கு கொரோனா தொற்று
ஏற்பட்டது. அதற்காக குடியிருந்த வாடகை வீட்டினை காலி செய்ய சொல்லி வலியுறுத்தை வலியுடன்
பகிர்ந்து கொண்டார். (வீட்டின் உரிமையாளர்.. அரசு ஊழியர் ) இதற்காகவே… பல மருத்துவமனை
பணியாளர்கள் பரிசோதனை செய்வதே தயங்கும் நிலைக்கு சென்று விட்டனர்.
5.
மருத்துவமனையில் பணி செய்கிறார் என்பதற்காகவே…. சமூகத்தில் மெல்லிய புறக்கணிப்பும்
நடக்கிறது.
6.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் … சிலருக்கு… யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்று கண்டறியவது
கடினமாக உள்ளது. அதனால்… பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்தாலோ… அல்லது… பாதிக்கப்பட்டவருக்கு
தொடர்பில் இருந்தால்… நீங்களவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்வது நலம்!!!
7.
சமீபத்தில்… உலக சுகாதார மையம் … கோரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று கூறியிருக்கிறது.
அதாவது எச்சில் துளிகள்/சுவாச துளிகள் காற்றில் மிதந்து… அருகிலுள்ள பொருட்களில் இருக்கும்.
அதனை தொட்டு… முகத்தில் கை வைப்பதனால் பரவும். ஆதலால்… கை கழுவுதல் அவசியம்!!! முகத்தில்
கை வைப்பதை தவிர்க்கவும்!!
8.
குறிகுணங்கற்று .... மருத்துவமனையில் நோயாளிகளாக தங்கியிருப்பது மனித சமூகத்திற்கு
புதிது!!! குறிகுணங்கள் இருந்தால் கூட…. அதில் குறித்த வலிகளோடு மருத்துவமனையோடு கடந்து
விடும். ஆனால் ….குறிகுணங்கற்ற நிலையில் சமூக புறக்கணிப்பு சேர்ந்து கொள்ளும் போது
…. உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தான்… சிலர் தற்கொலை செய்து
கொண்டனர்
9.மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு……. பாதி பேர் மட்டும் முதல் வாரத்திலே ….Negative ஆகி வெளியேறுகின்றனர்.
ஆனால்… பலருக்கு இரண்டாவது… மூன்றாவது பரிசோதனையில் கூட .,… Positive வருகின்றது.
10.
”எனக்கு தான் எந்த பிரச்சனையில்லையே… நான் வீட்டில் போய் தனியாக இருந்து கொள்கிறேன்”
என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். ஆனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுபவர்களுக்கு
ஏற்ற சூழ்நிலையும், புரிதலும் பொதுமக்களுக்கு இருக்கிறதா? என்று தெரியவில்லை.
11.
குறிகுணங்களற்று இருப்பவர்களுக்காகவே… அரசு பல இடங்களில் COVID CARE CENTRE அமைத்து
உள்ளது.
12
.கடந்த 4 மாதங்களாக…. களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவ துறை, காவற் துறை, உள்ளாட்சி
துறை, வருவாய் துறை ஆகியோருக்கு வணக்கங்களும்… நன்றிகளும்… தாங்களை பற்றி கவலையில்லாமல்….
மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கின்றனர்.
13.
அதிலும்……. மருத்துவமனையில் பணியாற்றும் கீழ்நிலை பணியாளார்களின் பணி நிச்சயமாக பாராட்ட
வேண்டியது உண்மை!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்