Sunday, July 12, 2020

கோரோனாவிற்கு சித்த மருத்துவம்- நவீன மருத்துவர்களுக்கு எதிர்வினை

 

கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் Mild moderate பாதிப்புகளுக்கு... எந்த மருத்துவமும் தேவையில்லை!!! அதற்கு மருந்தில்லாமல்... தானாகவே சரியாகும்

அப்படியிருக்கையில்... சித்த மருத்துவம் அளித்து குணமாகும் என்று சொல்வது சரியன்று...... அது Self -limiting disease ” என்கின்றனர் நவீன மருத்துவர்கள்
-----------------------

நவீன மருத்துவம் சார்ந்து படித்தவன் என்ற முறையில்…….. வைரஸ் நோய்கள் பெரும்பாலும் Self -limiting disease என்று தெரியும். ஆனால் அதற்காக மருந்துகள் தேவையில்லை என்று அர்த்தம் கிடையாது.
----------------------------

சரிஉங்களது வாக்கின் அடிப்படையில் மருந்தே தேவையில்லை என்றால், Azithromycin, Oseltamavir/Remdesivr, Paracetamol போன்ற மருந்துகள் எதற்கு??? மருத்துவமனையில் மருந்தில்லாமல்உணவுகளை மட்டும் அளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கலாமே?

சித்த மருந்துகள் வெறும் Placebo தான்என்று நீங்கள் கூறினால் , Azithromycin, Oseltamavir/Remdesivr, Paracetamol போன்ற மருந்துகளும் Placebo தான் போலும்!!! விலை அடிப்படையில் சித்த மருந்துகள் விலை குறைவு தான்!!!

-------------------------------

சித்த மருந்துகள் அறிவியல் ஆதாரமற்றவை!!! அதனால் ஏற்று கொள்ள கூடியதல்ல!! என்றீர்கள். இப்போது வழங்கப்படும் மருந்துகள் எங்கு ஆய்வு செய்து வழங்கினீர்கள்????(MEURI Guideliness அடிப்படையில் தானே வழங்கிறீர்கள்) நீங்களும் அனுபவத்தில் அடிப்படையிலும், குறிகுணங்கள் அடிப்படையிலும் சிலவற்றை வழங்குகிறீர்கள்!! அதே தான் சித்த மருத்துவ முறையில்……..

------------

ஆரம்ப காலத்தில் கொரோனாவிற்கு சித்த மருத்துவத்திற்கு மருந்து இல்லை என்றீர்கள்!!! இப்போது Mild moderate பாதிப்புகளுக்கு, மருத்துவ குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குகிறோம்!!! அதிலும் நல்ல பலன்களை தர ஆரம்பித்து இருக்கிறது…..

---------------------

ஆங்கில மருத்துவத்தில் தான்தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகளை குணமாக்கி அனுப்புகிறோம்…… ஆனால்நாங்கள் எப்போதாவது…… பெருமையாக எடுத்து கொண்டோமா??? என்கிறீர்கள்.

முதலில்சித்த மருத்துவத்தில் மருந்து இல்லை என்றீர்கள்பின்னர்.. ஆங்கில மருத்துவம் துணையில்லாமல் குணமாக்கிய பிறகு…… ”சித்த மருத்துவத்தினால் குணமாக்கிய பிறகு…. சித்த மருத்துவத்தினால் குணமாக்கினோம்!!! என்று அறிவிப்பதில் என்ன தவறு?? என்று தெரியவில்லை….

வருங்காலங்களில் வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில்…. தீவீர நோய் நிலைகளினையும் குணப்படுத்த முயற்சிப்போம்!!!

---------

நவீன மருத்துவ உலகிற்கு… ” சித்த மருத்துவத்தினாலும் குணமாகும்என்பது இருப்பினை தெரிவிக்கும்/ குணமாக்கியதை அறிவிக்கும் யுத்தியே!!!!!!

மற்றபடி மருத்துவ முறைகளுக்குள் சண்டையிட்டு கொள்ளும் தளம் அல்ல!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment