Friday, June 19, 2020

விலங்குகள் - தப்பி பிழைத்தல் விதி

1. இன்றைய அந்தி நேரத்தில்... இணைய வழி வகுப்பினை பார்த்து கொண்டே... பக்கோடாவும் தின்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ பறந்து வந்த காகம்... சற்று தொலைவில் வந்த அமர்ந்தது!!!

பொதுவாக காகங்கள் மனிதர்களை கண்டால் ஒடி விடும்!!! பசித்ததோ..... என்னவோ !?!?!? அதனை புரிந்து கொண்டு... சிறிய பக்கோடா துண்டுகளை போட்டேன்!!! அருமையாக உடைத்து தின்றது!!!

மிளகாய் வாயில் அகப்பட... அதனை காகத்திடம் தூக்கி ஏறிந்தேன்!! அந்தோ.....ஆச்சரியம் .... மிளகாயோடு ஒட்டி இருந்த பக்கோடாவை லவமாக தின்று விட்டு, மிளகாய் உண்ணவில்லை!!!! அதே மாதிரி... இஞ்சி, வெங்காயத்தோடு இருந்த பக்கோடாவையும் போட்டோன்!! இஞ்சி, வெங்காயம் விட்டு விட்டது!!! ( உடம்புக்கு ஒத்துகாதோ!!! இல்லை அதுக்கு அல்சர் பிரச்சனையோ)

2. ஆமைகள் பொதுவாக குளத்தில் தான் இருக்கும். ஆமைகளுக்கு எதை உண்ணும் என்று கூட தெரியாது!!! ஆனால் ...கடந்த ஒரு வருடமாக.. நாயின் இடும் சாதத்தை உண்ணுகின்றது!!!! எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!!!

இரவு 10 பத்து மணிக்கு மேல்... வீட்டுக்கு வெளியில் செல்லும் போது ஆமையை நிச்சயம் பார்க்கலாம்!!! சில நேரங்களில் ஆமைக்கு, நாயிற்கு சண்டை கூட நடக்கும்!!! (அரிசி சாதம்..... எப்போது ஆமைக்கு உணவானது என்று தெரியவில்லை!!)

3. சமீப காலமாக... பாம்பினை அதிகமாக பார்க்க முடிகிறது!!! ஒரு நாள் வீட்டினை திறக்கும் போது உள்ளே பாம்பு இருந்தது!!!

கடந்த ஞாயிற்று கிழமை தென்னம்பிள்ளைக்கு தண்ணீர் இறைந்து கொண்டிருந்த போது... சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு...... கடலைத்தழை வைத்திருந்த இடத்திலிருந்து குளத்திற்குள் ஓடி மறைந்தது!!! ஆச்சரியம் என்னவென்றால்... பாம்பு சென்ற பாதை, நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு 2 அடி தள்ளி தான்!!!

பாம்பு.... வீட்டில் அருகில் வரும் போதெல்லாம் துறத்தி விடுவது வழக்கம்!!! அதுவும் சென்று விடும் ( பாம்பினை நாம் துன்புறுத்தாத வரை... அது மனிதர்களை துன்புறுத்தாது)

4. சமையல் வீட்டிற்கு செல்லும் போது... சிறிய ரக குருவி வீட்டில் இருந்தது!!! வீட்டில் முழுவதும் பூட்டி கிடந்தும் ... எப்படி வந்தது என்று புரியவில்லை!!! சற்று கவனித்து பார்த்தால்.. ஜன்னல் வழியாக வந்து இருக்கிறது. வேறென்ன உணவுக்காக!!!

இன்னொரு முறை கடலையை கொறித்து கொண்டு இருந்ததாக அம்மா சொன்னார் ( எல்லாம் ... இந்த ஒரு சாண் வயிற்றுக்கு தான்)

5. காலையில் ....தோசையை கொஞ்சம் தின்று விட்டு....மீதியை நாயின் தட்டில் இட்டேன்!!! அணில் வந்து நெல்லினை போல் திங்க அரம்பித்து விட்டது. ( நெல்லாக இருந்தா என்ன...... அதிலிருந்து வந்த அரிசி தோசையாக இருந்தா என்ன!?!?!? )

6. கடந்த ஐந்தாறு வருடங்களாக... எங்களுடைய வயலில் தான்.... மயில் தஞ்சம்!!! ( முல்லை நிற பறவையாக இருக்கும் மயில்.. .எப்படி மருத நிலத்திற்கு வந்ததோ!?!? )
-----------------------
இயற்கை சூழ்நிலைகள் பாதிக்கும் போது.. உயிரினங்களும் வாழ்வியல் புரிதலும் மாறுகிறது. உயிரினங்களின் உணவு முறை, வாழ்வியல் போன்ற தன்மைகளை... தன்னை தானே மாற்றி கொள்கிறது!!!

சூழ்நிலைக்கு ஏற்ப... அதுவும் மாறி விடுகிறது. இல்லையென்றால்.. கால போக்கில் உயிரினம் அழிந்து விடுமல்லவா???? தப்பி பிழைத்தல் விதி!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

 


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete