Tuesday, June 16, 2020

கோரோனா - சமகால புரிதல்கள் - ஜீன் 2020

1. ஒரே மாஸ்க்கினை பல நாட்கள் பயன்படுத்துவது நல்லதல்ல!!! மாஸ்க்கின் முன்பக்கத்தினை எக்காரணம் கொண்டு தொடாதீர்கள்!!! வாய் மற்றும் மூக்கு முழுமையாக மறைக்கும் அளவிற்கு சிறந்தது!!!

2. துணி மாஸ்க் போடுவதில் பெரிய பயனில்லை. வைரஸினை பெரியளவில் தடுக்காது. சர்ஜிக்கல் மாஸ்க் சிறந்தது. இருதய நோயாளிகள், நுரையீரல் பிரச்சனைகள் சற்று கவனமாக மாஸ்க் அணியவும்.

3. ஊரடங்கு என்பது நோயை தடுக்கும் கருவியல்ல!!! நோய் பரவலை தடுக்க பயன்படும் முறை!!! அதிகப்படியான நோயாளிகள் மருத்துவமனையை நோக்கி வருவதை சற்று தாமதப்படுத்தும். மருத்துவ கட்டமப்பை பலப்படுத்தி கொள்ளும் உத்தி!!!

4. அத்தியாவச பொருட்களின் தேவையில் குறைவு ஏற்பட போவதில்லை. ஆதலால் கடைகளில் நேர குறைப்பு என்பது பெரியளவிற்கு பயன்படாது. 10 மணி நேரத்தில் வாங்கும் பொருட்களை… .நேர குறைப்பினால் 7 மணி நேரத்தில் வாங்க வேண்டுமென்றால்….என்ன நடக்கும்!!! சமூக விலகலை கடைப்பிடிப்பது கஷ்டம்!!!

5. கொரோனாவின் பாதிப்பு என்பது எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கிறது. பலருடைய தனிப்பட்ட பொருளாதார நிலைமைஇன்னும் மோசமாகி கொண்டே வருகிறது!!! இருந்த சேமிப்பு எல்லாம் முழுமையாக காலியாகி இருக்கும். அத்தியாசவிய பொருட்களுக்கு மட்டும் செலவழியுங்கள்!!!

6. முன்பு இருந்த கொரோனா பயம் வெகுவாக குறைந்து விட்டது!! பயமின்மைஅலட்சியமாக பெரும்பாலோரிடம் மாறி நிற்கிறது. தேவையில்லாத பேச்சுகளும்…. ஊர் சுற்றலும் குறைந்ததாக தெரியவில்லை!!!

7. சென்னையில் பாதிப்பு அதிகமானதாலும், வேலையில்லாத நிலையிலும் …. பலர் ஊர் திரும்ப தொடங்கியிருப்பதாக சொல்கின்றனர். சற்று வேதனையான செய்தி!!! வட இந்திய தொழிலாளர்கள்…. சொந்த ஊருக்கு திரும்பியது போல்இவர்கள் …… சொந்த மாவட்டங்களுக்கு திரும்புகிறார்கள்!!!

8. பாதிப்பு அதிகமாகி வரும் சூழ்நிலையில்…..தொற்றினால் கிராம புறங்களிலும் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது. முன்பு போல்…. அலட்சியமாக இருக்காதீர்கள்!!!! சமூக விலகல், முக கவசம் அணிதல், கை கழுவுதலை முக்கியமாக கடைபிடியுங்கள்!!!

9. இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்று மெத்தனமாக இருக்க வேண்டாம்!!! தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு…. எதாவது உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்படுமா?? என்பது போன்ற தரவுகள் இல்லை!!! அதுவும் வருங்காலங்களில் தெரிய வரலாம்!!!

10. இப்போது…. நமக்கு முன் உள்ள வாய்ப்பு!!! சுய பாதுகாப்பு மட்டும்!!! சுய பாதுகாப்பே சமூக பாதுகாப்பு ..... எவ்விதமான சமரசமும் இல்லாமல் கடைபிடியுங்கள்!!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

 


No comments:

Post a Comment