Friday, March 31, 2017

இறை வணக்கமும் பரிகாரமும்

இறைவனை வணங்குவதற்காக, கோயிலுக்கு அதிகமாக சென்றதில்லை. மற்றவர் விருப்பப்பட்டால், அவருடன் சேர்ந்து பயணித்தது மட்டுமே உண்டு. அப்படியே சென்றாலும், “நீ இந்த வேண்டுதலை நிறைவேற்ற கொடு, உனக்கு இதை தருகிறேன்என்ற (give and take policy) வரைமுறைகளில், எனக்கு விரும்பமில்லை.

மனித குணம் தான், எப்போதும் பிரதிபலனை எதிர்ப்பார்த்தே எச்செயலையும் செய்யும். (மாறாக, பிரதிபலனை பார்க்காதவர்களும் உண்டு. அவர்களை வேண்டுமானால் கடவுள் நிலை வைத்து கொள்ளலலாம்.)

கடவுள் மனிதனை விட உயர்ந்தவன்என்ற வாதம் உண்மையானால், வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, கடவுளுக்கு வெகுமதிகள் தேவையில்லை என்று எண்ணுகிறேன். அப்படியே வெகுமதிகளை தருபவருக்கே, இறைவனின் மனம் செவி சாய்க்குமெனில், லஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு ஒப்பாக இறைவனை கருதலாமா???

ஊதியமாக பணத்தை பெற்று கொண்டு செய்யும் தொழிலாளிக்கு ஒப்பாக, நாம் இறைவன் வைத்திருக்கிறோமா????

மேற்கண்ட உண்மையானால், பணக்காரர்களுக்கு எல்லா நன்மைகளும் ஏழைகளுக்கு எல்லா தீமைகளும் நடக்க வேண்டும் அல்லவா!?!? மாறாக பணக்காரன் மற்றும் ஏழை ஆகிய இருவருக்குமே..... நன்மை மற்றும் தீமை என இரண்டும் கலந்தே நடக்கிறது.

எல்லாவற்றிலும் மேலாக, நாத்திகர்களுக்கு எந்தவித நன்மைகளும் நடக்காமலா இருக்கு!?!?!?

--------------------------------------------------------------------------------------------------

மேற்கண்ட கேள்விகளை மனதில் கொண்டு, நான் நாத்திகன் என்று எண்ண வேண்டாம், எனக்கும் இறை நம்பிக்கை உண்டு. ஆனால், அதன் புரிதல் வேறு!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Tuesday, March 28, 2017

ஜல்லிக்கட்டின் திரிபு நிலை

ஜல்லிக்கட்டிற்காக நடந்த போராட்டத்தை, வெறும் மெரினா புரட்சி என்று சுருக்கி கொள்வதில், எனக்கு உடன்பாடில்லை.

இந்த போராட்டம், தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் நீக்கமற நடந்தது. இந்திக்கு எதிரான போராட்டத்தை ஒப்பிட்டு சொல்லும் நாம், அதனை போல்......... காரணத்தை கொண்டே பெயரிடலாமே!!!

மேட்டிமை தனம் மற்றும் மாநிலத்தின் தலைநகரம் என்ற பார்வையில், நுண்ணிய அரசியல் ஒளிந்திருப்பதாகவே தெரிகிறது. இதில் ஊடகம் மற்றும் எழுத்தாளர்களுக்கு மிக பெரிய பங்குள்ளது. இது வரலாற்று திரிபாக மாற கூடாது என்பதே என் கவலை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Saturday, March 25, 2017

மனசாட்சியின் அளவுகோல் என்ன

சில தினங்களுக்கு முன்...... ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். வழக்கம் போல், விவாதம் பல தளங்களை எல்லாம் தாண்டி, ” உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்” , “ஊதியத்திற்கு ஏற்ற உழைப்புஎன்ற மையப்புள்ளியில் வந்து நின்றது.

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்பது தொழிலாளர்களின் வாதம். அதே நேரத்தில் ஊதியத்திற்கு ஏற்ப உழைப்பு என்பது முதலாளிகளின் வாதம்.
எங்களுடைய வாதம், இரண்டாவது வகையை சேர்ந்தது. ”என்னுடைய மனசாட்சி உட்பட்டு, என்னுடைய வேலையை செம்மையாக செய்து முடித்தேன்என்றார் ஆசிரியர்.

இந்த இடத்தில்... அறிவு பிதுங்கி, முக்கியமானதொரு கேள்வியை முன்னெடுத்தது. ” நாம் அனைவரும்... நம்முடைய மனசாட்சி படியே வேலை செய்து வருகிறேன்என்று சொல்லி வருகிறோம்.

ஆனால் என்னுடைய மனசாட்சிக்கு சரியாக தோன்றுகின்ற விஷயம், மற்றொருவருக்கு மாறாக தோன்றலாம். ஒரு இடத்தில் வேலை செய்கிற அனைவரின் மனமும் , ஒரு மாதிரியாக இருக்காது. ஒருவருக்கு கொலை செய்வது மனசாட்சியின் படி சரியாக தோன்றலாம். அதற்காக... அதை ஒத்து கொள்ள இயலுமா???

மனசாட்சி படிஎன்பதை... நான் இரு விதங்களில் புரிந்து கொள்ள முயல்கிறது. 1. அரசிலயமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, கொள்கை நெறிமுறைகளின் படி வேலை செய்வது. 2. நாம் செய்யும் பணியின் முழுமையான பலனை, பயணாளி கிடைக்க செய்வது.

எடுத்து காட்டாக.... 1. என்னுடைய பணிக்கு நேர தவறாமல் செல்ல வேண்டும்.2. நோயாளிகளுக்கு பிணியை தீர்ப்பதற்கு, என்னுடைய அறிவிற்கு உட்பட்டு, அதிகபட்சமாக முயல வேண்டும்.

மேற்கண்ட இரண்டில், ஒன்றை விட்டாலும் உபயோகம் ஒன்றுமில்லை. இரண்டோடு சேர்த்தே பயணிக்க வேண்டும்.

இதையும், “ என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டே சொல்கிறேன்என்பதையும் விளிக்க வேண்டுமோ!!?!?!?

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Monday, March 20, 2017

நீயா நானா - திருமணத்தில் பெண்ணின் எதிர்பார்ப்புகள்

நேற்றைய நீயா நானாவில் கலந்து கொண்டவர்கள், மேல்தட்டு மற்றும் மத்திய வர்க்கத்தினை சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். மேலும் பெருநகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்களாக தெரிகின்றன. ஆதலால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு பெண்களின் புரிதலாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை!!!

பெருநகரங்கள் ஏற்படுத்தி உள்ள நுகர்வு கலாச்சாரம் மற்றும் திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய புரிதல்களே, இத்தனை ஆசை!!!

இந்திய சமூக பெற்றோர்கள், தமது குழந்தைகளின் திருமணங்களை, கெளரவத்தின் அடையாளமமாகவே காண்கின்றனர். இது குழந்தைகள் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகளையும் நினைவு படுத்த வேண்டியது அவசியம்!!!!!

ஏழையாக இருந்தாலும், திருமண செலவுகள் எனும் போது, பெரும்பாலும் தகுதிக்கு மீறியதாகவே நடைபெறுகிறது. பணக்காரர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை!!!

நல்ல மணமகள்/மணமகன் கிடைத்தால் போதும்..... பொருளாதாரம் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை... “ என்ற திருமணம் குறித்த புரிதல்கள் கடந்து பல ஆண்டுகளாகி விட்டது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே வரனை தேடுகின்றனர். .கா... பெண்ணும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆண் எண்ணுவதும்.... புகும் வீடும் மாடி வீடாகவும், காரும் இருக்க வேண்டும் என்று பெண் எண்ணுவதும் சாதாரணமாகி விட்டது.

எதையுமே பகட்டாக செய்ய விரும்பும் இளைஞர் சமூகத்தில், பொருளாதாரத்தை முன்னிறுத்தும் நுகர்வு சமூகத்தில், உழைக்காமலே ஊதியம் பெற வேண்டும் என்னும் உலகத்தில் ..... இத்தகைய ஆசைகள் குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்.

திருமணம் குறித்த புரிதல்களில், பெண்களின் ஆசைகளை அதிகமாகவே தெரிந்தாலும்.... அதற்கு பெண் சமூகத்தின் மீது மட்டும் குற்றம் சாட்டுவது தேவையில்லை. அதே மாதிரி.... திருமணம், பொருளாதாரம், குடும்பம் குறித்த புரிதல்களை, இன்றைய கால கல்வி முறை ஏற்ப்படுத்தவில்லை என்பதும் வேதனை அளிப்பதாகவே இருக்கிறது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Wednesday, March 15, 2017

கல்வி- ஒரு விவாதம்

கல்வி குறித்த விவாதங்களில், முற்று புள்ளிகளுக்கு வழியே இல்லை. பாட திட்டம், தரம், தேர்வு முறை, வியாபாரம், கற்பித்தல் முறை என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

முந்தைய குலகல்வி முறை தொடங்கி, இன்றைய ஆன்லைன் கோர்ஸ் வரை எதுவும் நிலையில்லை. காலத்திற்கு ஏற்ப மாறக் கூடியவை.

வாழ்க்கையை புரிந்து, அதன் வழி செம்மையான வாழ்க்கையை அமைப்பதற்கும், எதிர் கொண்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் தேவையான அறிவை வழங்கும் முறைஎன்பதே கல்வியின் முதன்மை நோக்கம். இந்த குறிக்கோள் மட்டும் எடுத்து கொண்டு கல்வி குறித்த உரையாடலை வழிநடத்தினால், மேற்கண்ட விவாதங்களே தேவையில்லை.

மாறாக, கல்வியின் நோக்கம் அடுத்தக்கட்டமாக.... வேலை பெறுதல் என்ற நிலையை நோக்கி நகர்ந்தது விட்டது. அந்த இடம் பிரச்சனையின் தொடக்க புள்ளி என்பேன். அதற்கு ஏற்றாற் போல், உலக மக்களும் முதன்மை(விவசாயம்) மற்றும் இரண்டாவது துறையை(உற்பத்தி துறை) விடுத்து , மூன்றாம் துறையான (சேவை துறையை) நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

போட்டி நிறைந்த சேவை துறையில், காலடி எடுத்து வைப்பதற்கு, கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் நீட்சியே இன்றைய CBSE,ICSE போன்ற கல்வி தர நிலைகள். இவையெல்லாம், மாணவனின் மனநிலைக்கும், வயதிற்கும் ஏற்ற கற்கும் நிலையை விட அதிகம் என்பதே நிதர்சனம்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். குறைந்த அளவிலான பாட திட்டம் என்பது எல்லோரும் பொதுவானது. குறைந்த கற்கும் திறன் உள்ள மாணவன் முதல் அனைவருக்கும் எளிதாக தேர்வு பெற்று விடலாம். ஆனால் CBSE,ICSE போன்ற நிலைகளால், குறைந்த கற்கும் திறன் உள்ள மாணவன் அடிப்பட்டு விடுவான்.

ஆனால், இன்றைய போட்டி உலகுக்கு தேவை என்பதனாலயே CBSE,ICSE போன்றவை கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையால், ” நன்றாக படிக்கும் மாணவன் மட்டுமே இயற்கையினால்(சூழ்நிலையால்) தப்பித்து பிழைப்பான்”. பொருளாதாரத்தை மையப்படுத்திய வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் சமூக நீதி நிச்சயம் வீழும்.

ஒரு கூட்டத்தில் உள்ள மானில், குறைவான வேகத்தினால் ஒடக்கூடிய மான், சிங்கத்தின் உணவிற்கு இரையாகும்….. அது போல்தப்பித்து பிழைத்தல் விதிப்படி…. நல்ல திறமையுள்ள மாணவன் தப்பி நிற்பான். மாறாக, போட்டி உலகத்தில் சமூக நிதி என்பதெல்லாம், கானல் நீராக மாறி நிற்கிறது.

கல்வி குறித்து விவாதங்களுக்கு முற்று புள்ளிகளே கிடையாது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


ஏழை பணக்காரனாக மாற எண்ணுவதில் தவறில்லையோ

” பணம் வாழ்க்கையின் ஒரு பகுதி; வாழ்க்கை சிறப்பாக அமைப்பவதற்கும் பணம் மட்டுமே தேவையில்லை.” என்ற கூற்று தெரிந்தாலும், பண வேட்டை குறித்த தேடலினை, நாம் நிறுத்தியதே இல்லை. (என்னையையும் சேர்த்து தான்).

பணம் சேர்க்க வழிவகை தெரியாதவர்களே, பணம் குறித்த அசுசையை ஏற்படுத்துவார்கள் ” என்ற பணக்காரர்களின் கருத்தில் கூட உண்மை இருக்கலாம்.

பணம் தான் முக்கியம் “ என்ற 99% மக்களின் புரிதலையும் முற்றிலுமாக புறம் தள்ளி விடவும் முடியாது. காரணங்கள் இல்லாமல் இல்லை.

///// இந்தியாவின் 58% செல்வம் இந்தியாவின் 1% செல்வந்தர்கள் கைகளில் இருக்கிறது என்று சமீபத்தில் தெரிவித்தது உலகப் பொருளாதார அமைப்புக்காக ஆக்ஸ்ஃபோம் மேற்கொண்ட ஆய்வறிக்கை.////

///// குறிப்பாக, 57 பெருங்கோடீஸ்வரர்களின் கைகளில் உள்ள செல்வம் 70% இந்தியர்களின் கைகளில் உள்ள செல்வத்துக்குச் சமம்////

////// உலகத்தில் 8 பெருங்கோடீஸ்வரர்களிடம் உள்ள செல்வம் 50% உலக மக்களின் கைகளில் உள்ள செல்வத்துக்குச் சமம்/////

மேற்கண்ட தகவுகளை பார்க்கும் போது, பொதுமக்களின் எண்ணங்களை தவறென்று எண்ணவும் முடியவில்லை.

இன்றைய பொருளாதாரம், அரசியல் போன்றவற்றை பெரும் செல்வந்தர்களே மறைமுகமாக தீர்மானிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் பெற்றும் ,மேற்கொண்டும் சாம்பாதிக்க நினைப்பவர்கள் மத்தியில், வாழ்க்கையை நகர்த்துவதற்காக பணத்தாசையை பெற்ற்வர்களை குறை கூறுதல் சரியா????

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்