சில தினங்களுக்கு முன்...... ஒய்வு பெற்ற தலைமையாசிரியர்
ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். வழக்கம்
போல், விவாதம் பல தளங்களை
எல்லாம் தாண்டி, ” உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்” , “ஊதியத்திற்கு
ஏற்ற உழைப்பு” என்ற மையப்புள்ளியில் வந்து
நின்றது.
உழைப்பிற்கு
ஏற்ற ஊதியம் என்பது தொழிலாளர்களின்
வாதம். அதே நேரத்தில் ஊதியத்திற்கு
ஏற்ப உழைப்பு என்பது முதலாளிகளின்
வாதம்.
எங்களுடைய
வாதம், இரண்டாவது வகையை சேர்ந்தது. ”என்னுடைய
மனசாட்சி உட்பட்டு, என்னுடைய வேலையை செம்மையாக செய்து
முடித்தேன்” என்றார் ஆசிரியர்.
இந்த இடத்தில்... அறிவு பிதுங்கி, முக்கியமானதொரு
கேள்வியை முன்னெடுத்தது. ” நாம் அனைவரும்... நம்முடைய
மனசாட்சி படியே வேலை செய்து
வருகிறேன் ” என்று சொல்லி வருகிறோம்.
ஆனால் என்னுடைய மனசாட்சிக்கு சரியாக தோன்றுகின்ற விஷயம்,
மற்றொருவருக்கு மாறாக தோன்றலாம். ஒரு
இடத்தில் வேலை செய்கிற அனைவரின்
மனமும் , ஒரு மாதிரியாக இருக்காது.
ஒருவருக்கு கொலை செய்வது மனசாட்சியின்
படி சரியாக தோன்றலாம். அதற்காக...
அதை ஒத்து கொள்ள இயலுமா???
” மனசாட்சி
படி” என்பதை... நான் இரு விதங்களில்
புரிந்து கொள்ள முயல்கிறது. 1. அரசிலயமைப்பு
சட்டத்திற்கு உட்பட்டு, கொள்கை நெறிமுறைகளின் படி
வேலை செய்வது. 2. நாம் செய்யும் பணியின்
முழுமையான பலனை, பயணாளி கிடைக்க
செய்வது.
எடுத்து
காட்டாக.... 1. என்னுடைய பணிக்கு நேர தவறாமல்
செல்ல வேண்டும்.2. நோயாளிகளுக்கு பிணியை தீர்ப்பதற்கு, என்னுடைய
அறிவிற்கு உட்பட்டு, அதிகபட்சமாக முயல வேண்டும்.
மேற்கண்ட
இரண்டில், ஒன்றை விட்டாலும் உபயோகம்
ஒன்றுமில்லை. இரண்டோடு சேர்த்தே பயணிக்க வேண்டும்.
இதையும்,
“ என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டே சொல்கிறேன்” என்பதையும் விளிக்க வேண்டுமோ!!?!?!?
உங்களில் ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment