Wednesday, March 15, 2017

கல்வி- ஒரு விவாதம்

கல்வி குறித்த விவாதங்களில், முற்று புள்ளிகளுக்கு வழியே இல்லை. பாட திட்டம், தரம், தேர்வு முறை, வியாபாரம், கற்பித்தல் முறை என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

முந்தைய குலகல்வி முறை தொடங்கி, இன்றைய ஆன்லைன் கோர்ஸ் வரை எதுவும் நிலையில்லை. காலத்திற்கு ஏற்ப மாறக் கூடியவை.

வாழ்க்கையை புரிந்து, அதன் வழி செம்மையான வாழ்க்கையை அமைப்பதற்கும், எதிர் கொண்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் தேவையான அறிவை வழங்கும் முறைஎன்பதே கல்வியின் முதன்மை நோக்கம். இந்த குறிக்கோள் மட்டும் எடுத்து கொண்டு கல்வி குறித்த உரையாடலை வழிநடத்தினால், மேற்கண்ட விவாதங்களே தேவையில்லை.

மாறாக, கல்வியின் நோக்கம் அடுத்தக்கட்டமாக.... வேலை பெறுதல் என்ற நிலையை நோக்கி நகர்ந்தது விட்டது. அந்த இடம் பிரச்சனையின் தொடக்க புள்ளி என்பேன். அதற்கு ஏற்றாற் போல், உலக மக்களும் முதன்மை(விவசாயம்) மற்றும் இரண்டாவது துறையை(உற்பத்தி துறை) விடுத்து , மூன்றாம் துறையான (சேவை துறையை) நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

போட்டி நிறைந்த சேவை துறையில், காலடி எடுத்து வைப்பதற்கு, கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் நீட்சியே இன்றைய CBSE,ICSE போன்ற கல்வி தர நிலைகள். இவையெல்லாம், மாணவனின் மனநிலைக்கும், வயதிற்கும் ஏற்ற கற்கும் நிலையை விட அதிகம் என்பதே நிதர்சனம்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். குறைந்த அளவிலான பாட திட்டம் என்பது எல்லோரும் பொதுவானது. குறைந்த கற்கும் திறன் உள்ள மாணவன் முதல் அனைவருக்கும் எளிதாக தேர்வு பெற்று விடலாம். ஆனால் CBSE,ICSE போன்ற நிலைகளால், குறைந்த கற்கும் திறன் உள்ள மாணவன் அடிப்பட்டு விடுவான்.

ஆனால், இன்றைய போட்டி உலகுக்கு தேவை என்பதனாலயே CBSE,ICSE போன்றவை கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையால், ” நன்றாக படிக்கும் மாணவன் மட்டுமே இயற்கையினால்(சூழ்நிலையால்) தப்பித்து பிழைப்பான்”. பொருளாதாரத்தை மையப்படுத்திய வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் சமூக நீதி நிச்சயம் வீழும்.

ஒரு கூட்டத்தில் உள்ள மானில், குறைவான வேகத்தினால் ஒடக்கூடிய மான், சிங்கத்தின் உணவிற்கு இரையாகும்….. அது போல்தப்பித்து பிழைத்தல் விதிப்படி…. நல்ல திறமையுள்ள மாணவன் தப்பி நிற்பான். மாறாக, போட்டி உலகத்தில் சமூக நிதி என்பதெல்லாம், கானல் நீராக மாறி நிற்கிறது.

கல்வி குறித்து விவாதங்களுக்கு முற்று புள்ளிகளே கிடையாது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


No comments:

Post a Comment