நேற்றைய
நீயா நானாவில் கலந்து கொண்டவர்கள், மேல்தட்டு
மற்றும் மத்திய வர்க்கத்தினை சேர்ந்தவர்கள்
என்று நினைக்கிறேன். மேலும் பெருநகரங்கள் மற்றும்
அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்களாக தெரிகின்றன.
ஆதலால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு
பெண்களின் புரிதலாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை!!!
பெருநகரங்கள்
ஏற்படுத்தி உள்ள நுகர்வு கலாச்சாரம்
மற்றும் திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய புரிதல்களே, இத்தனை ஆசை!!!
இந்திய
சமூக பெற்றோர்கள், தமது குழந்தைகளின் திருமணங்களை,
கெளரவத்தின் அடையாளமமாகவே காண்கின்றனர். இது குழந்தைகள் மனதில்
ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகளையும் நினைவு படுத்த வேண்டியது
அவசியம்!!!!!
ஏழையாக
இருந்தாலும், திருமண செலவுகள் எனும்
போது, பெரும்பாலும் தகுதிக்கு மீறியதாகவே நடைபெறுகிறது. பணக்காரர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே
இல்லை!!!
” நல்ல
மணமகள்/மணமகன் கிடைத்தால் போதும்.....
பொருளாதாரம் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை... “ என்ற
திருமணம் குறித்த புரிதல்கள் கடந்து
பல ஆண்டுகளாகி விட்டது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக
இருந்தாலும் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே வரனை தேடுகின்றனர். எ.கா... பெண்ணும் வேலைக்கு
செல்ல வேண்டும் என்று ஆண் எண்ணுவதும்....
புகும் வீடும் மாடி வீடாகவும்,
காரும் இருக்க வேண்டும் என்று
பெண் எண்ணுவதும் சாதாரணமாகி விட்டது.
எதையுமே
பகட்டாக செய்ய விரும்பும் இளைஞர்
சமூகத்தில், பொருளாதாரத்தை முன்னிறுத்தும் நுகர்வு சமூகத்தில், உழைக்காமலே
ஊதியம் பெற வேண்டும் என்னும்
உலகத்தில் ..... இத்தகைய ஆசைகள் குறித்து
ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்.
திருமணம்
குறித்த புரிதல்களில், பெண்களின் ஆசைகளை அதிகமாகவே தெரிந்தாலும்....
அதற்கு பெண் சமூகத்தின் மீது
மட்டும் குற்றம் சாட்டுவது தேவையில்லை.
அதே மாதிரி.... திருமணம், பொருளாதாரம், குடும்பம் குறித்த புரிதல்களை, இன்றைய
கால கல்வி முறை ஏற்ப்படுத்தவில்லை
என்பதும் வேதனை அளிப்பதாகவே இருக்கிறது.
உங்களில் ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment