” பணம் வாழ்க்கையின்
ஒரு பகுதி; வாழ்க்கை சிறப்பாக அமைப்பவதற்கும் பணம் மட்டுமே தேவையில்லை.” என்ற கூற்று
தெரிந்தாலும், பண வேட்டை குறித்த தேடலினை, நாம் நிறுத்தியதே இல்லை. (என்னையையும் சேர்த்து
தான்).
“
பணம் சேர்க்க வழிவகை தெரியாதவர்களே, பணம் குறித்த அசுசையை ஏற்படுத்துவார்கள் ” என்ற
பணக்காரர்களின் கருத்தில் கூட உண்மை இருக்கலாம்.
”
பணம் தான் முக்கியம் “ என்ற 99% மக்களின் புரிதலையும் முற்றிலுமாக புறம் தள்ளி விடவும்
முடியாது. காரணங்கள் இல்லாமல் இல்லை.
///// இந்தியாவின்
58% செல்வம் இந்தியாவின் 1% செல்வந்தர்கள் கைகளில் இருக்கிறது என்று சமீபத்தில் தெரிவித்தது
உலகப் பொருளாதார அமைப்புக்காக ஆக்ஸ்ஃபோம் மேற்கொண்ட ஆய்வறிக்கை.////
///// குறிப்பாக,
57 பெருங்கோடீஸ்வரர்களின் கைகளில் உள்ள செல்வம் 70% இந்தியர்களின் கைகளில் உள்ள செல்வத்துக்குச்
சமம்////
////// உலகத்தில்
8 பெருங்கோடீஸ்வரர்களிடம் உள்ள செல்வம் 50% உலக மக்களின் கைகளில் உள்ள செல்வத்துக்குச்
சமம்/////
மேற்கண்ட தகவுகளை
பார்க்கும் போது, பொதுமக்களின் எண்ணங்களை தவறென்று எண்ணவும் முடியவில்லை.
இன்றைய பொருளாதாரம்,
அரசியல் போன்றவற்றை பெரும் செல்வந்தர்களே மறைமுகமாக தீர்மானிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
எல்லாவற்றையும்
பெற்றும் ,மேற்கொண்டும் சாம்பாதிக்க நினைப்பவர்கள் மத்தியில், வாழ்க்கையை நகர்த்துவதற்காக
பணத்தாசையை பெற்ற்வர்களை குறை கூறுதல் சரியா????
உங்களில் ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment