புதிய தலைமுறை இதழின் நீண்ட நாள் வாசகன் நான்!!!
முதுநிலை மருத்துவ படிப்பு முதல்…. புதிய தலைமுறை இதழை வாசிக்க ஆரம்பித்தேன்!!! வெகுஜான வார இதழ் என்ற அடையாளத்தில் (சினிமா, கதை ….
) இருந்து மாறி… சமூக பிரச்சனைகளை பேசும் இதழாக வலம் வந்து கொண்டிருந்தது!!!
சமூகத்தின் மீதான தாகம்… இதழை வெகுவாக என்னுள் ஈர்த்தது என்பதில் மிகையில்லை!!!
ஒரு வருடத்திற்கான சந்தா இதழினை… மொத்தமாக செலுத்தி… தபால் வழியாக பெறுவது வழக்கம்!!!
அந்த காலத்தில்…….. ஒளி வடிவமாக (தொலைக்காட்சி ஊடகம்) பெரிதாக வளர்ச்சி அடையும் இல்லை!!! அது போல் இணையம் சார்ந்த தொலைபேசியும் பெரியளவு வளர்ச்சி பெறவில்லை. ஆதலால்.. .அச்சு ஊடகம் மட்டும் … சமூக பார்வை சார்ந்த வெற்றிடத்தை நிரப்பியது!!
கல்லூரி முடித்து….. கிளினிக்கிலும் இதழை வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது!! ” கழுதை தேய்ந்து கட்டெறும்பான “ கதையை போல்… இதழை படிக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்தது கொண்டே வந்தது!!! கடைசியாக… படிக்காமல் அலமாரியில் இருந்த இதழ்கள் எண்ணிக்கை அதிகமானது!!! கடந்த ஆண்டு வாங்குவதை நிறுத்தி விட்டேன்!!!கடந்த பத்தாண்டில்….. எனது சிற்றிதழ் வாசிப்பு குறித்த சிறுகதை சுருக்கம்!!!
கடந்த பத்தாண்டில் தொழிற்நுட்பம் சார்ந்த சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து பார்க்க வேண்டும்!!!! எளிய வாசிப்பாளாக…… சமூக புரிதலுக்கான ஊடகமாக புதிய தலைமுறை இதழ் ஆரம்பத்தில் இருந்தது.
ஆனால் காலங்கள் செல்ல….. முகநூல் பெரிய வீச்சினை அறிவுசார் பாதையில் ஏற்படுத்தியது!!! வெட்டி பேச்சுகள் ஆயிரம் இருந்தாலும்…. கருத்துசார் பதிவுகளை தேடி படிக்கலலேன்!!! அதோடு ஒளி-ஒலி ஊடக வருகையும்( செய்தி தொலைகாட்சி)/இணையம் … இன்னும் அறிவு பாதையை விசாலமாக்கியது!!!
அடுத்த விஷயமாக… யூடியூப் சேனல்களில் வருகை…. அடுத்த கட்ட நான்கு கால் பாய்ச்சல்!! இவ்வாறு அறிவு தாகத்தை நிரப்பும் களமாக…. நவீனத்துவ ஊடகங்கள் மாறின!!! அதே சமயத்தில் …… புதிய தலைமுறை வரும் கட்டுரைகள்… பெரும்பாலும் முகநூலில் பேசப்பட்ட/ தொலைகாட்சியில் பேசிய விஷயங்களாக இருக்கவே செய்தன!!!!
சுடச்சுட… ஒரு விஷயத்தினை தெரிந்து கொள்ள இணையமே நல்ல வாய்ப்பினை தரும் போது.. .அடுத்த வாரம் வர இருக்கின்ற இதழினை படிக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்து போனது!!!
நிற்க…….
கொரனா வைரஸிற்கு பிறகு ….. ஆனந்த விகடன் இதழில் நடக்கும் ஆள் குறைப்பு விஷயத்தினை … இதே புரிதலோடு பார்க்க விரும்புகிறேன்!!! ஒரு வெகுஜான இதழின் இடத்தை… இன்றைய ஒளி ஊடகங்களும் இணைய ஊடகங்களும் பிடித்து கொள்கின்றன!!! அதனை தாண்டி ஈர்க்கும் தன்மை.. .அச்சு ஊடகத்திற்கு தேவையாக உள்ளது!!!
ஒரு செய்தி தொலை காட்சியில் பணிபுரியும் பத்திரிக்கையாளரை தாண்டிய திறமை… அச்சு ஊடக பத்திரியாளருக்கு தேவையாக உள்ளது!!!
செய்தி தொலைகாட்சியில்.. ஒளி கலவையில் கருத்து பெரிதாக எடுத்து கொள்ளப்படுவதில்லை!!! ஆனால்…. அச்சு ஊடகத்தில் சொற் சுவை…. கருத்து சுவை அதிகமாக தேவைப்படுகிறது!!! மேலும் படிப்பதற்கு சலிப்பு கூட ஏற்படுகிறது!!! (ஏன்… இந்த பதிவை கூட… எழுத்தாக இல்லாமல்… ஒளி-ஒலியாக இருந்தால் பார்ப்பவர்கள் அதிகமாக இருப்பார்.. )
திரையரங்கங்களினை
தாண்டி திரைப்படங்கள் ஒடிடி தளங்களுக்கு செல்வது போல…… அச்சு ஊடகத்தின் இடத்தை….. ஒளி/இணைய ஊடகங்கள் பிடித்து விட்டன!! இந்த சமூக மாற்றத்தை ஏற்று கொண்டு.. .அதற்கேற்றாற் போல்… அச்சு ஊடகம் தகவமைப்பினை மாற்றுவது மிக முக்கியம்!!!
உலகம் மிக வேகமாக உருண்டோடி கொண்டிருக்கிறது!! அதனை உணரவில்லை யென்றால்… நாம் மிதிபடுவது நிச்சயம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்