Friday, May 15, 2020

விவசாய பொருட்களின் விலை - பணவீக்கம்

காலையில் மருத்துவமனைக்கு கிளம்பும் போது.. காய்கறி வாங்குவதற்கு துணிப்பை ஒன்றை கொடுத்தார் அம்மா!!

மாலையில்.. மருத்துவமனையிலிருந்து கிளம்புவதற்கு முன்.... “என்னென்ன காய்கறிகள் வாங்கனும்? “ என்று போன் பண்ணினேன் (நாம ஏதாவது வாங்கிட்டு போக... இது தான் வீட்டுல இருக்கே... ஏன் தேவையில்லாம வாங்கிட்டு வந்தே!!! என்று திட்டு வாங்குவதை விட கேட்டு வாங்குவது நல்லது தானே!)

தக்காளி, உருளைகிழங்கு, புடலங்காய்.......... பீன்ஸ் மட்டும் விலை அதிகம்!! பாத்துக்க !!! “என்று துண்டித்தார் அம்மா. (ீன்ஸ் கிலோ 200 ரூபாய் இருக்கும் போல்....... என்று நினைத்து கொண்டேன் )

கடைக்கு சென்று ஒவ்வொரு காய்கறியாக எடுத்து கொண்டே... “ பீன்ஸ் எவ்வளவு அண்ணா ? “ என்றேன்

ஒரு கிலோ.... 100 ரூபாய்... விலை அதிகம் தான்!! “ என்றார் கடைக்காரர்

நிற்க...
.
ஒரு கிலோ பீன்ஸ் 100 ரூபாய் என்பது எனக்கு அதிகமாக தோன்றவில்லை!!!

நீங்களே யோசித்து பாருங்களேன்... ” ஒரு கிலோ 100 ரூபாய் என்றால் விவசாயி எவ்வளவு ரூபாயிற்கு விற்று இருப்பார் “ 50 லிருந்து 70 ரூபாய் வரை இருக்கும்!!!

பீன்ஸ் விளைச்சல் செய்வதற்கு.. எவ்வளவு செலவாகி இருக்கும்!!! தண்ணீர் பாய்ச்சல், உரம், பூச்சிக்கொல்லி, ஆட்செலவு, உடலுழைப்பு என செலவு அதிகமாகவே இருக்கும்!!! ஆனால் 50 -70 ஆக இருக்கும் போது.... எவ்வளவு லாபம் விவசாயி பெற்றிருப்பர்??? மிக சொற்பமே!!!

நானும் பலமுறை காய்கறி வாங்கிய போது.... பெரும்பாலும் 200 ரூபாயை தாண்டியதில்லை!!! மளிகை கடைக்கு சென்று 4 பொருட்கள் வாங்குங்களேன்!!! 200- 300 வரை வரும்!!! சோப், பற்பசை போன்ற பொருட்களெல்லாம் வருட வருடம் அதிகமாகி கொண்டே போகிறது!!!

ஆனால் விவசாய பொருட்கள் மட்டும் விலையேறிதாக தெரியவில்லை!!! விவசாய பொருட்களினை விலையேற்றாமல் விவசாயத்தை காக்க முடியாது.

அத்தியாவசிய பொருட்களினை விலையேறினால்.. மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று நடுத்தர மக்களின் எண்ணங்களால்.... விவசாயத்தையும் விவசாயிகளையும் இழந்து கொண்டிருக்கிறோம்!!!

விவசாயத்தினை புனிதப்படுத்தி... சமூக வலைதளங்களில் விவசாயம் கண்ணீர் வடிப்பதை விட்டு,,.... காய்கறி கடையில் பேரம் பேசாமல் பணத்தை கொடுத்தாலே சிறப்பு!!!

அரசு ஊழியர்களின் சம்பளத்தை 20 வருடங்களுக்கு முன் என்ன இருந்தது??? ஒரு கிலோ நெல் எவ்வளவு விலை?? ஒரு டீ என்ன விலை?? என்று ஒப்பிட்டு பாருங்களேன்!!

ஒரு தோசையின் விலையினை... ஹோட்டலினால் விலை நிர்ணயம் செய்ய முடியும்!!! ஆனால்... தோசையிற்கு தேவையான அரிசி விற்கின்ற விவசாயினால் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை!!! சந்தையே முடிவு செய்கிறது!! நஷ்டம் விவசாயிக்கு மட்டுமே!!!

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்ற கூடாது என்ற பொது புத்தியில்.... விவசாயத்தை அழிக்காதீர்கள்!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

 


No comments:

Post a Comment