” உங்க ஊர்ல...
எங்க பார்த்தாலும் மாடி விடா இருக்கு...
உங்க ஊர்ல உள்ளவங்க எல்லாரும் பணக்காரங்க சார்... “ என்றார் சென்னையை சேர்ந்த மருத்துவர்.
“ உங்க ஊரு இவ்வளவு பசுமையா இருக்கு.. கஜா புயல் வந்த மாதிரியே தெரியல... “ என்றார் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர்.
இவர்கள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை!!!
வேதாரண்யமும் அதன் சுற்றுப்புறமும் பொருளாதார வளம் நிறைந்த பகுதியே!! காவிரியின் கடைமடை பகுதியாக இருந்தாலும் காவிரி நீர் வராததால்.....
விவசாயத்தை பெரிதாக நம்பி இருக்கவில்லை!!!
பெரும்பாலும் வெளிநாட்டு வருமானத்தை சார்ந்தது; குறிப்பிட்ட அளவு அரசு ஊழியர்களையும் கொண்டது; சென்னை மற்றும் கோயமுத்தூர் வேலைக்கு செல்லும் நபர்கள் மூலமும் வருமானமும் உண்டு உப்பளம், மல்லிகைப்பூ, புகையிலை, மீன் பிடித்தல், இறால் பண்ணை என பல்வகை தொழில்களையும் சார்ந்தது உள்ளது!!!
இதனையெல்லாம்
தாண்டி.... விவசாயமும் நடைபெறும்!!! ஆனால் 20-30 சதவீத மக்கள் மட்டுமே விவசாயத்தை முக்கியமான வருமானமாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு விவசாயம் உபரி வருமானம்!!! அதிலும் கஜா புயல் ஏற்படுத்திய தாக்கம் ஏராளம்!! தென்னை, மா, புளி, முந்திரி, சவுக்கு, காய்கறிகள் என உபரி விவசாய வருவாய் அதிகம்.
சுமார் 50-
60 சதவீத மக்கள் மாடி வீடுகளில் வசிக்கிறது. கூரை வேய்ந்த வீடுகள் எண்ணிக்கை... மற்ற பகுதிகளினை ஒப்பிடும் போது... குறைவு தான்!!! (சுமார் 20-40 சதவீதம் இருக்கலாம்)
வளர்ச்சி ஏற்ப ஹார்டுவேர்ஸ், உணவகங்கள், தங்கும் விடுதி, மளிகை கடைகள் என அனைத்திலும் வளர்ந்து வருகிறது. மேலும் சிறிய கடைத்தெருவில் கூட சூப்பர் மார்க்கெட்களும் அதிகமாகி வருகின்றது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் அதிகமாகி வருகிறது.
அத்தியாவசிய பொருட்களை தாண்டி...வசதியை ஏற்படுத்தும் பொருட்களின் நுகர்வும் அதிகமாகி கொண்டு வந்தது. இது முக்கியமான வளர்ச்சியின் அறிகுறி!!!
கஜா புயலுக்கு பின்.. நீண்ட கால விவசாய உபரி வருமானத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது!!! கொரோனா வைரஸ் வெளிநாடு மூலம் வரும் வருமானத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். இது வருங்காலத்தில் வேதாரண்யம் சார்ந்த பகுதியின் வளர்ச்சியின் பெரும்பாதிப்பை ஏற்படுத்தலாம்!!!
தமிழகத்தின் ஒரு மூலைப்பகுதி..... கடலோர பகுதியில் இருப்பிடமான வேதாரண்யத்தில் தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை!!!! அதற்கேற்ப வருமானத்தை சிறப்பாக பயன்படுத்துவது தனிமனித வளர்ச்சிக்கு சிறந்ததாக அமையலாம்!!!
காத்திருப்போம்....
காலம் பதில் அளிக்கலாம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment