சில அவதானிப்புகள்
1. கொரோனா வைரஸ் போன்ற அசாதாரண சூழ்நிலையில், முதலாளித்துவம் மற்றும் உலகமயமாக்கலின் ஏற்படும் சிக்கல்களை பற்றிய புரிய வைத்திருக்கிறது. அது போல் அரசுடைமை, சுயசார்பு பற்றியும் அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் சுயசார்பை முழுமையாக அடைவதும் சாத்தியமில்லை!!!!
முதலாளித்துவம் முழுமையாக மாற்றி அரசுடைமையாக மாற்றுவதற்கு வாய்ப்புகள் குறைவு ( மனதில் முதலாளித்துவத்தை மாற்றாமல்)
2. நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் தேவை அதிகமாகும் போது, அதன் மூலசரக்குகள் தேவையும் அதிகமாகும். அவ்வாறு அதிகமாக மூலசரக்குகள் பறிக்கப்படும் போது, பசுமை சூழ்நிலை பாதிக்கப்படுகிறது. ஆனால் அதே அளவு மூலிகை வளர்ப்பு சூழல் உருவாகிறது. அப்படி வளர்க்கப்படும் போது...... இயற்கையின் பசுமை சூழல் இன்னும் அதிகமாகும்!! மூல சரக்குகளின் விலையும் அதிகமாகும்.
3.
” வீட்டில் ஒய்வு எடுக்கணும்” என்பது பெரும்பாலான வேலைக்கு செல்லும் ஆண்களின் கனவு.. அதுவும் குறிப்பிட்ட காலத்தினை விட அதிகமாக செல்லும் போது... அயர்ச்சி ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள்!! அதோடு வீட்டிலே அடைப்பட்டிருக்கும் பெண்களின் மனநிலை ... ஆண் சமுதாயம் புரிந்து கொண்டிருக்கலாம்!!
4. டெங்கு நோயின் போது சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கை அதிகமாகி விட்டது. அதற்கு அடுத்தாற் போல்... கோரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு... சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கை இன்னும் அதிகமாகி இருக்கிறது. அதை சித்த மருத்துவ சமூகம்.... எவ்வகையில் பயன்படுத்தும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் !!!!
5. ஒரே நாடு, ஒரே ரேஷன் காடு திட்டத்தை அமல்படுத்தி இருந்தால், மற்ற மாநில தொழிலாளர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் பயனடைந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
6. இந்தியா போன்ற வளரும் நாடுகளில்.... அடித்தட்டு மக்களின் புள்ளிவிவரங்கள் பற்றிய விவரங்களினை பெறுவது கடினம்!!! அதனை வருங்காலங்களில் உரிய தரவுகள் பெற்று ஆவண செய்ய வேண்டும். அப்போது தான்.... அவசர காலங்களின் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியும்!!!
7. உணவு பாதுகாப்பு சட்டம்... வறுமை கோட்டிற்கு கீழாக உள்ள மக்களின் உணவினை உறுதி செய்யவே கொண்டுவரப்பட்டது. அதன் மூலமாக தரவு எடுத்திருக்க முடியும்!!! ஆனால்..... அதில் உள்ள பிரச்சனை என்னவென்று தெரியவில்லை. கண்டுபிடித்து களைய வேண்டும்!!!
8. அசாதாரண சூழ்நிலைகளில்.... மனித உரிமைகள் மீறப்பட்டாலும் பொதுசமூகம் ஏற்று கொள்கிறது. அசாதாரண சூழ்நிலைகளில் மக்களாட்சியை விட, சர்வதிகாரம் கூட சிறந்ததாக இருக்கலாம்!!!
9. சிறுசேமிப்பை இழந்த சமூகத்திற்கு ... அதன் தேவையை புரிந்து கொண்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள நுகர்வு கலாச்சாரம்... மீண்டும் சிறு சேமிப்பை பற்றி யோசிக்க வாய்ப்புகள் குறைவே என்றே நினைக்கிறேன்!
10. இந்தியர்களுக்கு சுய சுகாதாரத்தை பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை பின்பற்றி பொது சுகாதாரம் இன்னும் மேம்பாடு அடையலாம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete