Friday, January 25, 2019

ஆசிரியரும் பணி சூழலும்



நீண்ட நாட்களுக்கு பிறகுஎனக்கு பாடமெடுத்த பள்ளி ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவருடைய மகனுக்கு, மருத்துவ ஆலோசனைக்காக வந்திருந்தார். மருத்துவ ஆலோசனைகள் முடிந்த பிறகு, “ பள்ளிக்கூடம் எப்படி போகுது சார்?? “ என்றேன்.

இனிமேல் பள்ளிக்கூடத்துல வாத்தியர் வேலை பார்க்கிறது கஷ்டம் தம்பி!!! “

முன்னாடியெல்லாம், நாம சொன்ன பசங்க கேட்பாங்க!!! இப்ப அப்படியெல்லாம் கிடையாது. அவங்களை கண்ரோல் பண்றது கஷ்டமாக இருக்கு!!! அடிக்கவும் கூடாது; எதாவது கொஞ்சம் கடின வார்த்தைகளை பயன்படுத்தினால், பெற்றோர்கள் வந்து திட்டுறாங்க!!!! எப்படியே எங்க காலத்த ஒட்டி விடுவோம்!!! இனிமேல் என்ன பண்ண போறாங்கன்னு தெரியல!!!” என்று முடித்தார்.

அவர் சொல்வதில் 100 சதவீதம் உண்மை இல்லாமல் இல்லை. எனக்கும்…. இத்தகைய அனுபவங்கள் உண்டு. கடந்த மூன்று வருடங்களில் பல தருணங்களில் பள்ளிகளுக்கு சென்றுள்ளேன். அங்கு இருக்கும் மாணவர்கள் ஒருங்கிணைப்பதில் மிகவும் கடினங்களை உணர்ந்துள்ளேன்.

ஏன்!! உங்களுக்கும் இத்தகைய அனுபவங்களும் இருக்குமே!!!! காலாண்டு, அரையாண்டு விடுமுறை தினங்களில் மாணவர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்களை கவனித்தில்லையா???? பள்ளிக்கூடம் முடிந்து வந்த பிறகு…. சாமளிக்க முடியாமல் டியூசன் அனுப்பும் பெற்றோரையும் நான் அறிவேன்.

அப்படியிருக்கையில்….. 30-100 மாணவர்களை உடைய வகுப்பினை கட்டுபடுத்துவதில்…… எவ்வகையான கஷ்டங்கள் இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். நானும்… “ டீச்சர் வேலையின்ன ஈசி!!! இதுல என்ன கஷ்டம் இருக்கு!!??? “ என்று பல தடவை யோசித்திருக்கிறேன். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் என்னுடைய கருத்தினை மாற்றி கொண்டேன்.

கடந்த பத்தாண்டுகளில் சமூகம் பெருமளவில் மாற்றங்களை சந்தித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர்அறிவை பெற்றோரிடமிருந்தும், ஆசிரியரிடமிருந்தும் புத்தகங்களிடமிருந்தும் பெறுவதாக இருந்தது. அவர்களுக்கு பாடமெடுப்பது எளிது. ஆனால்…. இன்றோ…… இணையம், காட்சி ஊடகங்கள் என சமூகம் வேகமாக மாறி வருகிறது. இவ்வாறு அறிவை பல இடங்களிலிருந்து பெறும் போது, மாணவனை முறைப்படுத்துவது கடினமாகிறது. அதிலும் பாடத்திட்டமும் கற்பிக்கும் முறைகளும் வேகமாக மாறி விட்டது. அதையெல்லாம் முழுமையாக உள்வாங்கி செயல்படுத்துவதெல்லாம் கடினம்!!!

அதை செய்வதற்கு தானே ஊதியம் பெறுகிறார்கள் என்று எதிர் கேள்வியெல்லாம் கேட்கலாம். “ உங்களது துறையில்நீங்கள் எந்தளவிற்கு அப்டேட்டாக இருக்கிறீர்கள் !?!?!? “என்று கேட்டு கொள்ளுங்கள்.

இதையெல்லாம் தாண்டி முக்கியம் விஷயம்…….. ஒரு வளமானது சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியரின் பணி!!! அதற்காகவே அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் பணி, அதன் நோக்கத்தினை நிறைவேற்றுகிறதா??? என்பது மற்றொரு கேள்வி!!! அதை முழுமையடையவில்லை என்பதும் கசப்பான உண்மை.

மானப்பாடம் திறனை சோதிக்கும், கொள்குறிவகை எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றியமைத்தால் இன்னும் சிறப்பாக அமையலாம். எழுத்து தேர்வோடு கூடுதலாக, 100 மதிப்பெண்களுக்கு பாடமெடுக்கும் திறனை சோதிக்கும் (நேர்முக தேர்வு மாதிரியான) தேர்வினையும் இணைக்க வேண்டும்.

மைண்ட் வாய்ஸ் நினைச்சுகிட்ட்ட்டு…. வேகமாக பேசிட்டேனோ!!!! போராளிகள் வரதுக்குள்ளே ஒடிடணும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Thursday, January 17, 2019

பொங்கலும் சுயசார்பும்


கிராமபுறங்களில் பொங்கல் என்றாலே…. அது மாட்டு பொங்கல் தான் !!!! அது சமீப காலங்களில் மிகவும் குறைந்து வருகிறது. எனது வீட்டினை சுற்றியும்….. சுமார் 20-30 வீடுகளில் மாடுகள் இருந்த நிலை குறைந்து தற்போது 2-3 வீடுகளாக சுருங்கி விட்டது. மாட்டு பொங்கலன்று உடைக்கப்படும் திருட்ஷ் சட்டிகளும் சாலைகளில் குறைந்தே காணப்படுகிறது.

சுமார் 15 வருடத்தின் முன்எனது வீட்டிலும் மாடுகள் இருந்தது. 4-5 லிட்டர் வரை பால் கறக்கும். ஆனால் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத நிலையினால், அதையும் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். பிறகு மற்றவர்கள் வீட்டிலிருந்து பசும்பால் வங்கினேன். பிறகு, அவர்களும் மாடுகளினை விற்க , பாக்கெட் பால் வாங்கும் நிலைக்கும் வந்துவிட்டோம்.

இது எங்கள் வீட்டின் நிலைமையே!!! இது போல் பல கிராம புற வீடுகளின் கதையும் வேறுமாதிரியாக இருக்கும். மாட்டிற்கு வைக்கோல் இல்லாத நிலை, அதை பராமரிப்பு செலவு அதிகம், விவசாயம் பொய்த்தது, கிராமபுறங்களில் வேலையில்லாததால் நகரத்தினை நோக்கிய பயணம் என பல்வேறு காரணங்களை அடுக்கலாம். இதையெல்லாம் தாண்டி…. மனிதனின் சோம்பேறித்தனம் முக்கியம் எனலாம். ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மாடு வளர்க்கிறது விட, பாக்கெட் பால் என்ற மனநிலை மாற்றம் முக்கியம் காரணம் என்பேன்.

இதற்கு இன்னொரு புறமாக, பாலின் உற்பத்தியை அதிகமாக்குவதற்காக….. மேலை நாடுகளின் கலப்பின பசுக்கள் கிராமபுறங்களில் ஊடுருவி விட்டது. ஆதலால்கிராமங்களில் இருக்கும் காளை மாடுகள் முழுவதும் அழிந்து விட்டது எனலாம். அதன் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். சினை ஊசிகள் வந்து, காளைகளை முழுவதும் அழிந்து விட்டது.

இந்த தருணத்தில் தான்……. ஜல்லிக்கட்டு குறித்த பிரச்சனைகள் தொடங்கின. ஜல்லிக்கட்டு நடத்தினால், தமிழர் பராம்பரியம் காக்கப்படும்;நாட்டு மாடுகள் காக்கப்படும் என்ற கோஷங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சிறிதளவு உண்மை இருக்கிறது என்றாலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் முழு வெற்றியை தந்து விடாது.

நமது ஆரோக்கியத்தையும் சுய சார்பையும் முழுவதுமாக ….. நவீனத்துவ உலகில் ஒப்படைத்து விட்டு, டிவியில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து புல்லரித்து கொண்டால், வீழ்வது நாம் தான்!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Thursday, January 10, 2019

பொருளாதார நீதியும் சமூக நீதியும்


இந்திய அரசியலமைப்பு, ஒரு கருத்தினை தனது முன்னுரையில் தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்தியர் அனைவருக்கும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நீதியை அளிக்க வேண்டும்!!!! …..என்பதே அது!!!!

அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதியை அடைய, ஒற்றை தீர்வும் வாய்ப்பில்லதாக தோன்றுகிறது. கால ஒட்டத்திற்கு ஏற்ப, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப கட்டமைக்க வேண்டிய நிலையும் உள்ளது.

இதுவரையில், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரசியலில் சாதி ரீதியான இட ஒதுக்கீடு உள்ளது. பாலினம் அடிப்படையிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளது. இவை சமூக மற்றும் அரசியல் நீதியை நிலைநாட்டுவதாக புரிந்து கொள்ளலலாம். இன்றும் அரசியலில் பாலினம் சார்ந்த இட ஒதுக்கீடு இல்லாத நிலையே உள்ளது. புதிதாக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சமூக கட்டமைப்பில் உள்ள பிரச்சனையினால், நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதுகிறேன். அதே சமயத்தில் , குறிப்பிட்ட சதவீதத்தை தாண்டும் போது, சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையவும் வாய்ப்புள்ளது. அதனால் தான், 50 சதவீத்தை தாண்ட கூடாது என்று இந்திர சகானி வழக்கில் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த இட ஒதுக்கீடு முறைகளை, குறிப்பிட்ட கால இடைவெளியில் மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.. அதை முறையாக செய்யாத போது, அதன் குறை மற்றும் நிறைகளை அறிய வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

ஒரு குறிப்பிட்ட சாதி/மதம்/ பாலினம்/ பொருளாதாரம் சார்ந்து இட ஒதுக்கீடு பெறுவதில் தவறில்லை. குறிப்பிட்ட ஒரு நபரே மீண்டும் மீண்டும் பெரும் போது சிக்கல் ஆரம்பிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டில் எண்ணிக்கையை வரைமுறை செய்வதை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது.

சாதி, மதம் மற்றும் பாலினம் போன்றவை பிறப்பினால் அமைவதால், கணக்கீடுவதில் பிரச்சனைகள் இருக்காது. ஆனால் பொருளாதாரத்தை கணக்கீடுவதில் பிரச்சனைகள் நிறையவே உள்ளது.

உலக வாழ்வியலில் ஏற்ற தாழ்வுகளற்ற சமூகம் சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாதியமும் மதமும் ஏற்றத்தாழ்வினை ஏற்படுத்தினால், குறிப்பிட்ட காலம் கடந்து, பொருளாதாரம் சார்ந்த ஏற்ற தாழ்வினை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளி விடுகிறது. சில இடங்களில் இனம் சார்ந்த பாகுபாடுகளும் அதிகமாகி விடுகிறது.

இதில் எது சரி என்பதே, பகுத்தறிவிற்கு உட்பட்டது. இதனை பொது புத்தியில் யோசித்தால் பயன் ஏதுவுமில்லை. போட்டி உலகில் சமூக நீதி சாத்தியமா? என்பதையும் சேர்த்தே யோசிக்க வேண்டியுள்ளது.

சமூக நலத்தை முழுவதுமான மறந்த நிலையில், தனக்காக குரல் கொடுக்க ஒருவன் இருக்கிறான் என்ற புரிதலை மட்டும் எப்படி புரிந்து கொள்வதென்று புரியவில்லை.

சமூக நீதிக்கும், பொருளாதார ஒதுக்கீடு முறைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை. யாராவது விளக்கினால்…. அடியேன் தெரிந்து கொள்வேன்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்