நீண்ட நாட்களுக்கு பிறகு… எனக்கு பாடமெடுத்த
பள்ளி ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவருடைய
மகனுக்கு, மருத்துவ ஆலோசனைக்காக வந்திருந்தார். மருத்துவ ஆலோசனைகள் முடிந்த பிறகு, “ பள்ளிக்கூடம்
எப்படி போகுது சார்?? “ என்றேன்.
” இனிமேல்
பள்ளிக்கூடத்துல வாத்தியர் வேலை பார்க்கிறது கஷ்டம்
தம்பி!!! “
“ முன்னாடியெல்லாம்,
நாம சொன்ன பசங்க கேட்பாங்க!!!
இப்ப அப்படியெல்லாம் கிடையாது. அவங்களை கண்ரோல் பண்றது
கஷ்டமாக இருக்கு!!! அடிக்கவும் கூடாது; எதாவது கொஞ்சம்
கடின வார்த்தைகளை பயன்படுத்தினால், பெற்றோர்கள் வந்து திட்டுறாங்க!!!! எப்படியே
எங்க காலத்த ஒட்டி விடுவோம்!!!
இனிமேல் என்ன பண்ண போறாங்கன்னு
தெரியல!!!” என்று முடித்தார்.
அவர் சொல்வதில் 100 சதவீதம் உண்மை இல்லாமல்
இல்லை. எனக்கும்…. இத்தகைய அனுபவங்கள் உண்டு.
கடந்த மூன்று வருடங்களில் பல
தருணங்களில் பள்ளிகளுக்கு சென்றுள்ளேன். அங்கு இருக்கும் மாணவர்கள்
ஒருங்கிணைப்பதில் மிகவும் கடினங்களை உணர்ந்துள்ளேன்.
ஏன்!! உங்களுக்கும் இத்தகைய அனுபவங்களும் இருக்குமே!!!!
காலாண்டு, அரையாண்டு விடுமுறை தினங்களில் மாணவர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்களை கவனித்தில்லையா???? பள்ளிக்கூடம் முடிந்து வந்த பிறகு…. சாமளிக்க
முடியாமல் டியூசன் அனுப்பும் பெற்றோரையும்
நான் அறிவேன்.
அப்படியிருக்கையில்…..
30-100 மாணவர்களை உடைய வகுப்பினை கட்டுபடுத்துவதில்……
எவ்வகையான கஷ்டங்கள் இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும்.
நானும்… “ டீச்சர் வேலையின்ன ஈசி!!!
இதுல என்ன கஷ்டம் இருக்கு!!???
“ என்று பல தடவை யோசித்திருக்கிறேன்.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில்
என்னுடைய கருத்தினை மாற்றி கொண்டேன்.
கடந்த பத்தாண்டுகளில் சமூகம் பெருமளவில் மாற்றங்களை
சந்தித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர்… அறிவை பெற்றோரிடமிருந்தும், ஆசிரியரிடமிருந்தும் புத்தகங்களிடமிருந்தும்
பெறுவதாக இருந்தது. அவர்களுக்கு பாடமெடுப்பது எளிது. ஆனால்…. இன்றோ……
இணையம், காட்சி ஊடகங்கள் என
சமூகம் வேகமாக மாறி வருகிறது.
இவ்வாறு அறிவை பல இடங்களிலிருந்து
பெறும் போது, மாணவனை முறைப்படுத்துவது
கடினமாகிறது. அதிலும் பாடத்திட்டமும் கற்பிக்கும்
முறைகளும் வேகமாக மாறி விட்டது.
அதையெல்லாம் முழுமையாக உள்வாங்கி செயல்படுத்துவதெல்லாம் கடினம்!!!
அதை செய்வதற்கு தானே ஊதியம் பெறுகிறார்கள்
என்று எதிர் கேள்வியெல்லாம் கேட்கலாம்.
“ உங்களது துறையில் … நீங்கள் எந்தளவிற்கு அப்டேட்டாக
இருக்கிறீர்கள் !?!?!? “என்று கேட்டு கொள்ளுங்கள்.
இதையெல்லாம்
தாண்டி முக்கியம் விஷயம்…….. ஒரு வளமானது சமுதாயத்தை
உருவாக்குவது ஆசிரியரின் பணி!!! அதற்காகவே அதிக
ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் பணி, அதன் நோக்கத்தினை
நிறைவேற்றுகிறதா??? என்பது மற்றொரு கேள்வி!!!
அதை முழுமையடையவில்லை என்பதும் கசப்பான உண்மை.
மானப்பாடம்
திறனை சோதிக்கும், கொள்குறிவகை எழுத்து தேர்வின் மூலம்
தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றியமைத்தால் இன்னும்
சிறப்பாக அமையலாம். எழுத்து தேர்வோடு கூடுதலாக,
100 மதிப்பெண்களுக்கு பாடமெடுக்கும் திறனை சோதிக்கும் (நேர்முக
தேர்வு மாதிரியான) தேர்வினையும் இணைக்க வேண்டும்.
மைண்ட்
வாய்ஸ் நினைச்சுகிட்ட்ட்டு…. வேகமாக பேசிட்டேனோ!!!! போராளிகள்
வரதுக்குள்ளே ஒடிடணும்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment