Saturday, April 29, 2017

முகநூல் பயன்பாடும் எனது புரிதலும்

முகநூல் குறித்த அதீத பயம், எப்போதும் என் மனதில் உண்டு. ” நம்முடைய நேரத்தை அதிகமாக ஆட்கொண்டு விடுமேஎன்ற பயம் தான்!!! . 2013 வாக்கில் தான் இணைந்தேன். அதற்கு முன்னர் வரை, தினசரி பத்திரிக்கை மற்றும் புத்தகம் ஆகிய இரண்டுமே, என்னுடைய அறிவு பசியை தீர்ப்பவையாக இருந்தன.

முகநூல் இணைந்த பிறகு, என்னுடைய எண்ணைத்தை/பயத்தை சிறிது மாற்றி கொண்டேன். முகநூலினை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். முடிந்த வரை, அதை பின்பற்றியே வருகிறேன் என்று நினைக்கிறேன்.

அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை பொதுநலம் சார்ந்து நடத்தப்பட்டாலும், அதில் பணமும் ஒரு நோக்கமாக அமைகிறது. ஆதலால், ” எதை செய்தால் வாசகர்கள்/மக்கள் விரும்புவார்கள் என்ற நோக்கிலேசெயல்படுவையாக இருக்கின்றன. இத்தகைய காரணங்களில், மேற்கண்ட ஊடகங்கள் பயணிக்கும் பாதை என்பது சற்று சுருக்கப்பட்டதாகவே அமைகிறது. புனைவு மற்றும் கவர்ச்சி தன்மை சார்ந்தே அமைகிறது.

அந்த குறையை முகநூல் போன்ற சமூக ஊடகம் உடைத்தெறித்து இருக்கிறது என்பேன். இதிலும் கவர்ச்சி தன்மையும் புனைவும் இருந்தாலும், குறைவாகவே இருப்பதாகவே தோன்றுகிறது. ஒரு கருத்தை/நிகழ்வை 360 டிகிரி பார்வையில் முழுவதுமாக ஆராய்ந்து விடுகிறது. இதனால் முற்று பெற்ற முடிவுகளை பெற முடியாத என்றாலும், கருத்து செறிவு மிகுந்ததாகவே இருக்கிறது. எனக்கு முகநூல் பல்வேறு தகவல்களையும் கோணங்களையும் தந்து கொண்டு தான் இருக்கிறது.

என்ன அதீத புகழ்ச்சியாக தோன்றுகிறதா???

இதுமாதிரி செயல்படுவர்கள், நிச்சயமாக 5 சதவீதத்திற்கு குறைவானவர்களே!!! அவர்களை தேடி கண்டுபிடித்து, உங்கள் நட்பு பட்டியலில் இணைப்பதுஉங்கள் திறமை!!!

இதையெல்லாம் தவிர்த்து… 95 சதவீதம் நண்பர்கள், வேறு காரணங்களுக்காகவே முகநூலை பயன்படுத்துகிறார்கள். அவர்களை சமாளித்து விலகி இருப்பதும், உங்கள் ஆளுமையின் வெளிப்பாடு….

எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் சேர்ந்தே இருக்கும்!!! அதை நீங்கள்எவ்வகையில் பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் கையில்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்


Wednesday, April 26, 2017

optimum level புரிந்து கொள்ளுங்கள்

நமக்கு பிடித்த பாட்டை, ரீங் டோனாக வைத்திருப்பது வழக்கம்.... ஒரு சில நாட்களுக்கு போன் வரும் போதெல்லாம், இனிமையாக இருக்கும். ஆனால் காலங்கள் செல்ல செல்ல.... அதன் மீது நம்மையறிமாலே வெறுப்பு வர தொடங்கும்.

நாம் விரும்பிய பாடலாகவே இருந்தாலும், ஒரு வித வெறுப்பு உணர்வு வந்து விடுகிறது. காரணம் எளிது!!! எந்தவித விஷயமும், அதன் tolerance level தாண்டும் போது, வெறுப்பு வந்து விடும். இந்நிகழ்வு ரீங் டோன் மட்டுமல்ல!!! அன்பு, உணவு, காதல், காமம் மற்றும் பணம்!!! மனித வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் நடக்க கூடியது..

காதல் திருமணம் செய்தவர்கள் கூட, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, மண வாழ்க்கையில் வெற்றிடம் தோன்றி.... வாழ்க்கை வேப்பங்காயாக
கசக்க தோன்றும்.

அருணாச்சலம் படத்தில், ரஜினிக்கு சிகரெட்டின் மீது வெறுப்பு வருவதும், இந்த உளவியல் பிண்ணனியே!!!

எல்லாவற்றிற்கும் optimum level/tolerance level என்று ஒரு புரிதல் இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் மாற கூடியது. அந்த இடத்தை புரிந்து கொண்டால், வாழ்க்கை இனிக்கும்!!! இல்லையேல் வாழ்க்கையே வெறுமை கொண்டது போல் தோன்றும்....

optimum level/tolerance level புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Monday, April 24, 2017

மனிதனின் எதிர்பார்ப்பின் நிலை எத்தகையது

மனித இனம்..... சமூகத்திடமிருந்து பலவற்றை எதிர்பார்த்து கொண்டோ இருக்கும். அதில் முக்கியமானது உணர்ச்சி குவியல்!!! அன்பு, மகிழ்ச்சி , துக்கம் மற்றும் இன்னும் பல!!!!

ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்று வைத்து கொள்வோம். அதை மற்றொரு மனிதருடன் பகிரும் போது, அந்த நபரும்....அதே அளவிற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். எவ்வளவு அபத்தனமாக புரிதல்!!!!

நமக்கு உள களிப்பை ஏற்படுத்தும் காரியம் மற்றவருக்கும் களிப்பை ஏற்படுத்த வேண்டும்என்று எந்த அவசியமில்லை ?!??!

ஒவ்வொரு மனிதனுக்கும் மன களிப்பை தரும் விஷயங்கள் வேறுபாடானவை., காலம் ,சூழ்நிலை, வயது என்று பல்வேறு மாறுபாடுகளை உடையது.

ஒருவருக்கு பணம் சாம்பதிப்பது மகிழ்ச்சி என்றால், மற்றொருவருக்கு பணத்தை மீது வெறுப்பு இருக்கலாம். சிலருக்கு காதல் மீது வெறுப்பு

சிலருக்கு புகழ்ச்சி மீது வெறுப்பு!!! இப்படியாக சந்தோஷம் மற்றும் வெறுப்பு தரும் நிகழ்வுகள் வேறுபாடானவை!!

இருவருக்கு ஒரு மாதிரியான வேலை கிடைக்கிறது என்று வைத்து கொள்வோம். அதை ஒருவர் மிக்க மகிழ்ச்சியாக எடுத்து கொள்வார். மற்றொருவர்.... .அதே செய்தியை குறைந்த/மிதமாக மகிழ்ச்சியாக எடுத்து கொள்வார். இவையெல்லாம் மனித வாழ்க்கையில் மிக சாதாரண நிகழ்வுகளே!!!!

--------------------------------------------------------------------
இவையெல்லாம் தாண்டி, மற்றொருவரின் உணர்ச்சியை உள்வாங்கி கொண்டு, அதே உணர்ச்சியை குறைந்தபட்சமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதும் நாகரீகமாக புரிதல்!!! அதையும் மறந்து விட கூடாது!!!!

மனித மனங்கள் மிக விசத்திரமானவை.... முகம் பார்க்கும் கண்ணாடியாக... மற்றவரை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்!!!

விசத்திரங்களே மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துகின்றன என்பதும் நிகழ்கால நிழமே!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Saturday, April 22, 2017

புத்தகம் வாங்கி குவிப்பது அவசியமா???

நாளைய தினம், உலக புத்தக தினம்……. புத்தக தினத்தை சிறப்பாக கொண்டாட, பெரும்பாலான பதிப்பகங்கள், சுமார் 20 முதல் 50 சதவீதம் வரையிலான கழிவினை அறிவித்துள்ளது. அதில் நானும் விகடன் மற்றும் எதிர் வெளியீட்டிலிருந்து பல புத்தகங்களை வாங்கினேன்.

இந்த புத்தகம் வாங்கும் மனநிலை என்பது அட்சய திருதியையில், நகை வாங்குவது போல் தான் தோன்றுகிறது. சில புத்தகங்கள் மட்டுமே, படிக்க முடிகிறது. மற்றவையெல்லாம் reference புத்தகம் போல மட்டுமே இருக்கிறது.

எப்போதும் போல், புத்தகம் படிக்கிறவன் அனைவரும்புத்திசாலி என்பது போன்ற கருத்தாக்கம் சமூகத்தில் நிலவுகிறது. அதில் 100 சதவீதம் பொய் இல்லையென்றாலும், 100 சதவீதமும் உண்மையும் அல்ல என்பதே என்னுடைய நிலைப்பாடு. ஆண்டு தோறும் பல கோடி புத்தகங்கள் விற்பனையாகி கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அது சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் பெரிதாக ஒன்றுமில்லை என்றே எண்ணுகிறேன்.

அதற்கான காரணமும் இல்லாமல் இல்லை. தமிழ் நூல்களில் பெரும்பாலானவை புனைவு இலக்கியங்களே….. அதனை தாண்டி கருத்து செறிவு தாண்டிய புத்தகங்கள் என்பவை மிக சொற்பமே!!! அப்படிப்பட்ட சமூகத்தில், புத்தகம் ஏற்படுத்திய சமூக தாக்கமும் குறைவானதே!!!!

அறிவை பெறக்கூடிய பல வழிமுறைகளில் ஒன்று புத்தகம். அதனை தாண்டி, சம காலத்தில் அறிவை பெறக்கூடிய சில வழிகளும் உள்ளன. Observation- ஒரு சம்பவத்தை பார்த்து…. அதிலிருந்து பல தகவலை/அறிவை பெறலாம். Inference- ஒரு சம்பவத்தை மற்றொன்றோடு தொடர்பு படுத்தி, அதிலிருந்தும் அறிவை பெறலாம். மேற்கண்ட இரண்டும்….. படிப்பறிவு இல்லாமலே அறிவை பெற தக்க வழிகள். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே, படிக்காதவர்கள் கூட நல்ல வெற்றியாளர்களாக சமூகத்தில் திகழலாம். அக்பரும், அசோகரும் இதற்கு சிறந்த எடுத்துகாட்டுகள். அதே சமயத்தில் மெத்த படித்த முகமது பின் துக்ளக்கின் ஆட்சி முறை பற்றி நாடே அறியும்.

Observation inference ஆகிய இரு வழிமுறைகளை புரிந்து கொள்ளாமல், document(புத்தகம்) மட்டுமே நம்பி, எவ்வித மாற்றத்தை ஏற்படுத்த இயலுமா???

அப்புறம்நீங்களும் புத்தகம் வாங்க மறந்துடாதீங்க!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Thursday, April 20, 2017

முகநூலும் பிரச்சனைகளின் உண்மையான புரிதலும்

தினந்தோறும் நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு முகநூல் அளிக்கும் விமர்சனங்களும், அறிவுரைகளும் சுவராசியமானவை. அப்படியான 100 பதிவுகளில் 5 மட்டும் உபயோகமாக இருக்கும். மற்றவை அனைத்தும் குப்பைத்தொட்டியில் இடப்பட வேண்டியவை (என்னுடைய பதிவையும் சேர்த்து தான்). அதற்கு மிகமுக்கியமான மூன்று காரணங்களை குறிப்பிடலாம்.

1. ஒரு பிரச்சனை குறித்து விவாதிக்கும் போது பல்துறை சார்ந்த அறிவு தேவை. அதாவது அரசியலமைப்பு, பொருளாதாரம், வரலாறு, பூகோள அறிவு, அறிவியல், சமூக நிதி, அரசின் நிர்வாக நடைமுறைகள், பொதுமக்களின் உளவியல் என பட்டியல் நீண்டு கொண்டோ செல்லும். இதில் அனைத்து துறையை பற்றி 100 சதவீதம் புரிந்து கொள்ள முடியாது என்றால், குறைந்தபட்ச அடிப்படை புரிதல் தேவை. சமூக நீதியை மட்டுமே வைத்து, ஒரு பிரச்சனையை புரிந்து கொண்டீர்கள் என்றால், பொருளாதார வளர்ச்சி என்பது கானல் நீராகி விடும்.

2. நம் அனைவரும் பிறக்கும் போது பல்வேறு அடையாளத்தோடு பிறக்கிறோம். அவையாவன பாலினம், சாதி, இனம், மதம், மொழி மற்றும் வர்க்க நிலை. இத்தகைய அடையாளங்கள், மனதில் ஒரு default புரிதலை ஏற்படுத்தி இருக்கும். இந்த புரிதலை விட்டு வெளியே வந்து, திறந்த மனநிலையோடு விவாதம் தேவை. சாதியை முற்றிலும் புறக்கணித்தாலும் தவறு, முழுவதும் பின்பற்றினாலும் தவறு. இரண்டுமற்ற மனநிலை வேண்டும்.

3. உலக முழுவதும், பல்வேறு சிந்தாத்தங்கள் பின்பற்ற படுகிறது. அவை வலது சாரிசம், இடது சாரி சிந்தனை, அம்பேத்காரிசம், தலித்தியம், பெரியாரிஸ்ம், கம்யூனிசம் மற்றும் திராவிடசம். இவையெல்லாம் பிறப்பால் முன்னிறுத்த படுவதில்லையென்றாலும், சூழ்நிலையால் நம்முள் புகுந்து விடுகின்றனர். இவையெல்லாம் நல்ல சிந்தாந்த கூறுகள் என்பதில் ஐயமில்லை. அதே சமயத்தில் ஒன்றை பிடித்து தொங்குவதினால் மட்டும் , பிரச்சனைக்கு முடிவு இல்லை. மேற்கண்டவை சித்தாத்தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை சொல்லியிருக்குமானால், இத்தனை சிந்தனை தளங்களுக்கு அவசியமே இருக்காது. இதிலும் திறந்த நிலை புரிதல் வேண்டும்.

-------------------------------------------------------------------
மேற்கண்ட புரிதல் இல்லாமல், எழுதப்படும் அனைத்தும் பதிவுகளும், பிரச்சனைகளுக்கும் தீர்வை நிச்சயமாக தராது. மாறாக.... ஒரு பிரச்சனையை புரிந்து கொள்ளும் சிறு முயற்சியே!!! அல்லது தன்னுடைய எழுத்தாற்றலை வளர்ந்து கொள்ளும் முயற்சியே!!! அல்லது நானும் முகநூல் போராளி என்று பிம்பத்தை உண்டாக்குமே முயற்சியே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Thursday, April 13, 2017

உயர்பண மதிப்பு இழப்பும் மனநிலை மாற்றமும்

பல மாதங்களுக்கு பிறகு, ATM ல் பணதட்டுபாடு இருப்பதாக முகநூல் ஆர்பாரித்து கொண்டிருந்தது. மற்ற இடங்களினை போல், வேதாராண்யமும்... இதற்கு தப்பவில்லை.

நேற்றிரவு வீடு திரும்புகையில், ஒரு தனியார் வங்கி ATM ல் பணம் இருப்பதை கண்டேன். வண்டியை நிறுத்தி விட்டு, வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால், சுமார் 7-8 பேர் நின்றார்கள். எந்தவித பதற்றமில்லாமல், 10 நிமிடத்தில் பணம் எடுத்து கொண்டு, இல்லம் நோக்கி பயணமானேன். .

நவம்பர் மாதத்தில், 2000 ரூபாயிற்காகவும், 4000 ரூபாயிற்காகவும் ஒரு மணி நேரம் நின்றது மனதில் வந்து சென்றது. முன்பெல்லாம் 2-3 பேர் நின்றால் கூட, மனம் பொறுமை இழந்து புலம்பும். ஆனால் பண மதிப்பிழப்பு கொள்கையினால், ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகவே, எடிஎம் வாசலில் நிற்க பழகி விட்டோம். ஆதலால், நம்மை அறியமாலேநமக்குள் பொறுமை குணம் குடியேறி விட்டதோ!?!? என்று தோன்றியது.

ரன்னிங் ரேஸ்போல் ஒடி கொண்டிருக்கும் வாழ்க்கையில், தீடீரென பிரேக் போட்டது போல், இத்தகைய நிகழ்வு நடந்தது.. ” என்ன செய்வது என்று அறியாமல், ஒரு நிமிடம் மானுட இனம் திகைத்து நின்றது உண்மைஎன்றால் மிகையாது. பணத்தை தண்ணீர் போல் வாரி இரைத்து கொண்டிருந்திருந்த மனிதனுக்கு 100 ரூபாயின் மதிப்பு கூட தெரிய ஆரம்பித்தது.

உயர் பண மதிப்பு இழப்பு கொள்கையினால், பொதுமக்கள் பட்ட கஷ்டங்களையெல்லாம் விடுத்து, மேற்கண்ட இரு உண்மைகளையும் மனித மனம் அறிய வேண்டிய அவசியம் என நினைக்கிறேன்.

போட்டி உலக சூழலில்…. பொறுமையும், பணத்தின் மதிப்பை உணர்தலும் காலத்தின் கட்டாயம். பெரிய சங்கடமாக இருந்தாலும், அதில் உள்ள சிறு நன்மை இது!!! சில நேரங்களில் கறை கூட நல்லது தான்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Wednesday, April 12, 2017

திருமணங்களும் அழகு ஒப்பனைகளும்

திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு போகும் போது..... மணமகன் நமக்கு தெரிந்தவர் என்றால் பிரச்சனையில்லை. ஆனால் மணமகள் தான் தெரிந்தவர் என்றால்....”நாம் சரியான நிகழ்வுத்தான் வந்திருக்கிறம???” என்று மனம் குழப்படைந்து விடுகிறது.

மணமகளுக்கு மேக்கப் என்ற பெயரில்.... எதை எதையோ பூசி, அவருடைய உண்மையான முகத்தோற்றத்தை மறைத்து, வேறுவகையான முக அமைப்பாக மாற்றி விடுகின்றனர்.

சமீபத்தில் சென்ற இரு திருமண விழாக்களில், இவ்வகையான குழப்பத்தில் அகப்பட்டு கொண்டேன். ” நாம் சரியான இடத்தில் தான் வந்திருக்கிறமா??? “ என்ற குழப்பம் கூட தொற்றி கொண்டது. மேடை ஏறிய போது தான்,.... அக்குழப்பம் தீர்ந்தது.

இவ்வகையான அதீத ஒப்பனை ஏனோ!?!? புரியவில்லை.

இச்சமூகம், ” பெண் அழகானவள்என்ற கட்டமைப்போடு பன்னெடும் காலமாக கடந்து வந்து கொண்டிருக்கிறது. அறிவார்ந்த/பகுத்தறிவான பெண்ணாக வலம் வந்தாலும், ஒப்பனை செய்வதில் அதீத ஈடுபாடு கொள்வது ஆச்சரியமாகவே உள்ளது.

பெரும் வணிக உலகம், இவ்வகையான ஒப்பனையை ..... தொடர்ந்து பின்பற்றுவதையே விரும்புகிறது. அந்த வணிக நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார். ” பெண்ணாவள் அழகு பதுமைஎன்ற பிம்பத்திலிருந்து வெளிவருவது எப்போது????

---------------------------------------------------------------------------

இதையெல்லாம் தாண்டி... ஆண் வர்க்கமும் ஒப்பனையை விரும்ப ஆரம்பித்திருக்கிறார். இது தொடக்கமாகவே இருந்தாலும், ஒப்பனை சார்ந்த நுகர்வு வணிகத்திலிருந்து ஆண்/பெண் என இருபாலரும் வெளிவருவது நல்லது!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்