Tuesday, April 11, 2017

எண்ணத்திற்கும் செயலுக்குமான வேறுபாடு

கிளினிக்கில் இருந்து வீட்டிற்கு செல்ல, பைக்கை எடுத்து கொண்டிருந்தேன். முகமறியான நண்பர் ஒருவர் வந்து, “ இங்க வேதாரண்யத்துல ஜிம் எங்க இருக்கு!?!? " என்றார்.

சற்று யோசித்து விட்டு.... “ அப்படியே ரைட்ல திரும்பி, அப்பறம் லெப்டுல திரும்பி.... கொஞ்சம் தூரம் நடந்தா, அங்க ஒரு பெட்ரோல் பங்க் வரும், அதை தாண்டி, லெப்டு சைடுல.... ஒரு ஜிம் இருக்குஎன்றேன்.

ஒகே... “ என்றார்.

சரியென்று பைக்கை ஸ்டார்க் பண்ணினேன்..அதே நண்பர் மறுபடியும் வந்து.... “ என்னை, அந்த ஜிம்ல ட்ராப் பண்ணிடுறீங்களா!!! ” என்றார்.

இல்லை.. நான் வேற ரூட்ல போறேன்... “ என்றேன்.

இந்த தருணத்தில், மிக முக்கியமான கேள்வியொன்று எழும்பியது. நான் அடையாளம் காட்டிய ஜிம் என்பது சுமார் 200 மீட்டர் தூரத்தில் தான் இருக்கும். ”அந்த இடத்தில் நடந்து செல்வதற்கு கஷ்டமாக இருக்கிறது என்பதற்காக..... பைக்கில் அழைத்து செல்ல கேட்டாரா???? ” என்பது தான் கேள்வி.

அந்த சிறிய தூரம் நடந்து செல்வதென்பதே, மிதமான உடற்பயிற்சியே!!! அதை விடுத்து, அந்த தூரத்தையும் பைக்கில் செல்லலாம் என்ற புரிதல் நகைமுரணாகவே தோன்றுகிறது.

இது மாதிரி சம்பவம், அரசு மருத்துவமனையிலும் நடந்தது. அதாவது... சைக்கிள் பயிற்சி(cycling) மேற்கொள்வதற்காக, ஒரு பெண்மணி ஸ்கூட்டியில் வந்தார். "ஏம்மா நடந்து வந்த என்ன??? “ என்றேன். இதிலும்... அவர் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் 500 மீட்டர் தூரம் தான் இருக்கும். அதற்கு பிறகு, அவர் மருத்துவமனை பக்கம் தலையெடுத்து படுக்கவில்லை என்பது வேறு கதை!!!

மேற்கண்ட இரு நிகழ்வுகளும்... நம்முடைய செயலுக்கும் எண்ணத்திற்மான மிகப்பெரிய இடைவெளியையே வெளிக்காட்டுகிறது. இவையெல்லாம் சிறிய உதாரணங்களே!!!

முன்பெல்லாம் எண்ணம், சொல் மற்றும் செயலுக்கான வித்தியாசத்திற்கு பெரிதாக இருந்ததில்லை. ஆனால் கால ஒட்டத்தில், இவற்றிற்கு இடையேயான இடைவெளி அதிகரிந்துள்ளது.

வேகமாக உலக சூழ்நிலையில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய.... தெளிவான புரிதலும், நடைமுறைப்படுத்தலும் இல்லாதே காரணம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment