Monday, April 3, 2017

எண்ணம் சொல் செயல் இடைவெளி

நேற்று.... பணி நிறைவு நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். மருத்துவ நண்பர், ஒருவரோடு பேசும் வாய்ப்பு கிட்டியது.

பணி காலத்தில் செய்த நல்ல காரியங்களை பாராட்டும் விதமாக, நண்பர்கள் அனைவரும் சால்வைகள் போர்த்தி பாராட்டினார்கள். இதனை பார்த்து கொண்டிருந்த மருத்துவ நண்பர், “ இந்த சால்வையை வைத்து என்ன செய்வது?? “ என்றார்.

,” அதனால தான், நான் புக் வாங்கிட்டு வந்தேன்என்றேன்

சூப்பர்...” என்றார்.

இங்க மட்டுமல்ல..... மரண வீடுகளிலும் சுமார் 200 மாலைகளாவது அணிவிக்கிறார்கள். அதனால் என்ன பயன்??” என்று... அவரே தொடர்ந்தார்.

இவை அனைத்தும் கெளரவத்தின் அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது. பணம் இழப்பை பெரிது படுத்த வேண்டியதில்லை.... “ என்றேன்.

அதுவும் ஒருவகையில கரெட் தான்...”

இது மட்டுமில்லாமல், திருமணம், பிறந்தநாள் மற்றும் அரசியல் விழாக்களில் வைக்கப்படும் கட் அவுட்கள், திருமணங்களில் பரிமாறப்படும் அதிகப்படியான உணவுகள்(பாதிக்கு மேல் குப்பைக்கே செல்லும்), குழந்தை பிறப்பு மற்றும் முதியோரின் உடல்நலக்கேடு ஆகியவற்றின் போது வாங்கி சொல்லப்படும் பிஸ்கட், ஹார்லிக்ஸ் (இதுவும் நிச்சயமாக நோயாளிக்கு பயன்படாது ) போன்றவை என பட்டியல் நீளும்என்று என் மனதிலே நினைத்து கொண்டேன்.

(சிறிது நேரத்திற்கு பிறகு)

சரி... வாங்க சார்... நாமும் மேடைக்கு போவோம்என்றார்..

சரிஎன்றேன்.

சட்டென்று, பையில் இருந்த சால்வையை எடுத்து கொண்டு மேடைக்கு நோக்கி செல்ல ஆயத்தமானார்.

எனக்கு, அப்படியே பக்கென்று ஆகி விட்டது.

அப்ப இவ்வளவு நேரம் பேசுனதெல்லாம் வேஸ்டா!?? “ நினைத்தவாறே பின் தொடர்ந்தேன்..

--------------------------------------------------------------------------------

நல்ல வேளையாக, ” புக் மட்டும் என்ன படிக்கவா போறாங்க?? சும்மா அலமாரி தூங்கி கிட்டு இருக்க தானே போகுது...” என்ற எதிர் கேள்வி கேட்கவில்லை என்பதால் சற்றே மன ஆறுதல்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment