திருமணம்
மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு போகும் போது..... மணமகன்
நமக்கு தெரிந்தவர் என்றால் பிரச்சனையில்லை. ஆனால்
மணமகள் தான் தெரிந்தவர் என்றால்....”நாம் சரியான நிகழ்வுத்தான்
வந்திருக்கிறம???” என்று மனம் குழப்படைந்து
விடுகிறது.
மணமகளுக்கு
மேக்கப் என்ற பெயரில்.... எதை
எதையோ பூசி, அவருடைய உண்மையான
முகத்தோற்றத்தை மறைத்து, வேறுவகையான முக அமைப்பாக மாற்றி
விடுகின்றனர்.
சமீபத்தில்
சென்ற இரு திருமண விழாக்களில்,
இவ்வகையான குழப்பத்தில் அகப்பட்டு கொண்டேன். ” நாம் சரியான இடத்தில்
தான் வந்திருக்கிறமா??? “ என்ற குழப்பம் கூட
தொற்றி கொண்டது. மேடை ஏறிய போது
தான்,.... அக்குழப்பம் தீர்ந்தது.
இவ்வகையான
அதீத ஒப்பனை ஏனோ!?!? புரியவில்லை.
இச்சமூகம்,
” பெண் அழகானவள் ” என்ற கட்டமைப்போடு பன்னெடும்
காலமாக கடந்து வந்து கொண்டிருக்கிறது.
அறிவார்ந்த/பகுத்தறிவான பெண்ணாக வலம் வந்தாலும்,
ஒப்பனை செய்வதில் அதீத ஈடுபாடு கொள்வது
ஆச்சரியமாகவே உள்ளது.
பெரும்
வணிக உலகம், இவ்வகையான ஒப்பனையை
..... தொடர்ந்து பின்பற்றுவதையே விரும்புகிறது. அந்த வணிக நோக்கத்தை
புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார். ” பெண்ணாவள் அழகு பதுமை” என்ற
பிம்பத்திலிருந்து வெளிவருவது எப்போது????
---------------------------------------------------------------------------
இதையெல்லாம்
தாண்டி... ஆண் வர்க்கமும் ஒப்பனையை
விரும்ப ஆரம்பித்திருக்கிறார். இது தொடக்கமாகவே இருந்தாலும்,
ஒப்பனை சார்ந்த நுகர்வு வணிகத்திலிருந்து
ஆண்/பெண் என இருபாலரும்
வெளிவருவது நல்லது!!!!
உங்களில் ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment