தினந்தோறும்
நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு முகநூல்
அளிக்கும் விமர்சனங்களும், அறிவுரைகளும் சுவராசியமானவை. அப்படியான 100 பதிவுகளில் 5 மட்டும் உபயோகமாக இருக்கும்.
மற்றவை அனைத்தும் குப்பைத்தொட்டியில் இடப்பட வேண்டியவை (என்னுடைய
பதிவையும் சேர்த்து தான்). அதற்கு மிகமுக்கியமான
மூன்று காரணங்களை குறிப்பிடலாம்.
1. ஒரு
பிரச்சனை குறித்து விவாதிக்கும் போது பல்துறை சார்ந்த
அறிவு தேவை. அதாவது அரசியலமைப்பு,
பொருளாதாரம், வரலாறு, பூகோள அறிவு,
அறிவியல், சமூக நிதி, அரசின்
நிர்வாக நடைமுறைகள், பொதுமக்களின் உளவியல் என பட்டியல்
நீண்டு கொண்டோ செல்லும். இதில்
அனைத்து துறையை பற்றி 100 சதவீதம்
புரிந்து கொள்ள முடியாது என்றால்,
குறைந்தபட்ச அடிப்படை புரிதல் தேவை. சமூக
நீதியை மட்டுமே வைத்து, ஒரு
பிரச்சனையை புரிந்து கொண்டீர்கள் என்றால், பொருளாதார வளர்ச்சி என்பது கானல் நீராகி
விடும்.
2. நம்
அனைவரும் பிறக்கும் போது பல்வேறு அடையாளத்தோடு
பிறக்கிறோம். அவையாவன பாலினம், சாதி,
இனம், மதம், மொழி மற்றும்
வர்க்க நிலை. இத்தகைய அடையாளங்கள்,
மனதில் ஒரு default புரிதலை ஏற்படுத்தி இருக்கும்.
இந்த புரிதலை விட்டு வெளியே
வந்து, திறந்த மனநிலையோடு விவாதம்
தேவை. சாதியை முற்றிலும் புறக்கணித்தாலும்
தவறு, முழுவதும் பின்பற்றினாலும் தவறு. இரண்டுமற்ற மனநிலை
வேண்டும்.
3. உலக
முழுவதும், பல்வேறு சிந்தாத்தங்கள் பின்பற்ற
படுகிறது. அவை வலது சாரிசம்,
இடது சாரி சிந்தனை, அம்பேத்காரிசம்,
தலித்தியம், பெரியாரிஸ்ம், கம்யூனிசம் மற்றும் திராவிடசம். இவையெல்லாம்
பிறப்பால் முன்னிறுத்த படுவதில்லையென்றாலும், சூழ்நிலையால் நம்முள் புகுந்து விடுகின்றனர்.
இவையெல்லாம் நல்ல சிந்தாந்த கூறுகள்
என்பதில் ஐயமில்லை. அதே சமயத்தில் ஒன்றை
பிடித்து தொங்குவதினால் மட்டும் , பிரச்சனைக்கு முடிவு இல்லை. மேற்கண்டவை
சித்தாத்தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை சொல்லியிருக்குமானால், இத்தனை சிந்தனை
தளங்களுக்கு அவசியமே இருக்காது. இதிலும்
திறந்த நிலை புரிதல் வேண்டும்.
-------------------------------------------------------------------
மேற்கண்ட
புரிதல் இல்லாமல், எழுதப்படும் அனைத்தும் பதிவுகளும், பிரச்சனைகளுக்கும் தீர்வை நிச்சயமாக தராது.
மாறாக.... ஒரு பிரச்சனையை புரிந்து
கொள்ளும் சிறு முயற்சியே!!! அல்லது
தன்னுடைய எழுத்தாற்றலை வளர்ந்து கொள்ளும் முயற்சியே!!! அல்லது நானும் முகநூல்
போராளி என்று பிம்பத்தை உண்டாக்குமே
முயற்சியே!!!
உங்களில் ஒருவன்
உங்களை
போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment